3 இலட்சம் லஞ்சம் பெற்ற நீதிபதி, 3 கோடி ரூபாய் சரிர பிணையில் விடுதலை
3 லட்சம் ரூபா லஞ்சம் பெற்றார் என்று குற்றசாட்டில் கைது செய்யப்பட்ட ஹோமாகம மாவட்ட நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சுனில் ஆபேசிங்கவிற்கு 3 கோடி ரூபாய் சரிர பிணை வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதிமன்றம் இந்த பிணையனுமதியை வழங்கியது. கடந்த 29ஆம் திகதி இவர் மனுதாரர் ஒருவரிடம் 3 லட்சம் ரூபா லச்சமாக பெற்றார் என்று குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
.jpg)
இவனை நீதிபதி என்று சொல்லவேண்டாம் இவன் திருடன். நீதியைக்காக்கவேண்டும் என்று சத்தியம் செய்து உலகிலேயே அதி கண்ணியமானதும் யார் குற்றம்செய்தாலும் தீர்ப்பு வழங்கும் நீதிபதியே இப்படி லஞ்சம் வாங்கவேண்டுமென்றால் சீ அசிங்கம் அத்துடன் எம்மால் சொல்லாமலும் இருக்கமுடியவில்லை தற்போது அதிகமாக குற்றம் செய்பவர்கள் பெளத்தர்களாகத்தான் இருக்கின்றார்கள் இதை சுட்டிக்காட்டுவதை யார் என்னை தவறாக நினைத்தாலும் பறவாயில்லை நாட்டில் நடக்கும் உண்மையைச்சொல்கின்றேன். காரணம் ஒரு குற்றமும் செய்யாமலே முஸ்லிம்கள் மீது அபாண்டமாக குற்றப்பழி சுமத்தும் மதவெறிபிடித்த சம்பிக்க, ஞானசார, ஜாதிக ஹெல உறுமய, சிங்கல ராவய, போன்ற வெறியர்களுக்குத்தான் இச்செய்தியை சொல்லுகின்றேன் முஸ்லிம் பிரதேசங்களில் இதுபோன்ற குற்றச்செயல்கள் தற்போது நடக்காமல் இல்லை இருப்பினும் பிற பிரதேசங்களை ஒப்பிடும் போது பெளத்தர்களே தற்போது சரித்திரம்காணாத குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றார்கள். இதற்கு புதிதாக தோன்றியுள்ள இயக்கங்களும் அரசாங்கமும் இவர்களைக் கண்டும் காணாதிருப்பதுமே காரணம்...
ReplyDeleteRenees MHM,
ReplyDeleteCool down!
பொருளொன்றைக் களவு கொடுத்தவன் பலரையும் வீணாகச் சந்தேகப்பட்டு சில சமயங்களிலே அந்தக்களவைப் புரிந்தவனிலும் அதிக பாவம் புரிந்தவனாகி விடுவதுண்டு. அதுபோலத்தான் நீதிபதியின் விடயத்திலே உங்களது கருத்துகளும் உள்ளது.
சில சிங்கள பௌத்தர்களால் நாம் பாதிக்கப்பட்டிந்தாலும் மானசீகமாக அவற்றை ஆதரிக்காத எத்தனையோ சிங்கள பௌத்தர்கள் இன்னும் நம்மீது அனுதாபமாக இருந்து வருகின்றனர்.
தனியாக முஸ்லீம்கள் மட்டுமாக நின்று அந்த துவேச சிந்தனையுள்ளவர்களை தனிமைப்படுத்திவிட முடியாது. அவர்களிலும் சரியான வழியிலே சிந்திப்பவர்களை அடையாளம் கண்டு பொறுமையாலும் பெருந்தன்மையாலும் நமது பக்கம் இழுத்து தீயவர்களை ஓரங்கட்டவேண்டும். அதுதான் பல்லின சமூகம் வாழும் நாட்டிற்கு பொருத்தமானதும் பாதுகாப்பானதுமான வழிமுறை.
நீதிபதியின் தவறையும் துரோகத்தையும் நமது நாட்டின் ஒரு பொறுப்புள்ள பிரஜையாக எவ்வளவு வேண்டுமானாலும் கண்டியுங்கள். ஆனால், உணர்ச்சி வசப்பட்டு அவரை ஒரு சிங்கள பௌத்தராக அடையாளப்படுத்தி சாடுவதன் மூலம் உங்கள் கோபம் வேண்டுமானால் தீரலாமேயொழிய வேறு நல்ல பலன்கள் எதுவும் கிட்டப்போவதில்லை.
தவிர, அவர்களுக்கும் நமக்கும் வித்தியாசம் வேண்டாமா?
jessly
ReplyDeleteஎனது கருத்தை மீண்டும் ஒருமுறைக்கு இருமுறை வாசித்துப்பாருங்கள் குறிப்பாக நான் யாருக்கு இச்செய்தியை சொல்லுகின்றேன் என்பதை மிகவும் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன். அத்துடன் கடந்த நாட்களில் நான் பதிவிட்ட கருத்துக்களில்கூட நீங்கள் சுட்டிக்காட்டிய விடயங்களில் அதுபோன்ற தவறுகளை விட்டதில்லை, ஒருவருடைய மனதை வேதனைப்படுத்தக்கூடாது என்பதில் நான் மிகவும் துல்லியளவு கவனமெடுத்தவண்ணமே எனது நகர்வுகள் இருக்கின்றன என்பதில் எனக்கு பெருமளவு திருப்தியுள்ளது. இருப்பினும் உமது அறிவுரை நல்லவைகளையே சுட்டிக்காட்டுகின்றது என்ற வகையில் ஏற்றுக்கொள்ளத்தகுந்ததே என்பதில் எனக்கு வேற்றுக்கருத்துகள் ஏதும் கிடையாது நன்றி.
ஜேஸ்லியா ஜெஸ்லி..
ReplyDeleteதங்களின் கருத்துக்கள் பலவற்றை நான் வாசித்துப் பார்த்தேன் உண்மையாகவே ஆழமாகச் சிந்தித்து நல்ல பல. கருத்துக்களை மற்றவர்களுக்கு கூறுகின்றீர்கள்.பாராட்டுக்கள்