இந்திரரத்தின தேரர் பொது நலனுக்காகவே உயிர் தியாகம் செய்தார் - அமைச்சர் உதய கம்மன்பில
(எம்.ரிஸ்வான் கலித்)
புத்த மதத்தை தெரியாத மதத் தலைவர்கள் இந்திர ரத்தின தேரரின் உயிர் தியாகத்தை, தற்கொலை பாவமான செயல் என்று கூறும் அந்நிய மதத்தவர்களுக்கு புரியாவிட்டாலும் அவர் செய்தது பொது நலனுக்காக செய்த உயிர் தியாகம் என்று மேல் மாகாண அமைச்சர் உதய கம்மன்பில கூறியுள்ளார்.
கி பி 306ம் வருடம் சீனாவில் ஒரு பிக்கு அன்றைய ஆட்சியில் பௌத்த மதத்திற்கு துரோகம் நடப்பதாக கூறி தற்கொலை செய்து கொண்டார் என்றும், கி பி 547 ல் சீன ஆட்சியாளர்களினால் புத்த மதத்தை தடை சைத காரணத்தினால் ஐந்து பிக்குகள் தற்கொலை செய்தார் எண்டும், வியட்நாமில் டீம் என்ற ஜனாதிபதி 90 புத்த மதத்தவர்களுக்கு தீங்கு விளைவித்ததால் கவண் டக் என்ற பிக்கு தீமூட்டி தற்கொலை செய்ததாகவும். இதே போல தான் இன்ற இரத்னா தேரர் பெட்ரோல் உயிர் தியாகம் செய்தாக அவர் மேலும் கூறிஉள்ளார்.

what do you say for the accusation of murder there before making a hero a out of his swindling of money and arrest warrant?
ReplyDelete