உகண்டாவில் ஜனாதிபதி மஹிந்தவிற்கு இராணுவ மரியாதை
(எம்.ஜே.எம். தாஜுதீன்)
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு உகண்டா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் உகண்டா ஜனாதிபதி யோவேரி முஸவேனிக்கும் இடையில் இன்று (12) ஞாயிற்றுக்கிழமை இரு தரப்புப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
உகண்டா ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் விவசாயம் - எரிசக்தி - ஆடை உற்பத்தி மற்றும் இருதரப்பு வர்த்தகம் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையில் பரஸ்பர ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
ஆடை உற்பத்தித் துறையில் இலங்கை பெற்றுள்ள சிறப்பான அனுபவங்களை உகண்டாவில் நடைமுறைப்படுத்த தாம் விரும்புவதாக உகண்டா ஜனாதிபதி கூறினார். இரு நாட்டு தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டு 21 மரியாதை குண்டுகள் தீர்க்கப்பட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பெரும் வரவேற்பளிக்கப்பட்டது.
விசேட அதிதிகள் புத்தகத்தில் கையெழுத்திட்ட ஜனாதிபதி உகண்டாவின் இராணுவ மரியாதையையும் ஏற்றுக்கொண்டார்.



Post a Comment