அரசாங்கத்தை மிரட்டும் ஜாதிக ஹெல உறுமய
அரசாங்கத்தை விட்டு விலகப் போவதாக ஜாதிக ஹெல உறுமய கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. திட்டமிட்டவாறு வட மகாhணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் அரசாங்கத்தை விட்டு விலக நேரிடும் என ஜாதிக ஹெல உறும கட்சி அறிவித்துள்ளது.
எவ்வாறெனினும், வட மாகாணசபைத் தேர்தலை நடாத்துவதற்கு முன்னதாக தங்களது கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த ஸ்ரீவர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
மாகாணசபைத் தேர்தல் சட்டங்களில் சில மாற்றங்களை ஏற்படுத்தியதன் பின்னரே தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் தொடர்பில் மீளாய்வு செய்ப்பட ணே;டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கில் புலிகளினால் விரட்டியடிக்கப்பட்ட சிங்கள மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கைகளில் அரசாங்கம் முனைப்பு காட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். gtn

ஜாதிக ஹெல உறுமய பதிவு செய்யப்பட்ட பயங்கரவாதக்கட்சி அவ்வளவுதான் செயல்பாடு ஒட்டுமொத்தமாக இனவெறியும் துவேசமும்தான் தவிர வேறில்லை. வடக்கில் தேர்தல் வைத்தால் தமிழர்களுக்கு வெற்றிகிடைக்கும் அல்லது வடக்கு தமிழர்களின் கைக்குள் போய்விடும் என்பதனால் இதுபோன்ற துவேசக்காரர்கள் கூச்சலிடுகின்றார்கள்.
ReplyDeleteதமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள், கிறித்தவர்கள் போன்ற சிறுபான்மையினருக்கு ஏதாவது நன்மைகள் நடந்தால் ஏன் உங்களுக்கு பொறுக்க முடியாதோ தெரியவில்லை, முதலில் இதுபோன்ற துவேசிகளுக்கு நல்லதோர் பாடம் புகட்டவேண்டும், புலிகள் இதுவரைக்கும் இருந்திருந்தால் பலரது கொட்டம் அடக்கப்பட்டிருக்கும்........