A/L வகுப்புக்கு தொழில்நுட்ப பாடம் - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அறிமுகப்டுத்துவார்
(எம்.எம்.ஏ.ஸமட்)
க.பொ.த. உயர்தரத்தில் தொழில்நுட்பப் பாடப்பிரிவை அறிமுகப்படுத்தும் தேசிய வைபவம் நாளை(20)ஆம் திகதி வியாழகிழமை காலை 10 மணிக்கு அலரி மாளிகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெறுமென கல்வி அமைச்சின் தொழில்நுட்பப் பிரிவின் உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.
க.பொ.த. உயாதர வகுப்புக்களில் கலை, வாத்தகம், விஞ்ஞானம் ஆகிய பிரிவுகளுடன் தொழில்நுட்பப் பிரிவும் இணைத்துக்கொள்ளப்படுகிறது. எதிர்காலச் சவால்களுக்கு மாணவர் சமூகம் முகம்கொடுத்து வெற்றிப்பாதையில் முன்னேறிச் செல்வதற்கான வாய்ப்பை வழங்கும்பொருட்டு, சமகாலத் தேவைகளைக் கருதி கல்வித் துறையிலும் பாடவிதானங்களிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தொழில்நுட்பப் பிரிவை உயர்தரத்தில் இணைணப்பதன் ஊடாக, மாணவர்களைத் தொழில் உலக்கும், தொழில்நுட் உலகுக்கும் அறிமுகம் செய்வதுடன் பொருட்கள், சாதனங்கள், கருவிகள், உற்பத்திச் செயன்முறை, பொருள் விநியோகம், முகாமைத்துவம் என்பவை குறித்து அறியச் செய்வதும் செய்முறை அனுபவத்தையும் வழங்க முடியும். இவற்றை இலக்காகக் தொழில்நுட்பப் பாடப்பிரிவு அறிமுகப்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
கல்வி அமைச்சு. உயர்கல்வி அமைச்சு மற்றும் இளைஞர் விவகார. திறன் விருத்தி அமைச்சு என்பன இணைந்து இப்பாடநெறியினை தெரிவு செய்யப்பட்டுள்ள தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகள் 200 இல் இவ்வாண்டில் அறிமுகப்படுத்தப்படுவதுடன் 2015ஆம் ஆண்டில் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் இப்பாடநெறிக்கும் முதன்முதலாகத் தோற்றவுள்ளனர்.
மகிந்த சிந்தனையின் மகிந்தோதய திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆய்வு கூடங்கள் உள்ள பாடசாலைகளிலேயே இப்பாடநெறி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
ஜனாதிபதியின் தலைமையில் நாளை(20) நடைபெறும் இத்தேசிய வைபவத்தில் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன, உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி திஸநாயக்க, இளைஞர் விவகார மற்றும் திறன் விருத்தி அமைச்சர் டலஸ் அலகப்பெரும மற்றும் உயர் அதிகாரிகள் உட்பட இரண்டாயிரம் மாணவர்களும் அதிபர்கள், ஆசிரியர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
.jpg)
Post a Comment