Header Ads



முசலியில் உபபேருந்துச் சாலை

முசலி பிரதேச மக்களின் போக்குவரத்து தேவைகளை இலகுபடுத்துவதற்காக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களின் முயற்சியினால் 10 புதிய இலங்கை போக்குவரத்து சபை பஸ்களை உள்ளடக்கியதாக முசலியில் உப-பேருந்துச் சாலை அமைப்பதற்கான இடம் 04 ஏக்கர் ஒதுக்கப்பட்டு பெயர்ப் பலகை நடப்பட்டு அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. 

இந்நிகழ்வில் கௌரவ முசலி பிரதேச சபை தவிசாளர் தேசமாண்ய று.அ எஹியான், மற்றும் முசலி பிரதேச  செயலாளர் திரு. எஸ் கேதிஸ்வரன் மற்றும் இலங்கை போக்குரவத்து சபை பிராந்திய முகாமையாளர் சாஹிர் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


No comments

Powered by Blogger.