கண்பார்வை கிடைக்க உதவிகேட்கும் 8 வயது சிறுவன்
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் புத்தளம் 54/197 வான் வீதி புத்தளம் என்னும் முகவரியில் வசித்துவரும் அப்துல் காதர் (763024644) என்பவர் தனது 9 வது வயதில் கண்ணில் ஏற்படும் ஒருவித அரிதான நோயின் காரணமாக முழுமையாக கண் பார்வையினை இழந்தார். சிறுவயதில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டிருப்பின் இவரது பார்வைக்கோளாரினை சீர்செய்திருக்க முடியும் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றார்கள். எது எவ்வாறாயினும் அல்லாஹ்வின் நாட்டம் அவ்வாறாக அமைந்துவிட்டது. தற்போது அவரது 8 வயது மகனாகிய அப்துல்லாஹ் அவர்களுக்கும் இதே அமைப்பிலான நோய் ஏற்பட்டிருப்பதை வைத்திய நிபுணர்கள் கண்டறிந்துள்ளார்கள் (இன்னாலில்லாஹ்)
மிகவும் வறுமையான குடும்பப் பின்னணியைக்கொண்ட இவரது பொருளாதார நிலை, இவரது மகனின் கண்பார்வையைப் பறிக்கும் குறித்த நோய்க்கெதிராக போராட இடம்கொடுக்காது. இவரது மனைவி உணவு சமைத்துக் கொடுக்கும் தொழிலை செய்கின்றார், இவரது மனைவியின் தகப்பனார் (மாமா)வின் உதவியில்தான் இவர்களது குடும்ப சீவியம் நடக்கின்றது. இந்த நிலையில் குறித்த சிறுவனை சென்னையில் இருக்கின்ற ஒரு மருத்துவமனையில் வைத்தியப் பரிசோதனைக்கும், சிகிச்சைக்கும் அழைத்துச்செல்லுமாறு வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளார்கள்.
மேற்படி பரிசோதனைக்கும், சிகிச்சைக்குமாக சுமார் 250,000.00 ரூபா அளவில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது எனவும், இதனை தனித்து இவரால் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது என்பதாலும் பொது மக்களிடமும், நல்லுள்ளம் படைத்த கனவான்களிடமும் உதவிகளை இவர் எதிர்பார்க்கின்றார். தனக்கு நடந்த நிலைமை தனது மகனுக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் இவர் உறுதியாக இருந்து செயற்படுகின்றார்.
உலகில் ஒருவரின் நோயினைக் குணப்படுத்தி அந்த சிறிய பாலகனின் பார்வையை காப்பாற்றுவதற்கு நாம் முன்வருவது சிறப்பான நன்மையாக இருக்கும் என நம்புகின்றோம்.
மேலதிக விபரங்களுக்கும் தொடர்புகளுக்கும்
Abdul Carder, 54/197 Spill Road, Puttalam (Mobile +94-713-224 561)
Bank Details
Abdul Carder 1-0044-02-4198-9
National Savings Bank- Puttalam Branch
இவரிடம் புத்தளம் பெரிய பள்ளிவாயல், மற்றும் அமைப்புகள் வழங்கிய அத்தாட்சிப்படுத்தும் ஆவணங்கள் இருக்கின்றன.


Post a Comment