ஆஸாத் சாலியை பார்க்கச்சென்ற ஆளும்கட்சி முஸ்லிம் எம்.பி.க்கு ஏற்பட்ட அதிர்ச்சி
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொழும்பு மாநகர சபையின் முன்னால் பிரதி மேயர் ஆசாத் சாலியினை பார்வையிடச் சென்ற ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான ஹூனைஸ் பாருக்குக்கும் அவரை பார்ப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.
03-04-2013 மாலை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல.எஸ்.ஹமீட் ஆகியோர் சென்றனர்.வைத்தியசாலை பணிப்பாளர் வெளிநாடு சென்றிருப்பதாகவும், பதில் பணிப்பாளரே கடமையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவரை சந்தித்து ஆசாத் சாலியின் உடல் குறித்து கேட்டறிந்து கொண்டதுடன், அவரை பார்க்க வேண்டும் என்று கேட்ட போது, இரகசிய பொலீஸார் எவருக்கும் அனுமதி வழங்க வேண்டாம் என்று கூறியதாகவும் பிரதி பணிப்பாளர் கூறியுள்ளார்.
இரகசிய பொலீஸ் பிரிவின் பிரதி பணிப்பாளரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள பாராளுமன்ற உறுப்பினர் முயற்சித்த போதும் அது பலனளிக்கவில்லை.
ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினருக்கே ஒரு நோயாளியினை பார்க்க முடியாத நிலையேற்பட்டுள்ளது குறித்து அவர் கடும் விசனம் தெரிவித்துள்ளது குறித்து ஜப்னா முஸ்லிமுக்கு தகவல் கிடைத்துள்ளது.

innum vendum.................................................
ReplyDeleteidu oru adirchi alla oru soolchi (muslim arasiyal vadihal arumaiyana nadiharhal namellam rasiharhal nanbarhal vilithukkollungal
ReplyDeletealla thunai
ReplyDelete