ஆஸாத் சாலி கைது (வீடியோ இணைப்பு)
கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி பொலிஸாரால்
கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்குக் கிடைத்த சில முறைப்பாடுகளுக்கு அமைய அவர்
கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான புத்திக்க
சிறிவர்தன தெரிவித்தார்.
கொலன்னாவை பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்த போது இன்று காலை அவர் கைதுசெய்யப்பட்டதை
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிசெய்தார்.
http://www.youtube.com/watch?v=DLuLFDppRzg&feature=player_embedded#!

அரசாங்கத்தை விட்டு வெளியேறும் முஸ்லிம் அரசியல்வாதிகள் எல்லோருக்கும் எதிர்காலத்தில் இந்த நிலையே ஏற்படும் என்பதை இந்தக் கைது சம்பவம் கட்டியம் கூறியிருக்கிறது. இவ்வாறான கைதுகளும், சிறை வாழ்க்கையும் சமூக உரிமைக்காகக் குரல் கொடுக்கும் தலைவர்களுக்கு அவர்களின் வரலாற்றில் ஒரு கௌரவமாகவே பதியப்படும்.
ReplyDeleteஇந்த நாட்டில் நீதி நியாயம் என்பன குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழ ஆரம்பித்துள்ளது... கைது செய்யப்பட வேண்டியவர்கள் வெளியில் இருக்கும் போது அனைத்து மக்களுக்காகவும் குரல் கொடுக்கும் அஸாத் சாலி கைது செய்யப்பட்டதானது தெட்டத்தெளிவாக யாரோ ஒருவரின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப இடம்பெற்றுள்ளது...
ReplyDelete