Header Ads



சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவர் கிருஸ்ணமூர்த்தி பொறுப்புகளை ஏற்கிறார்


சவுதி அரேபியாவுக்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள வடிவேல் கிருஸ்ணமூர்த்தி எதிர்வரும் மே 20ம் திகதி சவுதியை சென்றடைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை வெளிவிவகார அமைச்சு இத்தகவலை தெரிவித்துள்ளதாக அராப் செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது. 

இலங்கையின் மலையகத்தை பிறப்பிடமாகக் கொண்ட வடிவேல் கிருஸ்ணமூர்த்தி முன்னர் இந்தியாவிற்கான இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராக கடமையாற்றினார். 

 சேவை காலம் நிறைவு என்பவற்றை முன்னிட்டு இலங்கைக்கான சவுதி உயர்ஸ்தானிகர் ஜவாட் திருப்பி அழைக்கப்பட்டார்.  இதனை அடுத்து சவுதிக்கான புதிய உயர்ஸ்தானிகராக வடிவேல் கிருஸ்ணமூர்த்தி நியதிக்கப்பட்டுள்ளார்.  adt

3 comments:

  1. கிருசஸ்னமூர்திக்கு நல்வாழ்த்துக்கள். மற்றவர்களை விட இவர் நல்ல சேவையை செய்வார் என்று நம்புவோம். முன்னர் இருந்த எந்த ஜவானும் சவுதிஇல் வாழும் இலங்கை மக்களுக்கு எந்த பயன்தரக்கூடிய விடயங்களும் செய்யவில்லை. உல்லாச பயணிகளாக இருந்தார்கேளே அல்லாமல் சவுதி வாழ் இலங்கை மக்களுக்காக உருப்படியாக யெம்பசிடர் என்ற வகையில் ஒன்றுமே செய்யவில்லை.

    ReplyDelete
  2. சந்தோசம்! க்ரிஷ்ணமூர்த்தி அவர்களே! எங்கள் முந்திய தூதுவர்கள் தூது மட்டுமே செய்தார்கள்! சிலர் தோதுக்கு தூதுவரானார்கள்.

    நீங்கள் நற்சேவை செய்ய அதற்கு மேலும், மெம்மேலும் செய்ய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. Vadamahana muslimgalin pirachchenai vinadukaduku ethiwaiungal

    Wish you all the best

    ReplyDelete

Powered by Blogger.