மியன்மாரில் பௌத்த மடாலயத்தில் தஞ்சமடைந்துள்ள முஸ்லிம்கள்
மியன்மார் நகரான லஷியோவில் இரண்டாவது நாளாகவும் கலவரம் வெடித்ததை அடுத்து நூற்றுக்கணக்கான முஸ்லிம் குடும்பங்கள் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் மடாலயத்தில் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.
கலகக்காரர்கள் இரும்பு பொல்லுகளுடன் முஸ்லிம் குடியிருப்பு பகுதிகளில் சோதனையிட்டு தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. முஸ்லிம்களுக்கு சொந்தமான வீடுகள், வியாபாரத் தளங்கள் தீக்கிரையாக்கப்பட்டபோது ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை முஸ்லிம் நபர் ஒருவர் பெளத்த பெண் ஒருவருக்கு தீ மூட்டியதாக வெளியான வதந்தியைத் தொடர்ந்தே சீனாவின் எல்லையிலிருக்கும் நகரான லஷியோவில் கலவரம் வெடித்தது.
இந்நிலையில் லஷியோ நகரில் இருக்கும் சுமார் 1200 முஸ்லிம்கள் மன்சு பெளத்த மடாலயத்தில் வைக்கப்பட்டுள்ளனர். நகரின் பாதுகாப்பு பணிகளில் 300 படையினர் 200 பொலிஸார் நிறுத்தப்பட்டிருப்பதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
கலவரம் பரவ ஆரம்பித்தவுடனேயே பாதுகாப்பு படையினர் அனுப்பிவைக்கப் பட்டதோடு, ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு தேவையற்று ஒன்றுகூடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. கலவரத்துடன் தொடர்புபட்ட 25 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார். Tn
http://www.aljazeera.com/news/asia/2013/05/2013530125247861407.html
http://www.aljazeera.com/news/asia/2013/05/2013530125247861407.html

Post a Comment