50 ஆவது விஷேட ஸனாபில் வகுப்பு - யூசுப் முப்தி சிறப்பு பேச்சாளர்
அஷ்ஷெய்க்எஸ்.எம்.ஸூபியான்(நளீமி)
ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் வாராந்தம் கொழும்புதலைமைக் காரியாலத்தில் நடத்தி வருகின்ற ஸனாபில் வகுப்புக்களின் 50 ஆவது வகுப்பு இன்று புதன்கிழமை நடத்தப்பட இருக்கின்றது.
ஸனாபில் வகுப்புகள் என்பது ஜம்இய்யாவின் தலைமையகத்தினால் கொழும்பு நகரில் வாழ்கின்ற முஸ்லிம் மாணவ,இளைஞர்களை மையப்படுத்தி அவர்களுக்கு வாராந்தம் மார்க்க விவகாரங்கள் குறித்த தெளிவுகளை வழங்குவதனை இலக்காகக் கொண்டுள்ளது.
இந்த வகுப்புகள் கொழும்பு நகரைச் சேர்ந்த மாணவ இளைஞர்கள், கொழும்பு நகரிற்கு தொழில் மற்றும் கல்வித் தேவைகள் நிமித்தம் வருகை தந்திருக்கும் மாணவ இளைஞர்களை ஜாஹிலிய்ய சூழலிருந்து பாதுகாத்து மார்க்க சூழலோடு இணைக்கின்ற நோக்கிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஸனாபில் வகுப்புக்கள் மாதத்தில் நான்கு வாரங்களும் நான்கு வகையான விடயங்களை உள்ளடக்கியதாகவும் நவீன சூழலுக்கேற்ப விளக்க உரைகளை வழங்குவதாகவும் முற்றிலும் இளைஞர்களை மையப்படுத்தியதாகவும் அமைந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.
அந்த வகையில் முதலாம் வாரம் அல்குர்ஆன் இளைஞர்களை மையப்படுத்தி கூறுகின்ற செய்திகளையும் அவற்றினூடாக இளைஞர்கள் பெற்றுக்கொள்ள முடியுமான படிப்பினைகளையும் தொகுத்து நவீன பாணியில் வழங்குகின்றது. இரண்டாம் வார வகுப்புக்கள் அல்-ஹதீஸ் மற்றும் அஸ்-ஸூன்னா என்பன இளைஞர்களுக்கு முன்வைக்கும் பாடங்கள் படிப்பினைகள் தொடர்பில் தெளிவுபடுத்துவதாக அமைகின்றது. மூன்றாம் வார வகுப்புக்கள் றஸூல் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுடைய ஸீறா தொடர்பாகவும் நிகழ்த்தப்படுகின்றது. இதில் ஸீறாவில் இருந்து இளைஞர்கள் பெற்றுக்கொள்ள வேண்டிய முன்மாதிரிகளை நவீன மனிதவள அபிவிருத்தி தொடர்பான எண்ணக்கருக்கள் றஸூல் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் வழிமுறைகளோடு எவ்வாறு ஒன்றித்துக் காணப்படுகின்றன என்பதை தெளிவுபடுத்துவதாக உள்ளது.
நான்காவது வாரம் பிக்ஹ் தொடர்பான விடயங்களை உள்ளடக்கியிருக்கும். அதில் குறிப்பாக நடைமுறை சார்ந்த விடயங்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். சமகால சூழ்நிலைகள், விவகாரங்கள் குறித்த தெளிவு என்பதே இதன் மூலம் நாடப்படுகின்றது.
இவை தவிர சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப உள்நாட்டு, வெளிநாட்டு விஷேட பிரமுகர்களினதும் மற்றும் அதிதிகளின் விரிவுரைகளும் இடம்பெற்று வருகின்றன.
மேற்கூறிய வகையில் ஸனாபில் வகுப்புக்கள் வாராந்தம் இடம்பெற்று வருகின்றன. இதுவரையில் 49 வகுப்புகள் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளன. அவற்றிற்கு வருகை தந்த அனைத்து மாணவ இளைஞர்களுக்கும், விரிவுரைகளை சிறப்பாக நடாத்தித்தந்த விரிவுரையாளர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதோடு, ஸனாபில் வகுப்புக்கள் ஆரம்பிக்கபட்டது முதல் சுமார் 40வகுப்புக்கள் வரையில் அவற்றை வெற்றிகரமாக ஏற்பாடுசெய்து தொடர்ந்தேர்ச்சியாக சிறப்பாக வழிநடாத்தி நெறிப்படுத்திய அஷ்ஷெய்க் தமீம் இக்பால்(நளீமி) அவர்களையும் நான் இந்த இடத்தில் நன்றியுடன் நினைவு கூறுகின்றேன். அவரைத் தொடர்ந்து இதனைப் பொறுப்பேற்று நடத்திக்கொண்டிருக்கின்ற சட்டக்கல்லூரி மாணவர்; சகோ றுடானி ஸாஹிர் அவர்களுக்கும் 50 வது விஷேட ஸனாபில் வகுப்பின் ஏற்பாட்டாளர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு, முப்ஃதி யூஸூப் ஹனிபா, வளவாளராக கலந்து கொள்ளவிருக்கும் எமது விஷேட ஸனாபில் வகுப்பிற்கு இன்று 19 ஆம் திகதி புதன்கிழமை பி.ப. 6.30 மணிக்கு தபாற் தலைமைக் காரியாலயக் கேட்போர் கூடத்திற்கு வருகை தருமாறு அனைத்து மாணவ இளைஞர்களையும் அன்போடு அழைக்கின்றேன்.
.jpg)
Post a Comment