புத்தளம் அரசாங்க செயலகத்தில் வடக்கு முஸ்லிம்கள் குறித்து கலந்துரையாடல்
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவினர் இன்று முற்பகல் 11.30 மணியளவில் புத்தளம் அரசாங்க அதிபர் கிங்ஸ்லி பெர்ணான்டோவினை புத்தளம் அரசாங்க செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
இச்சந்திப்பில் பொதுமக்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் அவற்றுக்கான தீர்வுகளும் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பாக யாழ் கிளிநொச்சி முஸ்லீம் காங்கிரஸ் அமைப்பாளர் ரி.எம் ரொசான் தகவல் தெரிவிக்கையில்,
தற்போது புத்தளம்,மன்னார் மாவட்டங்களில் கடந்த யுத்தத்தினால் இடம்பெயர்ந்து வசிக்கும் முஸ்லீம்களின் அவசியமான பிறப்பு அத்தாட்சிப்பத்திரம், கடவுச்சீட்டு, மரணஅத்தாட்சிப்பத்திரம், உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டதுடன், வடமாகானணத்தில் இருந்து 2009 மே மாதம் இறுதிக்கு முன்னர் இடம்பெயர்ந்து தற்போது வெளிமாவட்டங்களில் வதியும் முஸ்லீம் மக்கள் தமது வாக்காளர் பதிவினை தங்கள் விரும்பும் மாவட்டத்தில் பதிவது தொடர்பாகவும் அக்கூட்டத்தில் பேசப்பட்டது.
இதற்காக ஏற்கனவே நீதியமைச்சரினால் பாராளுமன்றத்தில் சட்டம் கொணரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.இச்சட்டம் எதிர்வரும் ஜூன் மாதம் 6 திகதியளவில் நிறைவேற்றப்படவுள்ளது.
இக்கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் சார்பாக வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் முத்தலீப் பாவா பாறூக் ,மற்றும் கட்சி முக்கியஸ்தர்களும்,புத்தளம் மேலதிக அரசாங்க அதிபர் சந்திரசிறி பண்டார, புத்தளம் பிராந்திய சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகர் அனுர அபேயவிக்கிரம,புத்தளம் பிரதேச செயலாளர் எம்.ஆர்.எம் மலீக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் ஏற்பாட்டில் எதிர்வரும் காலத்தில் நடமாடும் சேவை நடைபெறவுள்ளது.

There will be lot of proposals to enhance northern Muslims’ lifestyle. Proposals promises will increase day by day, but will be in the proposal stage until NPC election. They will not implement any proposal other than updating voters’ list, that also for their benefits.
ReplyDeleteThey will keep all these Proposals promises in safe custody to enable them to reproduce in another election, most probably next general election.
தேர்தல் காலம் என்றால் சமூக உணர்வு அதிகரிக்கின்றது போலும்
ReplyDelete