ஆஸாத் சாலியும், மகள் பௌத்த விகாரைக்கு மலர் தட்டு கொண்டு சென்றமையும்..!
ஆஸாத் சாலியின் கைதுக்கு பின்னால் இருக்கும் முஸ்லிம் சமூகத்துக்கான செய்தியை புரிந்து கொள்ளாமல், அதன் அரசியல் நோக்கங்களை தவறாக அர்த்தம் கற்பிக்கின்ற பல பதிவுகள் முகப்புதகங்களிலும், சமூக வலை தளங்களிலும் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றின் மீதான ஒரு கண்ணோட்டமே இந்தப் பதிவாகும்.
ஆசாத் சாலியின் கைது ஒரு வெறும் நாடகம் என்று சமூக வலை தளங்களில் கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. எதனை அடிப்படையாக வைத்து இப்படி எழுதுகிறார்கள் என்று எனக்கு விளங்கவில்லை. சிலர் கற்பனை செய்து கொண்டு அரசாங்கம் தன் மீது முஸ்லிம் மக்கள் மத்தியில் இழந்து வரும் ஆதரவுத் தளத்தினை, ஆசாத் சாலியை ஹீரோவாக்கி அவர் பக்கம் திருப்பி அதனை தேவையானபோது தன் பக்கம் இழுத்துக் கொள்ளலாம் என்ற அடிப்படையிலேயே ஒரு நாடகம் அரங்கேற்றப்படுவதாக எழுதுகின்றனர். இது மிகவும் சிறு பிள்ளைத்தனமான ஒரு வாதமாகும்.
அப்படி ஒரு நாடகத்தினை அரங்கேற்றி முஸ்லிம்களின் வாக்குகளை தக்கவைக்க வேண்டிய எந்தவொரு தேவையும் அரசாங்கத்துக்கு தற்போதைய நிலையில் இல்லை. தனிச் சிங்களவர்களின் வாக்குகளின் மூலம் தம்மை மீண்டும் நிலை நிறுத்திக் கொள்ள முடியும் என்ற நிலையில் அதனை நோக்கியே அரசாங்கம் விடயங்களை நகர்த்திக் கொண்டு செல்கிறது.
தவிரவும் அப்படியொரு நாடகத்தினை செய்வதற்கான நோக்கம் ஆசாத் சாலிக்கும் அரசாங்கத்துக்கும் இருந்திருக்குமானால், அதற்கான தருணமாக இந்த நாட்களை அவர்கள் தேர்வு செய்திருக்க மாட்டார்கள். ஏனெனில் இது தேர்தல் ஒன்றை அண்மித்த நாட்களும் அல்ல.
இலங்கையில் மிகப்பெரும் மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்திருக்கின்றன. அங்கு கருத்துச் சுதந்திரம் இல்லை.எழுத்துச் சுதந்திரம் இல்லை என்பவற்றை காரணம் காட்டி இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாடு இரத்துச் செய்யப்பட வேண்டும் என்ற அழுத்தக் குரல்கள் சர்வதேச அரங்குகளில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அவற்றை உண்மைப்படுத்தும் விதத்தில் சீன் போடுவதற்கு தற்போது ஆட்சியில் இருப்பது முட்டாள்தனமான அரசாங்கமும் அல்ல. ஒரு நபரை இந்த அரசாங்கம் முஸ்லிம்களுக்குள் ஹீரோவாகக் காட்டுவதற்கு எவ்வளவோ வழிகள் இருக்கையில் தமக்கு அசௌகரியத்தை தேடித் தரும் ஒரு வழிமுறையை அது தேர்வு செய்யமாட்டாது என்பதை உறுதியாக நம்பலாம்.
மேலும், ஆஸாத் சாலியின் கைது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் இடம்பெற்றிருப்பது முக்கியமான விடயமாகும். நாட்டில் யுத்தமே இல்லாத நிலையில் பயங்கரவாத தடைச் சட்டம் மீதான விமர்சனங்கள் அதிகரித்து வரும் நிலையில் சர்ச்சைக்குரிய அந்த சட்டத்தின் மூலம் அரசாங்கம் ஒரு நபரை ஹீரோவாக்குகின்ற விசப்பரீட்சையை எந்தளவுக்கு செய்ய நினைக்கும் என்பதை ஒரு கனம் மனக்கண் முன்னே நிறுத்திப் பார்க்க வேண்டும்.
நேற்றைய நாள் வரை ஆசாத் சாலியின் உணர்ச்சியூட்டும் பேச்சுக்களால் உந்தப்பட்டு அவரை தலைவராகக் கொண்டாடிய நபர்களால்தான் இன்று அதற்கு நேர்மாறான முறையில் பரப்புரைகள் செய்யப்படுகின்றன.
ஏன் இந்த திடீர் மாற்றம் என்பதற்கான விடை முஸ்லிம்களுக்குள் மிக ஆழமாகப் பதிந்திருக்கும் மத நம்பிக்கைகளில் இருந்தே பிறக்கின்றது. ஆசாத் சாலி மகள் பௌத்த விகாரை ஒன்றுக்கு மலர்த் தட்டு கொண்டு சென்றார்கள் என்ற செய்தியை அறிந்த அவரது அபிமானிகளும், ஆதரவாளர்களும் அவரை வஞ்சிக்கத் துணிந்ததன் விளைவுகளே இவை.
அவர் மீது அரசியல் காழ்ப்புணர்வு கொண்டவர்களும், அரசியல் லாபம் தேட தருணம் பார்த்துக் கொண்டிருந்தவர்களும் மிக வசதியாக தம் அரசியல் தலைவர்களின் இலட்சனங்களை மறந்து மத கோட்பாடுகளுக்குள் தமது அரசியல் தலைவர்களின் அசிங்கங்களை மறைத்துக் கொண்டு ஆசாத் சாலியின் மீது சேறடிக்க துவங்கினர். நன்றாக கொம்பு சீவிக் கொண்டும் இருக்கின்றனர்.
மதக் கோட்பாட்டு ரீதியான வரை முறைகளுக்குள் எமது அரசியல் வாதிகளையோ, தலைவர்களையோ தேடத் துவங்கினால் ஒருவரும் மிஞ்ச மாட்டார்கள். சோபாவில் அமர்ந்திருக்கும் மனிதருக்கு முன்னே கை கூப்பி,நான்காய் மடிந்த தலைவர்கள் எத்தனை பேர்? அர்த்த ராத்திரிகளில் அரங்கங்களில் கூத்தடித்த தலைவர்கள் எதனை பேர்? வெளி நாட்டுப் பயணங்களில் குடியும் கும்மாளமுமாய்,குடித் தனமும் நடாத்தி விட்டு வந்த தலைவர்கள் எத்தனை பேர்? வெளிநாட்டு ஏஜண்டுகளின் பணத்தில் உல்லாச ஹோட்டல்களில் விருந்து வைத்து சதித் திட்டங்கள் தீட்டியவர்கள் எத்தனை பேர்? கணக்குப் போட்டுப் பார்த்தால் முஸ்லிம்களுக்கு தலைவர்களே இருக்க மாட்டார்கள்.
இவற்றை விடவும் முதன்மையான பிரச்சினை இன்றைய அரசின் அடக்கு முறையை சிறுபான்மையினராகிய நாம் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம் என்பதேயாகும்.
ஆஸாத் சாலி என்ற ஒரு நபருக்கெதிராக அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தினை பிரயோகித்துள்ளமையானது எதிர்காலத்தில் நாட்டில் உள்ள எந்தவொரு சிறுபான்மையினருக்கு எதிராகவும்,அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்போருக்கு எதிராகவும் இந்த அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தினை எவ்வாறு பிரயோகிக்கப்போகிறது என்பதற்கான முன்மாதிரியாகும்.
எந்த நபருக்கெதிராக இந்த சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதல்ல.என்ன காரணத்துக்காக இச்சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதே நாம் கவனத்திற் கொள்ள வேண்டிய விடயமாகும்.
எதிர் காலத்தில் எந்தவொரு நபரோ அல்லது குழுவோ நீதி,சுதந்திரம்,உரிமை தொடர்பில் குரல் எழுப்பாமல் அவர்களை அடக்கி விடச் செய்யும் நோக்கத்திலேயே இச் சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேற்சொன்ன காரணங்களுக்காக இச் சட்டம் யார் மீதும்,எந்த இனத்தின் மீதும்,எந்த மதத்தின் மீதும் பாயும் . அதற்கு தூய மார்க்கத்தை பின்பற்றுவோர், கலப்படமான மார்க்கத்தைப் பின்பற்றுவோர் என்ற பாகுபாடு கிடையாது.
எனவே, நாளை எமது குரல்வளையை நசுக்கப் போகின்ற இந்த சட்டத்தினை எமது பொதுவான எதிரியாகக் கொண்டு நாம் அனைவரும் ஒருமித்த குரலில் செயற்படுவது அவசியமாகும்.
அத்தோடு அரசாங்கம் தனது விசப்பரீட்சைக்கு தேர்வு செய்திருக்கின்ற ஆசாத் சாலியை மீட்டெடுக்க ஜனநாயக வரைமுரைகளுக்குட்பட்ட அத்தனை முயற்சிகளையும் செய்வதற்கு முஸ்லிம் சமூகம் ஒன்றுபட்டு முயல வேண்டும்...!

?????????????!!!!!!!!!!!!!!..................
ReplyDeleteThis heading is not suitable please change the title
ReplyDeleteஅசாத் சாலியின் கைது குறித்து உலகம் ஸ்ரீலங்காவை பின்னி எடுக்கும் என்ற உங்கள் கட்பனை ரொம்பதான் ஓவர் அசாத் சாலி என்ன எந்த முஸ்லிமுக்கு என்ன நடந்தாலும் அல்கைதாவையும் தலிபானையும் தொடர்பு படுத்திவிட்டால் உலகம் அடங்கிவிடும் இது தெறியாமல் பெரிய அறிவாளியாட்டம் ஆய்வு வேறு? பன்சலைக்கி மலர் தட்டேந்தி சென்றது மட்டுந்தான் அவர்கள் தவறா? தெவட்டகஹ உஸ்மான் வலியுல்லாஹ் ட சியாரதிட்கு நெய் ஊற்றி குத்து விளக்கேற்றி, வண்ண பட்டாடைகள் போட்டு ஸுஜீது செய்து ருகூஉ செய்து வணங்கி வழிபட்டு அல்லாஹ்விடம் அல்லாமல் அந்த செத்த பினமாகிய உஸ்மான் ஸாஹிப் வலிய்ல்லாஹ்விடம் அஸாத் சாலியும் அவரது குடும்பமும் உதவி தேடி அழையும் ஜென்மங்கள் என்ற உண்மை வெட்ட வெளிச்சமானதினால்தான்
ReplyDeleteஆஹா ஓஹோ என்று போற்றி புகழ்ந்த இளைஞர்கள் எல்லாம் தூற்றுகிறார்கள் என்பதை அறியவில்லையா உங்கள் ஞான கண்கள்? கப்ருவணங்கியையா ஸ்ரீலங்கா முஸ்லிம்களின் தானை தலைவன் சமுதாய செம்மல் என்று அழைத்தோம் என்று தௌபாவில் விழுந்து விட்டனர் இன்று நீங்கள் குறிப்பிடும் முக நூல் மற்றும் ஏனைய தளங்களில் வந்த விடயங்களை அறிந்த யாவரும்?
ReplyDeleteI do not understand why our people have forgotten soon, there is one statement from BBS: “We have a deal / business (KODUKAL.. VANGAL…) with Azad Salih” that will be later…
இன்று இஸ்லாத்திற்கும், இலங்கை முஸ்லிம்களுக்கும் எதிராக நடந்து வரும் அனைத்துப் பிரச்சினைக்கும் பின்னனியாக இருப்பவர் அஸாத் ஸாலியின் சகோதரர் ரியாஸ் ஸாலி என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. கடந்த பல மாதங்களுக்கு முன்பே இவர் தனது சமுதாய துரோகத்தை வெளிப்படுத்த ஆரம்பித்து விட்டார். லக் பிம நியுஸ் ஆங்கிலப் பத்திரிக்கையில் “இலங்கையில் வஹாபிய தீவிரவாதம்“என்ற தலைப்பில் பொய்யான கட்டுக் கதையொன்றை ஜோடனை செய்து பரப்பியதின் மூலம் தான் யார் என்பதை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டினார்.
ReplyDeleteஅண்ணன் காட்டிக் கொடுக்க தம்பி எதிர்த்துப் பேசுவதாக நடிக்கிறார்….. என்னவொரு அருமையான திட்டம்?
இதெல்லாம் பொய் என்று சொல்கிண்றீர்களா?
jaffna muslim பக்கச்சார்பாக நடக்காமல் இக் கருத்தினையும் பதிவிட வேண்டும் .............. சகோதரர் அப்துல் வாஜி அவர்களே ஆசாத் சாலியின் போராட்டம் அரசாங்கத்தின் நாடகமா? இல்லையா ? என்பதை விவாதிக்க நான் வரவில்லை ....... ஆசாத் சாலியை நேசித்தவர்களில் நானும் ஒருத்தன் .............. காரணம் ஹலால் ,ஹிஜாப், பள்ளிவாயல் உடைப்பு போன்ற இஸ்லாமிய சட்டத்தில் பொதுப்பலசேனா கை வைத்த போது அதனை தட்டிக்கேட்டவர்........ அதனால் தான் ஆசாத் சாலியை எம் எல்லோருக்கும் பிடிக்கும் ......ஆனால் இவர் எதற்காக போராடினாரோ அது அவர் வீட்டிலேயே இல்லாத போது .. அதுவும் அல்லாஹ்வினால் மன்னிக்க முடியாத இணைவைத்தலே அவரது குடும்பத்தினரால் நடைமுறைப் படுத்தப்படுகின்றபோது ..... இவருக்கு எதற்காக நாம் நோன்பு நோற்க வேண்டும்? நாங்கள் இவருக்காக நோன்பு நோற்க தயாரானவர்கள்... யார் இவர் ? தனது குடும்பத்தயே வழிநடாத்தத் தெரியாதவர் ஒரு சமூகத்தை எவ்வாறு வழிநட்டத்துவார் ? எம்மை பாதுகாப்பதற்கு எம் அல்லாஹ் இருக்கிறான்...நாங்கள் எவரிடமும் கை ஏந்த வேண்டிய அவசியம் இல்லை...."இணைவைத்தலை தவிர எல்லாப் பாவங்களையும் அல்லாஹ் தான் நாடியோருக்கு மன்னிப்பான்"என்றாலும் மனிதன் என்ற ரீதியல் எமக்காக குரல் கொடுத்தாரே அதற்காக அவரின் விடுதலைக்காக போராடுவோம் .........
ReplyDeleteArumsiyana oru katturai.Allah seyalkalai allamal ennaththaiye paarkiran. Awar entha ennaththil wikarai senrar enru yaarukku theriyum. Manathil ALLAH Than mikap periyawan enra ennam waithu bowththarkal alaippukkinanga mariyathaikkaka sherirunthal shirk aakuma? Allahwidam wida wendiyawaikalai allahwidam wittu widunkal. Anmaiyil ilankai towhead jamathinarkal wikarai onrai nallinakkam enru koori shiramathanam shaithu shuththap paduththinaarkal. Inai waikkum idaththai shuththap paduththi inai waikka udanthai aakuwathu appo shirk aahatha?
ReplyDeleteIppadi owwonrilum kutram thedinal ilankaiyil muslimkal uruppatta mathiri thaan.
நபி மார்கலின் குலன்டய்கலும் மனைவிமார்கலும் தவரு செய்டிருக்கிரர்கல். யரெயும் எடய் போடும் உரிமை யருக்கும் கிடயடு. எல்லாரும் தவரு செய்யக்குடியவர்கல் தான். இப்படி முச்லிம்கல் கைவிட்டு விட்லால் இது எடிரிக்கி நல்லா சன்டர்பமாகிவிடும்.
ReplyDeleteI fully agree with mursith
ReplyDeleteஇங்கும் உங்கள் தொஹீத் பிரசாரத்தை நிறுத்தவில்லையா? சமூகத்துக்காக குரல் கொடுத்த ஒரு மனிதன் அவர்..அவரது கொள்கை பற்றி விமர்சிப்பதை விட்டு முஸ்லிம்களுக்காக பேசிய ஒரு மனிதர் அவர் தான் என்பதை சிந்தியுங்கள்...நபி அவர்கள் சொன்னது போல் 73 கூட்டங்களாக எம் சமூகம் பிரியத்தானே வேண்டும்...உங்கள் கொள்கைகளை எத்தி வைப்பதை விட்டு விட்டு முஸ்லிம்களாக ஒன்று படுங்கள்...யார் குற்றவாளி என்று அல்லாஹ் முடிவு செய்வான்....இன்ஷா அல்லாஹ் நான் ஆசாத் சாலிக்காக நாளை நோன்பு நோற்பேன்...
ReplyDeleteBrother Even i have shocked with this news that azad sally family went for Pansal. but we should try to understand that if we visit to any other religious Places such as Church, Pansal Or kovel that is not mean by we are worshiping their GOD. ALLAH will seeing only the Inside Heart not the Physical body. so we don't know about their Opinion on Visit that place. I hope they should Explain about this Issue. But in this situation We must unite Not Diving by Groups. We should under One GOD ALLAH & Our Prophet Muhammed(PBUH) Path,
ReplyDeleteஅசாத் சாலி கைதிற்கு ஹகீம் எதுவும் செய்யவில்லை என்று கூறும் இவர்கள் ரவுப் ஹகீம் கைதானால் கொண்டாடக்கூடியவர்கள். இந்தக்காலத்தில் எந்தவொரு தனிமனிதனிற்கும் பின்னால் சமூகம் அவசரப்பட்டு செல்லுவது புத்திசாலித்தனமல்ல அவர் நல்லவராகக்கூட இருக்கலாம் காரணம் தனிமனிதர்களை ஒரே இரவில் மாற்றக்கூடிய சாத்தியங்கள் நிறையவே உள்ளன .
ReplyDeleteமுஸ்லிம் காங்கிரஸ் இலங்கை முஸ்லிம்களின் 20% க்கு குறைவான வாக்குகளையே பெற்ற கட்சியாகும் ஆனால் ஏதாவது பிரச்சனை என்று வரும் போது முஸ்லிம் காங்கிரசை மட்டுமே ஏசுகின்றனர். இவ்வாறு ஏசுகின்றவர்கள் கூறுகின்றனர் அடுத்த தேர்தலில் மரத்தை வெட்டி எறிவோம் என. ஏதோ இவர்கள் எல்லாம் கடந்தகாலங்களில் மரத்திற்கே வாக்களித்தவர்கள் போல . முஸ்லிம் காங்கிரசிற்கு அம்பாறையில் 60% ம் திருகோணமலையில் 50% ஆன முஸ்லிம்கள் மாத்திரமே வாக்களித்துள்ளார்கள் . இவ்வாறு வாக்களிக்காமலே முஸ்லிம் காங்கிரசை எப்படி இவர்கள் தங்களுக்காக உரிமை கொண்டாட முடியும் .
அசாத்சாலி போன்றோர் ஹகீமை மாத்திரமே ஏசுகின்றனர் மற்றைய அமைச்சர்கள் அனைவரும் அவரது சகாக்களாம் இது என்ன நியாயம் என்று விளங்கவில்லை.
தற்போதைய சூழலில் முஸ்லிம் காங்கிரசை அழித்துவிட்டால் எதிர்காலத்தில் எமக்கென ஒரு அரசியல் கட்சியினை உருவாக்குவதற்கு கூட அனுமதி கிடைப்பது கஷ்டம்தான்.
அதற்காக காங்கிரசில் எந்தப்பிழையும் இல்லையென்று கூறமுடியாது அதனை சீர் செய்வதற்காகவும் நாம் போராட வேண்டும்
. என்ன வாஜித் , உங்கள் எழுத்த பாத்தால் " பிணம் "வணங்கும் " கூட்டத்தை சேர்ந்தவர் போலுள்ளது.........
ReplyDeleteஆசாத் தின் பொதுவான .பேச்சுக்கு . , முஸ்லிம்கள் ஆதரவு எண்டும் உண்டு...இது போல் குரல் எழுப்ப வாசு தேவ நாணயக்கார , சுமந்திரன் போன்றோருக்கும் உண்டு.... ஆனால் இவர்களை முஸ்லிம் சமூகம் ஒருபோதும் தம் தலைவர்களாக ஏற்றுக்கொள்ளாது.........
ஆனால் இவர்களை பொது எதிரியை எதிர்பதர்க்காக முஸ்லிம் சமூகம் அரவணைக்கும்..
ஆனா ஆசாத் , தான் ஒரு முஸ்லிம், அதுவும் இலங்கை முஸ்லிம் சமூகத்துக்கு குரல் கொடுக்கன் எண்டு சொல்லி விட்டு , முஷ்ரிக் கின் வேலை பார்க்கும்போது முஸ்லிம்கள் அதை ஒரு போதும் அங்கீகரிக்க மாட்டினம்.....இந்த வித்தியாசத்தை விளங்கி கொள்ளவும்...
Jaffna muslim pakkach sarfanathak nadakkavendum Al Mursith, Slahy, Y.Mohamed Evergl Samuthay golafavathigl evergle Sarntha golukkal Sorkavathigl enra ninaipil mamthyodu Pesukinrverl Allam Arinthven Allah (Ashath Shaly Atherkkak Pasinar Yarukka Pesinar Anpathai Jaffna muslim.com Ariyavendum Samuthaya golappevathiklin karuthukkalai munniruttha Vendam enpathai samuthayam Sarpak Vendigolkindrayn
ReplyDeleteallahwin irainesarhalai wimarshippawan allahwudan yuththam seyya thayaraahattum entru awan kooruhiran, so muttaalhale kawanamaha iriyungal.
ReplyDeleteஆசாத் சாலியின் மகள் மலர்த்தட்டு ஏந்தியமையை கண்டிக்கக்கூடாது எனும் சடவாதிகளே
ReplyDeleteமுதலில் நீங்கள் இறைவனில் நம்பிக்கை வையுங்கள். அசாத் சாலியோ அவர்ட வாப்பாவோ நம்மை பாதுகாக்கமுடியாது. இறைவன்தான் பாதுகாப்பான். நமக்கும் இறைவனுக்கும் இடையிலான தொடர்பு லா இலாஹ இல்லல்லாஹ் என்பதாகும். எதுக்கும் புத்தரிடமும் கேட்டுப்பார்ப்போம், எதற்கும் மலர்த்தட்டு ஏந்தி பௌத்தர்களையும் துணைக்கழைப்போம் என்பதெல்லாம் இறைவனில் நம்பிக்கை இல்லாத விடயங்களாகும். இதற்கு எங்களை கூட்டுச்சேர்க்கவேண்டாம்.
சந்தர்ப்பவாதிகள் வேண்டுமானால் அவர் நம்ம ஆள், ஆகையால் நாம் எதிர்க்கக்கூடாது என்ற முடிவு எடுக்கலாம். நாம் சந்தர்ப்பவாதிகள் இல்லை.
வெளிநாடுகளில் மற்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் இஸ்லாத்திற்கு முரணானதை செய்யவில்லையா எனக்கேட்கும் யோக்கியவான்களே,
முதலில் இஸ்லாத்தை தெரிந்துகொள்ளுங்கள். ஒரு பாவம் பகிரங்கமாக செய்யப்படுவதற்கும் இரகசியமாக செய்யப்படுவதற்கும் இஸ்லாத்தில் வித்தியாசம் இருக்கிறது என்பது தெரியாமல் ஏன் உளறுகிறீர்கள்? ஒழித்து செய்பவனுக்கு அது பிழை என்று தெரிகிறது. அல்லாஹ் நாடினால் குற்றவாளி மன்னிப்பு கேட்டால் மன்னிப்பான். பகிரங்கமாக செய்வது பாவத்தை தூண்டுவது.
அசாத் சாலியின் குடும்பம் {கவனிக்க : குழும்பம்} இஸ்லாமிய கொள்கைகளுக்கு வெளியே நிற்கிறது என்பதற்காக கண்டிப்பது ஆசாத் சாலியை விடுதலை செய்யக்கூடாது என்று கோருவதாக நீங்கள் நினைத்துக்கொண்டால், நீங்கள் மீண்டும் அரிவரியிலிருந்து தமிழ் படிக்கவேண்டும் என்றுதான் சொல்லவேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்ததும் மக்களில் ஒரு சிலர் அவர் மரணிக்கவில்லை என்று பேசிக்கொண்டனர். அப்போது உமர் (ரழி) அவர்கள் சொன்னார்கள், யார் முஹம்மதை வணங்கினார்களோ, அவர்கள் தெரிந்துகொள்ளட்டும். முஹம்மது மரணித்துவிடடர் என்று. யார் அல்லாஹ்வை வணங்கினார்களோ அவர்கள் அவன் இருக்கிறான் என்பதை தெரிந்துகொள்ளட்டும். {ஹதீஸின் சாரம்}
ReplyDeleteஅசாத் சாலி கைதுசெய்யப்பட்டதும் நமக்கு யார் இருக்கிறார் என்று அங்கலாய்ப்பவர்களுக்கும், எந்த விகாரைக்கு சென்றாவது அவர் விடுதலைக்காக முயற்சிக்கவேண்டும் என்பவர்களுக்கும் இதைத்தான் நாம் சொல்லவேண்டும்.
அல்லாஹ் இருக்கிறான். அவனுக்கு இணை வைக்கமாட்டோம்.
(இதே கருத்து அஷ்ரப்பை தலையில் தூக்கு கொண்டாடுபவர்களுக்கும் செல்லும்)
Yaarum yaarudaya manasukkull sentru parkkamudiyaathu Allah vai thavira.
ReplyDeleteThayavu seyithu Ashath sallyin kudumpathinarin mana nilaiyeyi purinthu kondu Vimarsanankalai eluthunkal.
Avarkal eppadiyaavathu Yaarai pidiththaavathu thanathu Kanavarai, thanthaiyeyi Veliyil kondu varavendum enpathilethaan irupparkal. Ithu Yathaarththam.
melum malarthaddu vidayam evvaaru nadaipetrirukkum entru nantraaka ellarukkum theriyum. enave ithai perithaaha aladda thevai illai.
Ashath shliyin arasiyal ethirppalarkal ithai thankalukku saathakamaaka payan paduththa vendaam.
Vimarsippathai viduththu avarkalukku Arulaana, payan padum vakaiyilaana arivuruththalkalai seiyunkal.
Avarkalin thavarukalai arimaiyinaal ALLAH manniththu avrkalukku Nalla muraiyil sinthiththu seyal padavum, Sakotharar Ashath Shlly avarkalin kastankali ilahuvaakiyum, viravil viduthalai peravum ALLAH uthavi purivaanaaka Aameen.
avarkaludan thanthaiyinthavirkka mudiyaatha soolnilayil virumpaamal kondu sentrirukkalaam
Aakave Thayavu seyithu Vimarsippavarkal avarkalin mananilaiyeyi satru purinthu kondu
Azadsally muslima munafikka enpathai allah mattume ariwan.muslimkalukkaha kural koduththa oruwar niyayamini arrest pannappattullazu ulaharinda unmai.ahawe awarai viduvikka muyalwom.nanum thoheed vazithan .thouheed jamathuhalukku oru vendokol.ilangayil neengal saziththazu enna.muslimgalukkul mattume walamayana thalaipuhalil pirachcharam seihereerhal.dawa amaippu enrawahayil anniyamakkal maththiyil prazana oodahangalil singala moliyil islam patrip pesungal.iyakka reeziyaha oruvarai oruwar saduvazil arthamillai.
ReplyDeleteஅசாத் சாலியின் மகள் செய்தது சரியென ஒருபோதும் நான் கூற மாட்டேன் ஆனாலும் இந்த தௌஹீத் சகோதரர்கள் நாடு பூராகவும் முஸ்லீம்களும், இஸ்லாமும் அடக்கி ஒடுக்கப்பட்ட போது செய்த ஒரே சாதனை ஒரு ஊரிலே மையத்தை வைத்துக் கொண்டு சண்டையிட்டு போலீஸ் வரைக்கும் போனதுதான்... அடுத்த சகோதரர்களுக்கு காபிர்,முனாபிக் பத்வா கொடுப்பதில் இவர்களுக்கு நிகர் யாரும் இல்லையே. எனக்கிருக்கும் ஒரே சந்தேகம்: இவர்கள் ஒருமித்து இந்த முஸ்லிம் சமூகத்துக்காக எப்போது உருப்படியான வேலை செய்வார்கள் என்பது தான்....???
ReplyDeleteகாபிர் பத்வா கொடுப்பதற்கு நீ யார்?? அது ஹுகூகுல்லாஹ்வோடு சம்பந்தப்பட்ட விடயம், அவர்கள் தௌபா செய்தால் அவர்களை மன்னிக்க அல்லாஹ் போதுமானவன்.
சமூகம் சிறக்க, நிமிர்ந்து நிற்க செய்ய முடியுமானால் அதுவே போதும், அத விட்டுட்டு தேவல்லாத ஊருபலாய் கழுவுரத இத்தோடு நிறுத்திக் கொள்வோமாக.
உங்கள் கூற்றுப்படியான நியாயங்கள் பொதுவான அரசியல் சார்ந்த கண்ணோட்டத்தில் இருக்குமேயானால் ஏற்றுக்கொள்ள முடியும்.
ReplyDeleteஆசாத் சாலி அவர்களின் கைது பற்றி பலரும் கூறிகையில் ஜனநாயக நாட்டின் நீதி நியாங்கள் கேட்விக்குட்பட்டிருப்பது என்பது முற்றிலும் எதார்த்தமான உண்மை மற்றும் தொடரும் அரசியல் மர்மங்கள் மாற்றங்கள் மற்றும் கடந்தகால அரசியல் தவறுகள் உடனே முடிவுக்கு வராதவாறு என்ன அலைகளையும் கூடவே கொண்டிருக்கிறது. யாருக்கு சார்பாக பேசுகிறோம் அல்லது எதிர்ப்பாக பேசுகிறோம் என்பது விடயமல்ல ஒரு விடயத்தை பற்றி சிந்திக்கையில் முன் பின் முரணான ஒற்றுமைகள் வேற்றுமைகள் பற்றியும் ஆராய வேண்டியிருக்கிறது
அரசியலை வடிகட்டி அறிந்து கொள்ளும் நேரமும் காலமும் இன்னும் சாதாரண நம் இயல்பு நிலை வாழ்கையில் இல்லை என்பது எதார்த்தம்.காகம் என்றால் ஒரு எதிரியாக மட்டுமே எம்மனக்கங்களுக்கு தெரியும் வகையில் நாம் நெறிப்படுத்தப்பட்டிருக்கிறோம், சிந்திக்க வேண்டி நிற்கிற விடயங்கள் சரியாக கையாலப்படுகிதா என்றொரு கேள்வி எப்போது நம் சிந்தனையை உசிப்பிவிடுகிறது? ஒரு பிரச்சினை என்றவுடன் தீக்குச்சிகள் சிலந்திகள் என கூடவே கொண்டுவந்துவந்து விடுகிறோமே தவிர பிரச்சினையின் வேறை கண்டு கொள்ள தடுமாறித்தான் போவது நாம் வாழும் காலத்தின் சதியோ தெரிய வில்லை. எனது சமூகக்கடமை என்ன என்பது பற்றி எனக்கு தெரியாவிடின் சமூகம் சார்ந்து சிந்திக்கும் தகுதியும் எனக்கில்லை. நாம் வாழும் இந்த காலத்தில் நீங்களும் நானும் நம் சகோதரர்க்களும்தான் வாழ்கிறோம் என்றால் எந்த பிரச்சினையும் இல்லை உடன்பிறப்புக்களே உறவுகளை ஓரங்கட்டும் அழுகிய நிலைதான் காலத்தின் பதிலாக இருக்கிறது
எத்தனையோ நேரங்களில் சமூகத்திற்காக பல்வேறு வடிவங்களில் போராடும் உறவுகளுக்கு அனல் பெருமூச்சும் வருத்தமும்தான் மாற்றீடாக கிடக்கிறது.
யாரையும் புனப்டுத்துவதோ அசிங்கப்படுத்துவதோ என் நோக்கமல்ல மாறாக பல்வேறு நிலைகளில் சிந்திக்க தூண்டுவதைத்தவிர.
மறந்து விட்டேன் நீங்கள் ஆசாத் சாலி குடும்பம் புத்த ஆலயம் சென்றதை எப்படிப்பார்தீர்களோ தெரியவில்லை என்னால் அதை அந்த புத்த ஆலயத்தின் விளம்பரமாகவே பார்க்க முடிந்தது தயவு கூர்ந்து விளயாட்டுகேனும் ஆசாத் சாலி குடும்பம் செய்தது போல் யாரும் செய்து விடாதீர்கள் ஒரு கராம் எப்போதும் கலாலாகிவிடாது! ஒரு தவறு தவறாக பதிவாகுமே தவிர அதை நீக்க முடியாது ஆனால் திருந்த முடியும் என்பது என் எண்ணம் யாவும் அறிந்தவன் இறைவன் ஒருவனே!
Overall the stand of politicians and the intellectual are right to be silent and handle the issues wisely. Our leaders should be cautious about the situation. The situation and consequences are very serious.
ReplyDeleteBoth the BBS and Azad Sally are the product of Tamil diaspora. It is a clear requirements for Diaspora to create a hating and class among communities. So that the diaspora will turn Muslim towards the Tamil which is the mandatory requirements for their Eeelam dream and merger of north and East provinces.
The present situation is very dangerous, each and every citizen of Sri Lanka should be educated about the situation.
Presently diaspora put the the Silk Saree in the thorn. Either way the Silk Saree will get damaged.
There are well paid people everywhere to manipulate news and comments. Please evaluate the situation act wisely.
I think Mr. SLAHY may be a very active member of the BBS because he always criticizes Mr. Asath Salih and his family; in my experience as a long-lasting reader of www.jaffnamuslim.com I could not read any commence from SLAHY against BBS. It seems that SLAHY feels a very comfort and happy by the arrest of Mr. Asath Salih any one can conform this by checking SLAHY’s past comments.
ReplyDeleteMr. SLAHY; you may be from Thouheeth Jama-ath but you should behave as a Muslim at least even a human do you know “a real Muslim will not be a opportunistic and cannot be a KODARIK KAMBU” it can be understood that you have a personal or movements (Jama-ath) crisis with Mr. Asath Salih there are lot of confrontation among Islamic movement but you do not have any right to impress to accept or follow your opinion and you cannot argue that you only in the correct path (Almighty knows everything) so you had to better self examine yourself whether your opinions distractive or constrictive to the benefit of all Muslim Ummah after consulting a well educated Ulaama (Moulavi).
Shafnas mohamed u r k
ReplyDeleteஇது அசாத் சாலி ஷிர்க் வாதியா பித் அத் வாதியா என்று பார்கும் தருணம் அல்ல. அதட்கு என வேறு ஒரு தினத்தை ஒதுக்கிக்கொள்வோம்.
ReplyDeleteஇப்போதைய பிரச்சினை இலங்கை வாழ் முஸ்லிம்களின் சுய மரியாதை, வாழ்கை முறை, இஸ்லாமிய வாழ்கை சட்டங்களை நடைமுறை படுத்தளில் நமக்கு எதிராக முன்வைக்கப்படுகின்ற போலி குற்றச்சாட்டுகள் மற்றும் தடைகளுக்கு எதிராக நமக்காக குரல் கொடுத்த ஒருவரின் கைதுக்கு எதிராகவும் அவரின் விடுதலைக்காகவும் நடத்தும் ஒரு நன்றிக்கடனே. இந்த இடத்தில் அசாத் சாலிக்கு பதில் ஒரு அமரதாச வோ அரச ரத்தினமோ இருந்தாளும் நாம் அவர்களுக்காகவும் (விடுதலைக்காகவும்) பிரார்திப்போம். நன்றியுள்ள முஃமினாக நடப்போம். இன்ஷா அல்லாஹ் அவரின் விடுதலைக்குப்பின் அவருக்கும் அவர் குடும்பத்துக்கும் ஏகத்துவத்தை அதன் தூய வடிவில் எடுத்துரைப்போம்.
I agree with Akram.
DeleteAsad Sally or his family don't know about shirk. We must comment them for make corrections but not to keep them away.
Any way, even he his a politician he was talking to support all muslims. His brother did another thing but Asad Sally newer agreed in front of others.
Only Allah can help us. thats true. but as a human we must ask due for him for his release and hidayath.
And we must cooperate not to happen same things as happen to Sally again and again to some others too targeted.
And i advice all muslims thouheed jamath is not terrorism and never support or help to terrorist. sure we hate terrorism. as some of you had complained (unnecessary) to police cid politically and used all medea news papers face book internet CD for telling thauheed = terrorists.
if you tell lye against to someone some times it can affect u back. Becouse god is great ALLAHU AKBAR
Allah with us
Insha allah we must support to releas Asad Sally.
masha allah now a days our most of the muslims understand about shirk bidath. No dowry only mahar. No kaththam and ect understud about sunnah.
தவ்ஹீத் வாதிகள் மறந்து விடக்கூடாது...இன்று ஆசாத் சாலிக்கு..நாலை..முஜிபுர் றஹ்மானுக்கும்,....ஹஜ்ஜூல் அக்பருக்கும் இந்த நிலைதான் ஏட்படும்...மடையர்களே! இஸ்லாம் என்ற கயிற்றை படித்துக் கொள்ங்கள்
ReplyDeleteஇலங்கையில் முஸ்லிம்களை பாதுகாக்கும் படி துஆ செய்வதில் தவறில்லை ஆனால் பகிரங்கமாக சிர்க் செய்தவர்களையும்,அல்லாஹ்வின் தவ்ஹீதுக்கு எதிராக செயற்பட்டவர்களையும் இனம் காண்போம் என்று சொல்லும் போது வேறு பக்கமாக நலுவி இந்த குடும்பத்துக்காக(பகிரங்கமாக சிர்க் செய்தவர்களையும், அல்லாஹ்வின் தவ்ஹீதுக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கும்) வக்காலத்து வாங்கும் அன்பர்களே! நிதானமாக சிந்தித்து செயற்படா விட்டால் இதை விட பாரதூரமான விளைவுகளை அல்லாஹ் ஏற்படுத்துவான் என்பதை மறந்து விட வேண்டாம்.நாம் எல்லோரும் எம்மைப்புதுப்பித்துக்கொள்வோமாக.
ReplyDelete”அஸ்ஹது அ(ன்)ல்லா இலாஹ இல்லல்லாஹு வஅஸ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலஹு” என் எண்ணத்தில் வந்ததை சொல்லியுள்ளேன் யாரையும் புன் படுத்த வேண்டும் என்ற எண்ணமில்லை மாறாக நாம் பன்படனும் என்பதே!
Our Society has embedded deep into the trap of GROUPISM in the name of dawwah. today most people has started to criticize, when they knew Azad Salley belongs to Thareeqah. Its really unfortunate that we have so many groups in the name of islam and dividing our society even at the times of crises. These people have to let someone do the job, without making their comments on the basis of myths and fabricated lies. if Azad salley has been doing any shirk, then he gotto answer almighty Allah? what it has to do with his involvement in ongoing issues.
ReplyDeletedz title z nt suitable plz change it -sake of allah....
ReplyDelete