வடமாகாண தேர்தலில் முஸ்லிம்கள்..!
(சத்தார் .எம்.ஜாவித்)
அண்மைக் காலமாக இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் பெரும்பான்மை இனவாதிகளால் இழைக்கப்பட்ட அட்டூழியங்களுக்கு மத்தியில் வடமாகாண மக்கள் எதிர் கொள்ளும் முக்கியமானதொரு தேர்தலாக வடமாகாணத் தேர்தல் காணப்படுகின்றது.
மேற்படித் தேர்தல் உள்ள10ர் மக்களினால் மட்டுமல்லாது சர்வதேசத்தாலும் உண்ணிப்பாக அவதானத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் வடமாகாண சபைத் தேர்தல் விளங்குகின்றது.
கடந்த கால யுத்த சூழ் நிலைமைகளுக்கு பின்னர் வடமாகாண தமிழ் மக்கள் ஒரு தேர்தலை எந்தளவு முக்கியத்துடன் எதிர் கொள்கின்றதோ அதை விட பண்மடங்கு முக்கியத்துவமுடையதாக வடமாகாணத் தேர்தலை முஸ்லிம்கள் எதிர் கொள்வேண்டிருக்கின்றது. அன்மைக்காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக பெரும்பான்மை இனவாதிகள் மேற் கொள்ளப்பட்ட செயற்பாடுகளே முக்கிய காரணமாக அமைகின்றது.
இஸ்லாத்திற்கு எதிராக மேற் கொள்ளப்பட்டுள்ள அன்மைக்கால கசப்பான சம்பவங்கள் இலங்கை வாழ் முஸ்லிம்கள் மட்டுமல்லாது உலகலாவிய முஸ்லிம் மக்களையும் சமய ரீதியாக மனங்களை புண்பட வைத்துள்ளதுடன் மக்கள் அரசியலின் பால் வைத்துள்ள நம்பிக்கைகளை இழக்கச் செய்து எதிர் காலத்தில் ஒரு தீர்க்கமான முடிவுகளை எடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்தினுல் காணப்படுகின்றனர்.
தமக்கும், தமது சமயத்திற்கும் விடுக்கப்பட்ட சவால்களை இனவாதிகளின் பாணியில் செல்லாது அமைதியாகவும், சாதுர்யமாகவும் ஏன் சகிப்புத்தன்மையுடன் பொறுமையாக அமைதி காத்த மக்களின் நம்பிக்கைக்கு வெற்றி காணும் ஒரு பரீட்சையாக வடமாகாண தேர்தல் நல்லதோர் காலத்தில் நடத்தப்படவிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
தமக்கு விடுக்கப்பட்டு வரும் சவால்களுக்கு அகிம்சை வழியில் பாடம் கற்பிப்பதற்கு ஒரு சாதகமாக வடமாகாண தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு வடமாகாண சபைத் தேர்தல் முக்கியமானதாக கல்வியலாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
இனவாதிகளால் சிறபான்மை மக்கள் மீதும் அவர்களின் சமயங்கள் மீதும் கட்டவிழ்த்து விடப்பட்ட செயற்பாடுகளை ஆதரித் அரசியல்வாதிகளின் சுகபோக வாழ்க்கைக்கு வேட்டு வைக்கப்பட்ட ஒரு செயற்பாடாக நடைபெறவிருக்கும் வடமாகாண சபைத் தேர்தல் அமையப் போவதாகவும் புத்தி ஜீவிகள் தெரிவிக்கின்றனர்.
சமய ரீதியாக மேற் கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு எந்தவொரு முஸ்லிமோ அல்லது தமிழ் மகனோ இனவாதக் கொள்கையாளர்களுக்கு சாதகமாக வாக்களிப்பார்கள் என்ற என்னம் வடமாகாண சபைத் தேர்தல் மூலமே விடை கிடைக்கப்போகின்றது.
இந்தவகையில் பார்க்கும்போது அநியாயத்தையும், அட்டூழியங்களையும் தாராளமாக நடைபெறுவதற்கு ஆதரவளித்தவர்களின் சக்திகள் வடமாகாணத்திலும் கொடி கட்டிப்பறக்கலாம் என்ற என்னத்துடன் வடமாகாண சபைத் தேர்தலுக்குள் தமது ஊடுருவல்களை மேற் கொள்ள கங்கனம் கட்டிக் கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறான தீய சக்திகளின் மாயைக்;குள்ளும், சூழ்ச்சிகளுக்குள்ளும் வடமாகாண தமிழ் முஸ்லிம் மக்கள் வீழ்ந்து விடாது திடமான முடிவுகளின்பால் தமது முழுக் கவனத்தையும் செலுத்தவேண்டியுள்ளது.
அரசியல் வாதிகளின் அற்பத்தனமான ஆசை வார்த்தைகளுக்கு இனிவரும் காலங்களில் இடமளிக்காது ஒரு சமுகம் என்ற போர்வையில் தமிழ்த் தலைமைகளும் , முஸ்லிம் தலைமைகளும் இணைந்து தமது எதிர்கால முன்னேற்றங்களுக்கான காலடிகளை எடுத்து வைக்கவேண்டுமே தவிர மாறாக முன்னைய காலங்கள் போன்று அரசியல் தலைமைகளின் குரல்களுக்கு அடிபணிந்து விடாது மக்கள் தாமாக சுய சிந்தனையுடன் செயற்பட வேண்டிய விடயமாகும்.
அரசியல் வாதிகள் இதவரை காலமும் முஸ்லிம்களை அரசியல் ரீதியாக அடக்கி தாம்தான் எல்லாம் செய்த தருவதாக கூறி ஏமாற்றிய காலமும் அதற்காக மக்கள் ஏமாந்த காலமும் இன்று மாறி மக்களைக் காப்பாற்ற முதுகெலும்புப் பலம் இல்லாத அரசியல் நல்ல பாடத்தை வடமாகாணத் தேர்தலில் கற்பிக்கும் நிலைமை இன்று தோன்றியுள்ளது.
இன்றைய இலங்கையில் சிறபான்மைச் சமுகம் என்ற ரீதியில் அவை தத்தமது சமுகங்களையும், சமயங்களையும் பாதுகாப்பதற்கான அதி தீவிர பிரயத்தனங்களை ஒற்றுமையாக மேற்கொள்ள வேண்டிய நிலைமைகளே தோற்றம் பெற்றுள்ளது.
இவ்வாறு சிறுபான்மைச் சமுகங்கள் தமக்கென ஒரு சில கட்டுக்கோப்புக்களைவ வடக்கிலாவது தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் எதிர் காலத்தில் பெரும்பான்மை இனவாதிகளால் சமயங்கள் இல்லாதொழிக்கப்படும் நிலைக்கு செல்லவேண்டிய சந்தர்ப்பங்களும் உருவாகலாம்.
எனவே வடமாகாணத் தேர்தலை முஸ்லிம் மக்கள் சரியான முறையில் எதிர் கொள்ளவேண்டிய தேவைப்பாடு அவசியமானதாகும்.

yes-well said. Muslim and Tamil voters should not vote for injustices..vote to make a change!!!
ReplyDeleteஆமாம் கண்டிப்பாக இதுபோன்ற காலகட்டத்தில்தான் நாம் ஒன்றிணைந்து செயல்படுவதன்மூலம் சில விடயங்களை வெல்லவேண்டியுள்ளது......
ReplyDelete