எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் ஒன்றுகூடல்
(முசலியூர்.கே,சி.எம்.அஸ்ஹர்)
மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களின் ஒன்று கூடல் ஒன்று எதிர்வரும் 18 ஓகஸ்ட் 2013ல் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் தற்போதை அதிபர் திரு சரீப்தீன் அவர்களைத் தலைமையாகக் கொண்ட குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
எருக்கலம்பி;;ட்டி மத்திய கல்லூரி வட மாகாணத்தில் மிகவும் பிரபல்யம் வாய்ந்த முஸ்லிம் பாடசாலைகளில் மிகவும் முன்னணி வகிக்கும் ஒன்றாகும். 1990 முஸ்லிம்களின் பலவந்ந வெளியேற்றத்திற்கு முன்னர் இலங்கையின் நாலா பிரதேசங்களில் இருந்தும் மாணவர்கள் இக் கல்லூரியை நோக்கி வந்து கல்வியைப் பெற்றுச் சென்றுள்ளனர். அவ்வாறு வந்து கல்வி கற்று உயர்ந்தோர் இன்றும் இப்பாடசாலையின் சிறப்பைப்பற்றிப் பேசிக்கொண்டுள்ளனர்.
பேராதனைப் பல்கலைக்கழக புவியியல்துறை கலாநிதி எஸ்.எச் ஹஸ்புல்லா,கொழும்புப் பல்கலைக்கழக அரசியல்துறை கலாநிதி எஸ்.எ;ம்.அனிஸ்.மகப்பேற்று நிபுணர் அக்பர்,சுங்க அதிகாரி லுக்மான் சஹாப்தீன்,பலவைத்தியர்கள்,பலபொறியியலாளர்கள்,கணக்காளர்கள்,வெளிநாட்டுத் துர்துவர்கள்,சட்டத்தரணிகள்,அமைச்சரகள்,பாராளுமன்ற உறுப்பினர்கள்.நிருவாகசேவை அதிகாரிகள்,கல்வி அதிகாரிகள்,அதிபர்கள்,ஆசிரிர்கள்.வர்த்தகர்கள் என்று இப்பாடசாலையின் சாதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
இடப்பெயர்வின் பின்பு இப்பாடசாலையின் செயற்பாடுகள் செயலிழந்தன.இப்பகுதியில் மீண்டும் முஸ்லிம்கள் குடியேறத்தொடங்கியதும் இப்பாடசாலை பீனிக்ஸ் பறவையாக மீண்டும் தோற்றம் பெற்றது.தற்போது இக்கல்லூரியின் கல்விச் செயற்பாடுகளும்,இணைப்பாடவிதான செயற்பாடுகளும் சிறப்பாக உள்ளன.
பழைய மாணவர்களின் ஒன்று கூடலில் பாடாலையை மேலும் எப்படி முன்னேறச் செய்யலாம்.அதற்கு பழைய மாணவர்கள் எத்தகைய பங்களிப்புச்செய்யலாம் போன்ற விடயங்கள் ஆராயப்படவுள்ளன.இப்பாடசாலையின் பழைய மாணவர்கள் அனைவரும் இவ் ஒன்றுகூடலில் கலந்துகொண்டு தங்களின் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்குமாறு ஏற்பாட்டுக்குழுவினர் வேண்டிக்கொள்கின்றனர்.

Post a Comment