பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் கைக்கடிகாரத்தின் மதிப்பு 27 கோடி..?
பாகிஸ்தான் பிரதமர், நவாஸ் ஷெரீப், 27 கோடி ரூபாய் மதிப்பிலான கைக்கடிகாரத்தை பயன்படுத்துவதாக, எதிர்க்கட்சியினர் குறை கூறியுள்ளனர்.
பாகிஸ்தானின், புதிய பார்லிமென்ட் கூட்டத்தொடரில், பிரதமர் நவாஸ் ஷெரீப் உரையாற்றினார். அப்போது, வறுமை ஒழிப்பு மற்றும் ஏழைகள் நலன் குறித்து அவர் பேசியதற்கு, எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் கூறியதாவது,
ஏழைகளின் நலன் பற்றி பேசம் பிரதமர், ஆடம்பரமான கைக்கடிகாரத்தை ஏன் பயன்படுத்த வேண்டும்? தேர்தல் முடியும் வரை எளிமையானவராக காட்சியளித்த ஷெரீப், தேர்தலில் வெற்றி பெற்று பதவிப் பிரமாணம் செய்யும் போதே, தன் சயரூபத்தை வெளிப்படுத்திவிட்டார். அவர் அணிந்திருக்கும், பல கோடி ரூபாய் மதிப்பிலான கைக்கடிகாரமே அதற்கு சாட்சி. பிரதமரும், அவரது கட்சி உறுப்பினர்களும், ஆடம்பர வாழ்க்கையை கைவிடும் வரை, ஏழைகளின் நிலை மாறாது. இவ்வாறு அவர் கூறினார். நவாஸ் ஷெரீப் பயன்படுத்தும் கைக்கடிகாரத்தின் விலை, 27 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

It's not by state money as Sri Lankan politicians do.it's by his own money.(he is a billion-er businessman).
ReplyDeleteHi
ReplyDeleteஅப்படிப்போடு (எதிர்க்கட்சி) அரிவாளை!