அமெரிக்காவை தாக்கிய பார்பாரா
வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் மேற்குக்கடற்கரை பகுதியான சியாபாசில் நேற்று கடுமையான மழை கொட்டியது. இதனையடுத்து அப்பகுதிகளில் ஹரிகேன் பார்பாரா என்று பெயரிட்ட புயல் கடுமையாக தாக்கியது.
120 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய இந்த (ஹரிகேன்) புயலுக்கு பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் இடங்களை காலி செய்தனர். சாலை மற்றும் கடல் போக்குவரத்தும் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அதிகப்படியான மழைப்பொழிவிற்கு பிறகு இந்த ஹரிகேன் இன்னும் 24 மணிநேரத்திற்குள் வலுவிலக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Post a Comment