சம்மாந்துறையில் வீதி விபத்து (படங்கள்)
(எம்.வை.அமீர்)
சம்மாந்துறையின் வீரமுனை சந்திக்கு அண்மையில் அம்பாறை கல்முனை வீதியில் இன்று காலை 8.15 மணியளவில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் மீது அம்பாறை பக்கமாக இருந்து வந்த அரச பிக்கப் ரக வாகனம் ஒன்றுடன் மோதுண்டதில் ஏற்பட்ட இரத்தப்போக்குடன் அவசரமாக சம்மாந்துறை வைத்திய சாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டார்.
அவருக்கு விசேட சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிர் நீத்ததாக வைத்திய வட்டாரங்கள் தெரிவித்தன. மேலதிக விசாரணைகளை சம்மாந்துறைப் போலீசார் மேற்கொள்கின்றனர்.



இது என்ன கூத்து? வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார் என்கிறீர்கள்... அப்படியானால் விபத்து நடந்த இடத்தில் ஏன் படுகாயம் அடைந்து கிடப்பவரை ஏதோ பிணத்தை வைத்துக்கொண்டு காத்திருப்பதைப்போல நிற்கின்றார்கள். போட்டோ எடுத்துக் கொள்ளும் வரையில் அவகாசம் இருக்கும்போது உடனடியாக முதலுதவி செய்து வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றிருந்தால் அவர் பிழைத்திருக்கும் வாய்ப்பு அதிகரித்திருக்குமே..
ReplyDeleteஒரு வயோதிபருக்கு விபத்து நடந்து அவர் விதியில் விழ்ந்து கிடக்கின்றார் அவரின் உடம்பிலிருந்து இரத்தம் அவ்வளவுதூரம் வரை ஆறுபோல ஓடியிருக்கின்றது அதுவரைக்கும் அந்த மனிதரை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் ஏற்பாடு செய்யப்படவில்லை. மனிதாபிமானமற்றவர்கள் வாழும் உலகத்தில் எப்படி அய்யா ஏழைகளின் உயிர்கள் உயிர்களாக மதிக்கப்படும். வெட்கப்படுங்கள் வேதனைப்படுங்கள் அதை பார்த்துக்கொண்டிருந்தவர்கள். தயவு செய்து ஒரு காரணமும் சொல்லவேண்டாம்.
ReplyDeleteஇவர்கள் மனிதாபம் அற்றவர்கள் விபத்த நடந்தவுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் அவரை வைத்தியசாலைக்கு அழைத்தச் செல்லாமல் என்ன இப்படி இருக்கின்றது மணிதர்ளின் உள்ளம்
ReplyDelete