வபாத்தான முன்னாள் முஸ்லிம் எம்.பி.யை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு
மாதிவெலயில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ வாசஸ்த்தளங்களில் தங்கி இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 18 பேருக்கு நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அவர்கள் தங்களின் வாசஸ்தளங்களுக்கான, மின்சாரம், நீர் மற்றும் தொலைபேசி கட்டணங்களை செலுத்த தவரியமமைக்காக நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதன்படி, நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர்களான மஹிபால ஹேரத், ஷந்தன கத்ரி ஆராச்சி, பத்தேகம சமித்த தேரர், டி எம் பண்டாரநாயக, சஞ்சீவ கவிரத்ன, தினின பண்டார தென்னக்கோன், ஸ்ரீ அந்தரா ஹெந்தி, ராசா குகணேஸ்வரன், பி டி அபேரத்ன, சுரேஸ் சதாசிவம், மொஹமட் மஹரூப், மொஹெதீன் பாபா அப்துல் அசிஸ், உபாலி சமரவீர, ஜெஸ்டின் கலப்பதி, லக்கி ஜயவர்தன, மொஹமட் அப்துல்லா, தம்பி மொஹமட், ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை ஆகியோருக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரசாங்க சட்டத்தரணி சுமேதா ஜயவீர பண்டாரவினால் இது தொடர்பான 18 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், கங்கொடவில மாவட்ட நீதிமன்ற நீதிபதி நாமல் பண்டாரபலல்ல, முன்னிலையில் இது தொடர்பான வழக்கு நேற்று விசாரணை இடம்பெற்றது.
குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 2001ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் திகதி முதல் 2004ஆம் ஆண்டு வரையான கலப்பகுதியில் இந்த வாசஸ்தளங்களில் குடியிருந்த நிலையில், தலா 8 லட்சம் ரூபாய் வரையில் பல்வேறு பொது கட்டணங்கள் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக அவர்கள் எதிர்வரும் ஜுலை மாதம் 16ம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதேவேளை 'மொஹெதீன் பாபா அப்துல் அசிஸ்' தமது கட்சியை சேர்ந்தவரென முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஹசன் அலி ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் உறுதிப்படுத்தினார்.
.jpg)
வபாத்தாகி நிலுவைகளிலிருந்து இங்கு சட்டத்தைக் கடந்து விட்டாலும், அங்கு பதில் சொல்லத்தான் வேண்டும். எனவே அவருக்கு மறுமையில் ஈடேற்றம் கிடைக்க நாடி, அவரது பிள்ளைகளும், சார்ந்த மற்றவர்களும் அந்த நிலுவைகளை அடைத்தே தீர வேண்டும்.
ReplyDeletefrom 2004 until 2013 the department what they done?????? i mean they running job like Saving Saloon
ReplyDeleteBRO, NAZEEM YOUR CORRECT, HIS CHILDREN OR FAMILY MEMBERS IF REAL LOVE WITH HIM, THEY MUST PAY ANY DEBTS IN THIS DUNYA.
ReplyDelete