ஆஸாத் சாலியின் குடும்பத்தினரால் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அனுப்பப்பட்ட கடிதம்
அன்பின் ஜப்னா முஸ்லிம் ஆசிரியபீட சகோதரர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்.
எனது தந்தை சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் ஒரு வார காலத்தில் நானும் எனது தாயும் மற்றும் எனது தந்தையின் உடன் பிறப்புக்களும், உறவினர்களும் எமது உற்ற நண்பர்களும் அனுபவித்த வேதனைகளை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. எங்கள் வேதனைகளில் பங்கேற்று அவற்றை செய்திகளாகவும், ஆக்கங்களாகவும் அவ்வப்போது உடனுக்குடன் சர்வதேச சமூகத்தோடு பகிர்ந்து கொண்ட ஜப்னா முஸ்லிம் இணையத் தளத்துக்கு நாம் என்றென்றும் கடமைபட்டுள்ளோம்.
இந்தக் காலப்பகுதியில் இடம்பெற்ற ஒரு சில பிரச்சினைகளை பூதாகாரமாக்கி அதன் மூலம் அரசியல் இலாபம் தேட முயன்றவர்களும் உள்ளனர். அதேபோல் இந்தப் பிரச்சினையை வைத்து எங்கள் குடும்பத்துக்கே காபிர் பட்டம் வழங்கிய 'பேஸ்புக் மற்றும் சமூக வலையமைப்பு மார்க்க மேதைகளும்' நம்மத்தியில் உள்ளனர். இவர்களை எல்லாம் இனம் கண்டு கொள்ள இறைவன் இதை எமக்கு நல்லதோர் சந்தர்ப்பமாக ஆக்கித் தந்தான். நாம் நிறைய விடயங்களை இந்த கொஞ்ச காலப்பகுதியில் கற்றுக் கொண்டோம். நிறைய அனுபவங்களையும் பெற்றுக் கொண்டோம்.
இப்போது நான் கடைசியாக உங்களுக்கு அனுப்பிவைத்த விளக்க அறிக்கையைப் பார்த்துவிட்டு இந்த பேஸ்புக் அறிஞர்கள் குழப்பமடைந்து, இது என்னுடைய ஆக்கம் அல்ல. தொழில் போட்டியைத் தக்கவைத்துக் கொள்ள நீங்களாகவே சோடித்து எழுதியதாக உங்கள் மீது அவர்கள் குறை கூறுவதாக எமது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வேறு ஒரு இணையத்தில் இவ்வாறான ஒரு தகவல் பிரசுரமாகியிருந்ததாகவும், இது பின்னர் வழமை போல் பேஸ்புக் வழியாகப் பகிரப்பட்டுள்ளதாகவும் நாம் அறிய முடிகின்றது. இந்த 'பேஸ் புக்' விஷமிகளுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும் என்ற தேவை எமது குடும்பத்துக்கு கிடையாது. இருந்தாலும் நாங்கள் இக்கட்டான கட்டத்தில் இருந்த போது நாம் வேண்டிக் கொள்ளாமலேயே எமது சோகத்தில் பங்கேற்று ஒரு உற்ற நண்பனாக எமக்கு கைகொடுத்த ஜப்னா முஸ்லிம் இணையத் தளத்துக்கு இந்த விஷமிகளால் ஏற்படுத்தப்பட்டுள்ள அவப்பெயரை களைய வேண்டிய ஒரு தார்மீகப் பொறுப்பு எமக்கு உண்டு என்பதால் மட்டுமே இதை எழுதுகின்றேன்.
நான் எனது குடும்பத்தவர்களின் அனுமதியோடு உங்களுக்கு அனுப்பி பிரசுரமான அந்த விளக்கத்தை ஜப்னா முஸ்லிம்தான் சோடித்து பிரசுரித்துள்ளது என்ற அவர்களின் குற்றச்சாட்டிலிருந்தே அவர்கள் எவ்வளவு கீழ்த்தரமான எண்ணமும் சிந்தனையும் கொண்டவர்கள் என்பது புரிகின்றது. மிகவும் கீழ்த்தரமான மூன்றாம் தர அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களால் தான் இப்படி எல்லாம் சிந்திக்கத் தோன்றும் என்று நான் கேள்வி பட்டுள்ளேன். இப்போது அனுபவத்தில் பார்க்கின்றேன். சோடனை மற்றும் சித்து விளையாட்டுக்களில் ஊறிப்போனவர்கள் இப்போது அதே எண்ணக்கருவில் மற்றவர்களைப் பற்றியும் சிந்திக்கின்றனர்.
மற்றது எனக்குத் தமிழ் தெரியாது என்றும் இதை நான் எழுதவில்லை என்பதும் அவர்கள் முன்வைக்கும் மற்றொரு குற்றச்சாட்டு. இது தான் அவர்கள் மடமையின் உச்சத்தில் இருக்கின்றார்கள் என்பதன் வெளிப்பாடு. தவளைக்கு தன் வாயால் கேடு என்பது போல் இந்த பேஸ்புக் விஷமிகளுக்கு அவர்களின் எழுத்துக்களால் கேடு. எனக்கு தழிழ் தெரியாது என்பது உண்மை. அது மட்டுமல்ல எனது தந்தை, தாய், பெரியப்பா, மற்றும் சாச்சா மார் என எவருக்குமே தமிழ் தெரியாது என்பது உண்மை. இதுவொன்றும் பெரிய கண்டுபிடிப்பல்ல. எங்களுக்கு தமிழ் எழுதத் தெரியாது. ஆனால் தமிழில் நன்றாக பேசவரும். அதுவும் அப்பழுக்கில்லாமல் கொழும்புத் தமிழில் வெளுத்துக்கட்டுவோம். எனது தந்தையின் கொழும்புத் தமிழை ரசிப்பதற்கென்றே ஒரு கூட்டம் உள்ளது எல்லோருக்கும் தெரிந்த விடயம். எமது தமிழ் பற்றி கூறும் ஒருவர் எனது தந்தையைச் சுற்றி இந்தளவு நுணுக்கமாகவும் தரமாகவும் தமிழில் எழுதக் கூடிய ஒருவருமே இல்லை. அப்படி யாராவது இருந்தால் அது தனக்கு தெரிந்திருக்கும் என்று சவால் விடுகின்றாரே அதுதான் கொஞ்சம் ஓவர். முதலில் இந்த நபர் குறிப்பிட்டிருக்கும் பெயரைக் கொண்டு அப்படி யாரையும் தெரியுமா என்று எனது பெரியப்பாவை கேட்டுப் பார்த்தேன். அப்படி யாரும் என் நினைவில் இல்லை என்று அவர் சொன்னார். இந்த சவால் பார்ட்டி யார் என்பதைப் பற்றி எமக்கு கவலை இல்லை. ஆனால் ஒரு விடயத்தை அவர் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.
இன்று அரசியல்வாதிகள் அமைச்சர்கள் பலர் அறிக்கைககளை ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். அதையெல்லாம் அவர்கள்தான் இருந்து எழுதுகின்றனரா? என்னுடைய தந்தை கூட ஏராளமான அறிக்கைகளை தமிழில் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளார் அவை முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பல சந்தர்ப்பங்களில் பத்திரிகைகளில் தமிழில் பிரசுரமாகி உள்ளன. அப்போதெல்லாம் எனது தந்தை எப்படி தமிழில் இவ்வாறான அறிக்கைகளை விட்டார் என்று இவர்கள் யோசிக்கவில்லையா? இப்போது நான் அனுப்பிய அறிக்கையில் மட்டும் ஏன் இந்த சந்தேகம்?
இந்த அறிக்கையை எழுதியவர் என்து தந்தையின் மிக நீண்டகால நெருக்கமான ஒரு நண்பர். அவர் ஒரு நாடறிந்த சிரேஷ்ட ஊடகவியலாளர். இலத்திரனியல் அச்சு ஊடகங்களில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்தவர். எனது தந்தையின் உணர்வுகளையும், அவர் சொல்ல வருகின்ற விடயங்களையும் அப்படியே அச்சொட்டாகப் புரிந்து கொண்டு அதை சற்றும் பிசகாமல் தூய தமிழில் எழுத்தில் வடிக்கக் கூடியவர். அதேபோல் தான் எனக்கும் ஊடக விடயங்களில் அவர்தான் ஆலோசனைகளை வழங்கினார். என்னுடைய உணர்வுகளையும் எண்ணங்களையும் புரிந்து கொண்டு இந்த விளக்க அறிக்கையைத் தயாரித்தவரும் அவர்தான். அதில் உள்ள கருத்துக்களுக்கு நானும் இப்போது எனது தந்தை உட்பட ஏனைய குடும்ப உறுப்பினர்களும் முழுப் பொறுப்பையும் ஏற்கின்றோம். இதில் யாரும் சர்ச்சைகளை கிளப்பத் தேவையில்லை. காரணம் எமது எண்ணங்களை நாம் இன்னொருவரைக் கொண்டு எழுத்தில் வடிப்பது ஒன்றும் உலகில் புதிய விடயமும் அல்ல. அது தவறானதும் அல்ல. எமது குடும்பத்துக்கே தெரியாத ஒருவர் இப்படி ஒரு நபர் எம்மோடு இருப்பதை அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனது தந்தை திறமைசாலிகளை இனம் கண்டு அவர்களை தனது சமுதாயப் போராட்டத்தில் பயன்படுத்தி வருகின்றார். சில வாய்ச்சவால்களை ஒதுக்கியும் வைத்துள்ளார். இந்த விளக்கம் கூட எமது குடும்பத்தவர்களின் உணர்வுகளையும் எண்ணங்களையும் புரிந்து கொண்டு எனது தந்தையின் நண்பரால்தான் எழுதப்படுகின்றது. எனவே ஜப்னா முஸ்லிம் இணையத்தின் மீது இந்த நபர்கள் சுமத்தும் குற்றச்சாட்டு மிகவும் அபாண்டமானது. ஊடக தொழில் தர்மங்களுக்கு அப்பாற்பட்டது. எனது தந்தை பற்றி ஜப்னா முஸ்லிம் இணையத்தில் வெளியான அனைத்து தகவல்களும் எம்மால் வழங்கப்பட்டவைதான். அவர்கள் இந்தக் கருத்துக்களுக்கு எதிராக வந்த விஷமிகளின் கருத்துக்களையும் பிரசுரித்து மிகவும் நிதானமாகவும், ஊடக தர்மத்தை கடைப்பிடித்தும் நடந்துள்ளார்கள்.
இனி அடுத்தகட்டமாக எமது எண்ணங்களையும் உணர்வுகளையும் புரிந்து கொண்டு எமக்காக தமிழில் அறிக்கைகளைத் தயாரித்து வழங்கும் அந்த ஊடகவியலாளர் யார்? எனக் கேட்;டோ அல்லது அவரைக் கண்டு பிடிக்கும் முயற்சிகளில் இறங்கியோ காலத்தை வீணடிக்காமல், ஆஸ்பத்திரி படுக்கையில் இருந்தவாறு கூட இந்த நாட்டின் தேசிய ஒற்றுமைக்காகக் குரல் கொடுக்கும் எனது தந்தையின் முயற்சிகளில் இணைந்து உதவி செய்யுங்கள் அல்லது அதற்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். இவை எதுவும் உங்களால் முடியாவிட்டால் நான் மீணடும் உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்வது முடிந்தால் உதவுங்கள் இல்லையேல் உபத்திரவம் செய்யாதீர்கள். அது தான் நாகரிகம்.
இந்த அறிக்கையின் நம்பகத் தன்மையை உறுதி செய்யும் வகையில் நானும் எமது குடும்ப அங்கத்தவர்கள் சிலரும் இதில் ஒப்பமிட்டுள்ளோம்.



cannot read this. It cannot be zoomed. Page Admin, please check it..
ReplyDeleteME TO MISS UNDERSTOOD ABOUT AZATH SALY SIR FAMILY WHEN I SEE THE NEWS ABOUT THERE PLAYING IN TEMPLE, AND ME TO BLAME TO AMINAA SALY AND HER MOTHER. BUT LATER WHEN SHE EXXPLAIN THE REASON, I UNDESTOOD ABOUT THERE SITUATION AT THAT TIME....
ReplyDeleteAZATH SALY SIR IZ THE ONE OF THE MUSLIM BEST LEADER WE FOUND AFTER MARHOOM ASHRAF...
SRILANKAN MUSLIMS NEED AZATH SALY SIR IN THERE FUTURE...
I TOO KINDLY REQUEST WITH OUR FACEBOOK FRIENDS AND ALL, PLZ DO NOT SHARE AND SPREAD THE WRONG IDEAS...
THIS IS THE TIME TO FOR US TO GET TOGETHER.
LETS BE IN ONE WORD...THAT WE ARE "MUSLIMS".....
I PRAY WITH ALMIGHTY ALLAH TO GET WELL AZATH SALY SIR SOON, AND GIVE HIM MUCH STRENGTH.....
பிணை கிடைத்தவுடன் துமிந்த சில்வா நோய் குணமாகி வைத்திய சாலையிலிருந்து வெளியானது போல் அஸாத் ஸாலி விடுதலையானதும் பத்வா கொடுத்த முப்தி மாரகள் வெளியேறி விட்டார்கள்.சத்தமேயில்லை.
ReplyDeleteஸஹீஹான ஹதீஸ் ஒனறு இப்படியிருக்கிறது.
"ஒருவர் இன்னொரவரைப் பார்த்து காபிர் எனறு கூறின் உண்மையிலேயே அவர் அல்லாஹ்வின் பார்வையில் காபிராக இல்லா விட்டால் கூறியவர் காபிராகி விடுவார்"
Please help to Azath Saliy to help srilankan Muslim. It is the time for Muslim congress to talk with Azath saliy and work for muslim, not for money. Akkarai pattu Athavullah brother u also need to talk with Azath, and muslim congress. pls be one muslim party.
ReplyDeleteAthavullah pls take of Akkaraipattu road. Do not think about money man, just finish the work.
Facebook ariwalikel eppo mubthiyanarkel?
ReplyDeleteஉலக முஸ்லிம்களின் பார்வையிலிருந்து 'ஜாப்னா முஸ்லி'மை ஓரங்கட்ட எடுக்கப்பட்ட முயற்சியையும் அழ்ழாஹ் தோற்கடித்து விட்டான்.
ReplyDeleteஎனவே, இன்னமும் இவர்களுக்கு பதிலளித்துக் கொண்டிருப்பதை விட்டு விட்டு உடல் தேறியதும் உடனடியாக தங்களது சமூக அரசியல் பணிகளை முன்னெடுத்துச் செல்லுங்கள்.
இலங்கை முஸ்லிம்களின் பேராதரவுடன், வடக்கு முஸ்லிம்களின் வாக்குப் பலத்துடன் வட மாகாண சபையை நாம் தமிழ் - முஸ்லிம் சிறுபான்மை மக்களின் ஆட்சித் தளமாகப் பிரகடனப்படுத்த வேண்டியதற்கான கடுமையான உழைப்பு ஆஸாத் அவர்களின் தலைமையில் எமக்கெல்லாம் இருந்து கொண்டிருக்கின்றது.
-காத்தான்குடி புவி-