Header Ads



தென்னாசியாவிலே பிறப்பதற்கு சிறந்த நாடு இலங்கை


தென்னாசியாவிலே, பிறப்பதற்கு சிறந்தவொரு இடம் இலங்கையே என சேவ் த சில்வரன் அமைப்பு தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள உலகில் வாழும் தாய்மாரின் நிலைமை என்ற அறிக்கை ஒன்றிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

176 உலக நாடுகளை பிரநிதித்துவப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கைக்கு அமைய, தாய் ஆவதற்கு ஏற்புடைய நாடு என்ற பட்டிலில் இலங்கை 89 வது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தாயவதற்கு ஏற்புடைய நாடு என்ற பட்டியலில் பின்லாந்து முதலாவது இடத்திலும் கொங்கோ அரசாங்கம் இறுதி இடத்திலும் உள்ளதாக சேவ் த சில்வரன் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.