சவூதி அரேபியாவில் ரமலான் ஏற்பாட்டில் ஆண்களும், பெண்களுமாக 8000 வேலையாட்கள்
புனித ரமலானின் ஏற்பாட்டிற்காக ஆண்களும் பெண்களுமாக 8000 க்கும் மேற்பட்ட வேலையாட்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள் என புனித இரு ஹரம் ஷரீப் மாநில விவகாரங்களின் தலைவர் அஷ் ஷெய்க் அப்துர்ரஹ்மான் அல்-சுதைஸ் தெரிவித்துள்ளார்.
இவ்வேளையாட்கள் எதிர்வரும் திங்கட்கிழமை ஜூன் 24 ஆம் திகதியிலிருந்து கணிசமான அளவு பாதயாத்திரிகர்களும் விருந்தாளிகளும் இவ்விரு புனித மசூதிகளிற்கு வருவதற்கு உதவியாயிருப்பர்.
வடக்கேயுள்ள அங்காடிச்சந்தை கட்டிடத்தொகுதியும் இவ்விஸ்தரிப்பு சேவையின் பொது உள்வாங்கப்படும்.கீழ் தள வேலை முற்றுப்பெறுவதுடன் முதலாம் இரண்டாம் தளங்களின் 20% ஆன வேலைகள் முற்றுப்பெறும் என அல்-சுதைஸ் கூறினார்.
இக்கட்டிடத்தொகுதியின் திட்டவரைபடம் உட்புற வெளிப்புற பகுதி மூலம் 540,000 பேரிற்கு போதுமானதாக உறுதிப்படுத்தப்படுவதுடன் மின்னணுவியல் சாதனங்களும் பில்போர்ட்ஸ்களும் (billboards) பொருத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.
இவ்வேலை முழு சூடு பிடித்துள்ளதுடன் பெரிய பள்ளியின் தோற்றமானது விசேட கட்டிட அமைப்பிற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
தற்காலிக மதாயிப்(mathaif) அல்லது பரிதி வட்ட பகுதி (மக்கள் தவாப் செய்யும் உட்பகுதி) ஒன்று விசேட தேவை உள்ளவர்களுக்கு அமைக்கப்பட்டுள்ளதுடன் இது 12*13 மீட்டர் நீள அகலமுள்ள பழைய தால்வாரத்துடன் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
கட்டிடத்தொகுதியில் தண்ணீர் பயனுடமைகளை விநியோகிப்பதற்காக எல்லாப்பக்கச்சுவர்களும் முற்றுப்பெறுவதுடன் 5384 தண்ணீர் சாதனங்களும் 4336 வுழு செய்யும் பகுதிகளும் 1872 குடி தண்ணீர் இயக்கிகளும் 250 மின் விசிறிகளும் 272 கூரை மின் விசிறிகளும் உள்ளடங்குகின்றன.

Post a Comment