Header Ads



ஒபாமாவுக்கு விஷக் கடிதம் அனுப்பிவைப்பு

அமெரிக்காவின் அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகைக்கு ஏற்கனவே கடந்த மாதம் ஒரு மர்ம கடிதம் வந்தது. அதில் விஷம் தடவி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.தற்போது மீண்டும் அதிபர் ஒபாமாவுக்கு கடிதம் ஒன்று வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த உளவுத்துறையினர் அதை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

சோதனையில் அக்கடிதத்தை கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட நூலில் ரிசின் என்ற கடுமையான விஷம் தடவியது கண்டுபிடிக்கப்பட்டது.இது போன்ற கடிதம் வாஷிங்டன் மாகாணத்தி ஸ்போகன் நகரத்தில் உள்ள நீதிபதி ஒருவருக்கும், பேர்சைல்டு விமானப்படைத் தளம், அங்குள்ள ஒரு தபால் அலுவலகம் ஆகியவற்றுக்கும் வந்துள்ளது.

சிவப்பு மையால் முகவரி எழுதப்பட்டுள்ள இந்த கடிதங்களுக்கு வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள ஸ்போகன் தபால் நிலையத்தில் மே 13-ம் தேதி தபால் முத்திரை குத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஸ்போகன் நகரத்தைச் சேர்ந்த ரியான் புகேட்(37) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

No comments

Powered by Blogger.