தேசிய உதைப்பந்தாட்ட போட்டிகள் மன்னாரில் ஆரம்பம்
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
இலங்கை பாடசாலைகள் உதைப்பந்தாட்ட சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள 2013 ஆண்டிற்கான 17 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பங்குகொள்ளும் தேசிய உதைப்பந்தாட்ட போட்டிகள் இன்று 18-05-2013 மன்னாரில் ஆரம்பமானது. எதிர்வரும் 20 ஆம் திகதி வரை தொடர்ந்து இந்த போட்டிகள் இடம் பெறவுள்ளன.
இன்று அரம்பமான இந்த போட்டிகள் மன்னார் புனித சவேரியர் பாடசாலை மைதானம் மற்றும் தாழ்வுபாடு உதைப்பந்தாட்ட மைதானம் என்பனவற்றில் இடம் பெறுகின்றது.
இன்று ஆரம்பமான இந்த நிகழ்வின் வைபவத்தில் வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் பிரதம அதிதியாகவும்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,வன்னி மாவட்ட விளையாட்டு குழுவின் தலைவரும்,சட்டத்தரணியுமான ஹூனைஸ் பாருக்,அகில இலங்கை பாடசாலைகள் உதைப்பந்தாட்ட சங்க தலைவர் ஆரியரத்ன,மன்னார் வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எம்.சியான்,வடமாகாண இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் எம்.முனவ்வர் உட்பட மன்னார் நகர சபை தலைவர்,மற்றும் உறுப்பினர்கள் என பலரும் இதன் போது பிரசன்னமாகியிருந்தனர்.
இவ்வாறு இடம் பெறும் இப்போட்டியில் பங்குகொள்ளவென நாட்டின் நாலா பாகங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 24 பாடசாலைகளின் அணிகள் கலந்து கொள்கின்றன.



Post a Comment