Header Ads



3 பெற்றோர்கள் மூலம் குழந்தை பெற முயற்சி (வீடியோ)

கடுமையான நோய்களை தடுக்க 3 பெற்றோர்கள் மூலம் குழந்தை பெறும் முயற்சி நடைபெறுகிறது.

மனிதர்களின் ஒவ்வொரு செல்களிலும் 'மைட்டோ காண்ட்ரியாக்கள்' உள்ளன. இவை செல்கள் சக்தி பெற்று செயல்பட முக்கிய பங்கு வகிக்கின்றன. இருந்தபோதிலும் மரபணு கோளாறு காரணமாக சிலருக்கு உடல் பலகீனம், குருட்டு தன்மை, இருதய நோய், கல்லீரல் செயலிழப்பு, நீரிழிவு நோய், ஞாபக மறதி போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.

இதை மைட்டோ காண்ட்ரியாக்கள்தான் தாயிடம் இருந்து குழந்தைக்கு கடத்துகின்றன. எனவே, 3 பெற்றோர்கள் மூலம் குழந்தை பெறும் திட்டத்தை அமல்படுத்த இங்கிலாந்து அரசு திட்டமிட்டு அதற்கான முயற்சிலும் ஈடுபட்டுள்ளது.

3 பெற்றோர்கள் மூலம் குழந்தை பெறுவது செயற்கை முறையில் நடைமுறைப்படுத்தப்படும். அதன் மூலம் உருவாகும் கருவில் தாய், தந்தை மற்றும் கருமுட்டை அல்லது உயிரணு (விந்து) தானம் கொடுப்பவரின் மைட்டோ காண்ட்ரியாவும் இருக்கும். ஒரு தாயின் கரு முட்டையில் மைட்டோ காண்ட்ரியா டி.என்.ஏ. இல்லாவிட்டால் தானம் கொடுத்தவரின் உயிரணு அல்லது கரு முட்டையில் இருந்து அது பிரித்தெடுக்கப்படும்.

பின்னர் குழந்தையாக உருவாகும் கருமுட்டையுடன் சேர்க்கப்படும். அதன் மூலம் பிறக்கும் குழந்தையின் செல்களின் செயல்திறன் அதிகரித்து இருதய நோய், கண்பார்வை குறைவு, நீரிழிவு, இருதய நோய் போன்ற கடுமையான நோய்கள் தாக்காது. இந்த சோதனையை இங்கிலாந்தின் நியுகேஸ்டில் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த திட்டத்தை செயல்படுத்த இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு அந்நாட்டின் தலைமை மருத்துவ அதிகாரி டேம்காபி டேவில் ஒப்புதல் அளித்துள்ளார். 3 பெற்றோர் மூலம் குழந்தை பெறுவதற்கான விதிமுறைகள் இந்த ஆண்டு இறுதியில் அறிவிக்கப்பட உள்ளது. 




No comments

Powered by Blogger.