வலிநிவாரணை மாத்திரைகளை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு மாரடைப்பு வரும்
பெயின் கில்லர்கள் எனப்படும் வலிநிவாரணை மாத்திரைகளை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.
வலி நிவாரணி மாத்திரைகளான புரூஃபன், டைக்ளோஃபெனக் போன்றவற்றை அளவுக்கு அதிகமாக அடிக்கடி எடுத்துக் கொள்பவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வு ஒன்று இந்த முடிவை வெளியிட்டது. இதற்காக, சுமார் 600 சோதனைகள் நடத்தப்பட்டதாம். வலி நிவாரணிகளை அதிகம் எடுத்துக் கொண்ட 1000 நோயாளிகளில் மூன்றுக்கும் மேற்பட்டோருக்கு இதய நோய் ஏற்படுவதாகவும், அவர்களில் ஒருவருக்கு இதய நோய் மிகவும் கடுமையானதாக ஏற்படுவதாகவும் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
இருப்பினும், ஏதோ ஓரிரு முறை அல்லது குறைந்த அளவே வலிநிவாரணி மாத்திரைகளை எடுத்துக் கொள்பவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட பக்க விளைவுகளைக் காட்டிலும் வேறு பிரச்னைகள் இருக்காது என்பதால், அவர்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும் இந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment