Header Ads



13வது அரசியல் அமைப்புத் திருத்தத்தை நீக்க முயற்சிப்பவர்களுக்கு ராஜிதவின் பதிலடி

13வது அரசியல் அமைப்புத் திருத்தத்தை நீக்குவதற்காக அரசாங்கத்தில் சிலர் கொண்டு வரும் யோசனையை நாடாளுமன்றத்தில் தோற்கடிக்க தான் உள்ளிட்ட குழுவொன்று தயாராக இருப்பதாகவும் இந்த அனைவரும் இணைந்து யோசனையை தோற்டித்து, நாட்டை வெற்றிப்பெற செய்ய தேவையான நடவடிக்கைகளை உரிய நேரத்தில் எடுக்க போவதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற 13வது அரசியல் அமைப்புத் திருத்தம் தொடர்பில் அண்மையில் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்ட யோசனை குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

13வது திருத்தச் சட்டத்தை நீக்க கொண்டு வரும் யோசனையை தோற்கடிப்பது என்பதன் அர்த்தம் நாட்டை வெற்றிப்பெற செய்வதாகும்.  அவ்வாறு செய்யாது போனால், அரசாங்கம் சர்வதேசத்திற்கு மத்தியில் அழிந்து போகும் எனவும் சிங்கள அடிப்படைவாதிகளுக்கு இது புரியவில்லை எனவும் தெரிவித்த அமைச்சர், தமிழ் மக்களுக்கு உரிமைகளை வென்றுக்கொடுக்கும் போராட்டத்தில் தமது சகாக்கள் உயிர் தியாகம் செய்துள்ள நிலையில், அதற்கான பதவியை விட்டு கொடுப்பது தனக்கு பெரிதல்ல எனவும் கூறியுள்ளார்.

13வது திருத்தச் சட்டத்தை நன்கு புரிந்து கொள்ளாது, அதனை சரியாக வாசித்து அறிந்து கொள்ளாதன் காரணமாக அதற்கு எதிராக செயற்படுகின்றனர்.  இந்த திருத்தச் சட்டத்தை வெற்றிப்பெற செய்ய எமது சகாக்கள் உயிர்களை தியாகம் செய்தனர். ஜே.வி.பி மூன்று முறை குண்டு தாக்குதல் நடத்தியது. புலிகள் ஒரு முறை தாக்குதல் நடத்தினர்.  இது குறித்து சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றால் அது பற்றி அரசியல் அமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. எனினும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி முடிந்து விட்டது.

1988 ஆம் ஆண்டு ஆறில் ஐந்து பெருபான்மை பலத்தில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. வாக்களிப்பவர்களை கொலை செய்ய போவதாக ஜே.வி.பியினர் அச்சுறுத்திய நேரத்தில் மக்கள் கட்சி மாத்திரமே மாகாண சபைக்காக வெளியில் வந்தது. அன்று மாகாண சபைகளுக்காக லட்சக்கணக்கான மக்கள் வாக்களித்தனர். அதுதான் சர்வஜன வாக்கெடுப்பு.  அன்றில் இருந்து கடந்த 25 ஆண்டுகளாக மக்கள் மாகாண சபைகளுக்காக வாக்களித்து வருகின்றனர்.  எதிர்ப்பதாக கூறியவர்கள் மாகாண சபைகளுக்கு சென்று தாமே ரிமோட் கெண்ரோல்கள் என தெரிவித்தனர். சிலர் மாகாண சபைகளுக்கு சென்று கொடுப்பதை எல்லாம் பெற்று கொண்டு விட்டு, வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுவதை எதிர்க்கின்றனர். தாம் எதிர்ப்பவர்களாக இருந்தால் எப்படி மாகாண சபையில் இருக்க முடியும். நான் என்றால் வாழ்நாள் முழுதும் அதில் இருக்க மாட்டேன் எனவும் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். gtn

1 comment:

Powered by Blogger.