என்னை விடுதலை செய்யும்வரை உண்ணாவிரதத்தை தொடருவேன் - ஆஸாத் சாலி உறுதி
அநீதியான முறையில் கைது செய்து, தடுத்து வைக்கப்பட்டுள்ள தன்னை விடுதலை செய்யும்வரை தனது உண்ணாவிரதம் தொடருமென ஆஸாத் சாலி உறுதிபட தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆஸாத் சாலிக்கு வீட்டிலிருந்து உடுப்புகளை எடுத்துச்சென்ற அவரது மருமகனிடமே ஆஸாத் சாலி இவ்வாறு அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டுள்ளார்.
ஆஸாத் சாலியுடன் சில நிமிடங்கள் உரையாட கிடைத்ததாக ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கூறிய அவரது மருமகன், தாம் கொண்டுசென்ற சாப்பாட்டை சாப்பிடுவதற்கு அவர் மறுத்துவிட்டார். தன்னை விடுவிக்கும்வரை தான் உணவருந்தவோ அல்லது தண்ணீர் குடிக்கவோ மாட்டேன் என அவர் உறுதியாக உள்ளார் எனவும் மேலும் குறிப்பிட்டார்.

இந்த அநீதத்தை தட்டிக் கேட்க நீதி அமைச்சருக்கு முடியாதா? அப்படியென்றால் மேலிடத்து உத்தரவா?
ReplyDeleteallahvin udavi hidaikkum uggalukkum..insha allah
ReplyDeletemuslim congres muslim kalukku uruvakka paddatha? Illa singlavarhalukku uruvaakkap paddatha? Allah thaan arivaan...
Yenakoru doubt roufhakeem muslimthaana?????