அக்கரைப்பற்று கல்வி வயத்திலுள்ள எட்டுப் பாடசாலைகள் அபிவிருத்தி.
(அனாசமி)
நாட்டின் மகிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் அடிப்படையில் 5000ம் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின்கீழ் அக்கரைப்பற்று கல்வி வலயத்திலுள்ள 08 பாடசாலைகள் பொருளாதார அமைச்சின்கீழ் அபிவிருத்தி செய்யப்பட தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அஸ்சேஹ். ஏ.எல்.எம். காசீம் தெரிவித்துள்ளார்.
கடந்தவருடமும் இதே போன்று பொருளாதார அமைச்சின்கீழ்; பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. இம்முறை பொத்துவில் கோட்டத்திலுள்ள அஸ் ஸாதிக் வித்தியாலயம், செங்காமம் அல் மினா வித்தியாலயம், அல். அப்ஸான் வித்தியாலயம், அக்கரைப்பற்று கோட்டத்திலுள்ள ஹிஜ்றா வித்தியாலயம், முகம்மதிய்யா வித்தியாயலம், காதிரியா வித்தியாலயம், ஜூனியர் வித்தியாலயம் மற்றும் அட்டாளைச்சேனைக் கோட்டத்தைச் சேர்ந்த முல்லைத்தீவு அல்; ஜெஸீறா ஆகிய எட்டுப்பாடசாலைகளும் இரண்டாம் கட்ட அபிவிருத்திக்காக தெரிவு செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பாடசாலைக்குரிய நிதிகள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளரான எம்.ஐ.ஏ. முத்தலிப் தெரிவித்துள்ளார்.

Post a Comment