Header Ads



கவிஞர் அப்துல் காதர்லெவ்வையின் பூரண வாழ்வு நூல் வெளியீட்டு விழா


(அபுதீனா) 

கிழக்கிலங்கையின் பூகழ் பூத்த கவிஞர் அப்துல் காதர்லெவ்வை ஆக்கிய பூரண வாழ்வு நூல் வெளியீட்டு விழா இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை கலாச்சார பீட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

மேற்படி இவ்விழாவானது இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மொழித்துறை பிரிவின் ஏற்பாட்டில் அதன் தலைவர் கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ் தலைமையில் நடைபெற்றது. 

பூரண வாழ்வு நூலுக்கான ஆய்வுரையை பேராதெனிய பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறை சிரேஸ்ட விரிவுரையாளர் பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ் அவர்களும், பேராதெனிய பல்கலைக்கழகத்தின் முன்னால் தமிழ்த்துறை விரிவுரையாளர் ஸரினா அப்துல் ஹக் அவர்கள் சிறப்புரையினையும் நிகழ்தினர். 

கவிஞர் அப்துல் காதர்லெவ்வை அவர்களின் புதல்வரும் அவுஸ்திரேலியாவின் மேர்டொக் பல்கலைக்கழக பேராசிரியருமான ஏ.சி.எல். அமீர் அலி அவர்கள் விசேட சொற்பொழிவினையும் நிகழ்தினார்.    

கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பதில் உபவேந்தரும், இஸ்லாமிய கற்கைநெறிகள் பீடத்தின் பீடாதிபதியுமான மௌலவி ஏ.வி.எம். அலியார், பல்கலைக்கழக பதிவாளர் எச்.அப்துல் சத்தார், பல்கலைக்கழக விரிவுரையாளார்கள், கவிஞர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் மாணவர்களும் இந்நூல் வெளியீட்டில் கலந்து சிறப்பித்தனர்.   




No comments

Powered by Blogger.