Header Ads



321 பயணிகளுடன் சென்ற சவூதி அரேபிய விமானத்தின் வாலில் எச்சரிக்கை..!

மும்பையில் இருந்து 321 பயணிகளுடன் சவுதி ஏர்லைன்ஸ் விமானம் நேற்று சவுதிக்கு புறப்பட்டு சென்றது. புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தின் வால் பகுதியில் சரக்கு வைக்கப்பட்டுள்ள இடத்தில் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தீ தடுப்பு கருவி எச்சரித்தது. 

உடனடியாக மும்பை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட விமானி, அவசரமாக தரையிறங்க அனுமதி கேட்டார். 

'எஸ்.வி.748' என்ற அந்த விமானத்திற்கு தரையிறங்க அனுமதி அளித்த அதிகாரிகள், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளை உஷார்படுத்தினர். 

மாலை 4.35 மணிக்கு தரையிறங்கிய அந்த விமானத்தில் இருந்த 321 பயணிகளையும் பத்திரமாக இறக்கிய பின்னர், தனிமையான இடத்தில் அந்த விமானம் முழுவதுமாக சோதிக்கப்பட்டது. 

இந்த சோதனையில் தீயோ, புகையோ ஏதும் கண்டறியப்படவில்லை.

No comments

Powered by Blogger.