கள்ள பணம் தொடர்பில் விழிப்புடன் செயற்பட பொலிஸார் வேண்டுகோள்
(ஸாதிக் ஷிஹான்) போலியாக அச்சிடப்படும் கள்ள நோட்டுக்கள் தொடர்பில் விழிப் புடனும், அவதானத்துடனும் செயற் படுமாறு பொலிஸ் தலைமையகம் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.
கள்ள நோடுக்களை அச்சிடுதல், விநியோகித்தல், புழக்கத்துக்கு விடுதல் தொடர்பில் தகவல்கள் தெரிந் தவர்கள் உடனடியாக 119 என்ற பொலிஸ் அவசர அழைப்புக்கோ, அருகி லுள்ள பொலிஸ் நிலையங்களுக்கோ தெரியப்படுத்துமாறு பொலிஸ் தலைமையகம் வேண்டுகோள் விடுக்கிறது.
இந்நிலையிலேயே கள்ள நோட்டுக்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளும் பொலிஸ் தலைமையகம் அந்த கள்ள நோட்டுக்களை அடையாளம் காண்பதற்கான சில முக்கிய குறிப்புக்களை தந்துள்ளது.
* ரூபா நோட்டில் காணப்படும் நீர் அடையாளம் (Water Mark) உள்ளதா என்பதை பரிசோதிக்க வேண்டும்.
* நோட்டின் குறுக்காக காணப்படும் பாதுகாப்பு நூல் அடையாளம் உரிய முறையில் உள்ளதா என்பதை அவதானிக்க வேண்டும்.
* கள்ள நோட்டு உண்மையான நோட்டை விட தடிப்பானதாக காணப்படும். சில நோட்டுக்களில் இரண்டு தாள்கள் ஒட்டப்பட்டிருக்கும்.
* கள்ள நோட்டின் நிறங்கள் உண்மையான நோட்டை விட மாறுபட்டதாக காணப்படும் இதனை உரிய முறையில் அவதானிக்க முடியும்.
* ரூபா நோட்டுக்கள் பலவற்றை கொடுக்கல் வாங்கல் செய்யும் போது அது தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். ஏனெனில் அதற்கு நடுவில் போலி நோட்டுக்களும் இருக்கலாம்.
போலி நோட்டுக்களை உங்களிடம் வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே அது தொடர்பில் உடனடியாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தவும் என்றும் பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொள்கிறது.

Post a Comment