21 வயதில் 11 குழந்தைகளுக்கு தாயான பலஸ்த்தீன சகோதரி
(thinaharn) காசாவில் வாழும் 21 வயது பலஸ்தீனப் பெண் தனது 7 வருட திருமண வாழ்க்கையில் 11 குழந்தைகளுக்கு தாயாகி உள்ளார். இதில் ஒரே பிரசவத்தில் நான்கு மற்றும் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்துள்ள இவர் இரட்டை குழந்தைக்கும் தாயாவார்.
தனது ஒன்பது பெண் குழந்தைகள் மற்றும் இரு ஆண் குழந்தைகள் குறித்து மகிழ்ச்சியை தெரிவித்துள்ள தாய் இவர்களுக்கு உணவு வழங்க தனது கணவன் போதுமான வருவாயை ஈட்டவில்லை என குறிப்பிட்டுள்ளார். ‘அவர்களுக்கு போதுமான உணவு மற்றும் உடையை என்னால் வழங்க முடியவில்லை.... எனது வருவாய்க்கு அப்பால் அவர்களது நாளாந்த செலவு அதிகமாக உள்ளது’ என 25 வயது தந்தையான ராட் அல் பதாஷ், தொலைக்காட்சி போட்டியில் குறிப்பிட்டார்.
பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸிடம் இருந்தும் காசா பிரதமர் இஸ்மைல் ஹனியானிடம் இருந்து உதவிகள் கிடைத்த போதும் அது போதுமானதாக இல்லை என அரச ஊழியரான பதாஷ் குறிப்பிட்டார்.
‘அவர்களிடம் இருந்து எமக்கு கிடைக்கும் உதவிகள் குழந்தைகளின் நாளாந்த தேவைகளை ஒப்பிடும் போது போதுமானதாக இல்லை. பெரும்பாலான உதவிகள் குழந்தைகளின் மருந்து செலவுக்கே போகிறது’ என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த 7 ஆண்டுகளுக்குள்ளேயே இந்த 11 குழந்தைகளும் பிறந்துள்ளதாக பலஸ்தீன பத்திரிகை குறிப்பிடுகிறது. இதில் ஒரே பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகள், ஒரே பிரசவத்தில் நான்கு பெண் குழந்தைகள் மற்றும் இரட்டை ஆண் குழந்தைகளும் உள்ளடங்குகின்றனர்.
‘அவர்களுக்கு உணவு வழங்குவது, உடை அணிவிப்பது என நாளாந்தம் பிரச்சினையை சந்திக்கிறேன்’ என பெயர் குறிப்பிடாத அந்த தாய் தெரிவித்தார். பலஸ்தீனின் காசா பகுதி உலகின் அதிக பிறப்பு வீதம் கொண்ட பகுதிகளில் ஒன்றாக பதிவாகியுள்ளதோடு இதுவே உலகின் சனநெரிசல் கொண்ட பகுதிகளில் ஒன்றாகவும் பதிவாகியுள்ளது.
காசாவின் சனத்தொகை வீதம் 3.2 ஆகும். இது உலகின் 7 ஆவது அதிக சனத்தொகை வீதம் கொண்ட பகுதியாகும். வெறும் 365 சதுர கிலோ மீற்றர் கொண்ட காசாவில் சுமார் 1.7 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.

வல்ல அல்லாஹ் காரணமில்லாமல் எதையும் நிகழ்துவதில்லை. படைத்த அல்லாஹ் படியளப்பான். அவனிடம் கேளுங்கள். நாங்களும் உங்களுக்காக துஆ செய்கிறோம். யாஅல்லாஹ் இந்த குடும்பத்தின் வாழ்வாதாரத்துக்கு உதவி செய்வாயாக. ஆமீன்.
ReplyDeleteAnd do not kill your children for fear of poverty. We provide for them and for you. Indeed, their killing is ever a great sin.
ReplyDeleteAL-Quran [17:31]
நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் - அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும். Al-Quran [17:31]
ReplyDeleteமாஷா அல்லாஹ்...யா அல்லாஹ் இந்த குடும்பத்துக்கு உதவி செய்வாயஹா..ஆமீன்
ReplyDeleteஉண்மைதான் Meeraa,
ReplyDeleteயாருக்குத் தெரியும், உங்களைப்போன்ற ஒருவர் இதுகுறித்து அக்கறை கொண்டு உங்களிடமிருக்கும் செல்வத்தில் ஒருபகுதியுட்பட ஊரிலுள்ளவர்களிடமும் வசூல்செய்து அந்தக்குடும்பத்திற்கு உதவப்போகிறீர்கள் என்பதற்காகக்கூட இறைவன் அத்தனை குழந்தைகளையும் அவர்களுக்கு வழங்கியிருக்கக்கூடும்.
அப்படியானால் உடனடியாக இப்பொழுதே அந்த வேலைகளிலே இறங்குங்களேன்.
எல்லாம் வல்ல இறைவன் காரணமில்லாமல் எதையும் நிகழ்த்துவதில்லையல்லவா?