துப்பாக்கி சூடு நடாத்தி பொதுமக்களை விரட்டியடித்த அமைச்சர்
(PP) மோசமாக சேதமடைந்துள்ள வீதியை திருத்தித் தரக் கோரி போராட்டம் நடத்திய பொதுமக்களை, துப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்துள்ளார் புனர்வாழ்வு அமைச்சர் குணரத்ன வீரக்கோன்.
இந்தச் சம்பவம் கடந்த சனிக்கிழமை, கரந்தெனிய, கெராவ சந்தியில் இடம்பெற்றுள்ளது.
மோசமாக சேதமடைந்துள்ள வீதியைத் திருத்தித் தருமாறு பலமுறை அரசாங்கத்தைக் கோரியும், அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படாத நிலையில் அந்தப் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு சென்ற புனர்வாழ்வு அமைச்சர் குணரத்ன வீரக்கோன், போராட்டம் நடத்தியவர்களை மிரட்டும் வகையில், துப்பாக்கியால் வானத்தை நோக்கி பல ரவைகளை சுட்டுள்ளார்.
எனினும் தாம் அவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என்று சிறலங்கா அமைச்சர் மறுத்துள்ளார்.
ஆனால் அந்தப் பகுதி மக்கள் அமைச்சர் குணரத்ன வீரக்கான் துப்பாக்கிச்சூடு நடத்தியதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
amatchar nalla tamil padam parparpola
ReplyDeleteமக்கள் உதவிகேட்கும்போது துப்பாக்கியால் சுட்டு விரட்டும் தலைவரை நாம்தானே தெரிவு செய்தோம் அதற்கான பரிசுதான் இது. ஆக இதற்கு கைமாறாக நீங்கள் என்ன செய்யவேண்டுமோ தலைவருக்கு உடனே செய்யவேண்டியதுதான் இவனுக்கு மக்கள் கொடுக்கும் தண்டனையைப்பார்ந்து இனிமேல் எந்த அரசியல்வாதியும் இதுபோன்ற ஆங்கிலப்பட சீன்கள் காட்டுவதை நினைத்தாலே நடுக்குமளவுக்கு கொடுக்கவேண்டும்.......
ReplyDelete