300 பயணிகளுடன் சென்ற எகிப்து விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
எகிப்து தலைநகர் கெய்ரோவில் இருந்து 300 பயணிகளுடன் நியூயார்க் சென்ற விமானம் வெடிகுண்டு மிரட்டலால் அவசரமாக தரையிறங்கியது.
அந்த விமானத்தை தகர்க்கப் போவதாக எழுதப்பட்ட மிரட்டல் கடிதத்தை விமானத்தினுள் ஓர் பயணி கண்டெடுத்தார். உடனடியாக இந்த தகவல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, எகிப்து விமானத்தின் பாதுகாப்பிற்காக விமானப்படை விமானங்கள் விரைந்து வந்தன. கிளாஸ்கோ நகரில் உள்ள பிரஸ்ட்விக் விமான நிலையத்தில் எகிப்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
பயணிகளை பாதுகாப்பாக வெளியேற்றிவிட்டு வெடி குண்டு நிபுணர்கள் விமானத்தை அங்குலம் அங்குலமாக சோதனையிட்டு வருகின்றனர்.
அந்த விமானத்தில் பயணம் செய்தவர்கள் பற்றிய தகவல்களையும் போலீசார் ஆராய்கின்றனர்.

Post a Comment