பௌத்த தேரரின் மறைவினால் ஏற்படவிருக்கும் விபரீதங்களில் இருந்து..!
அன்பார்ந்த இலங்கை வாழ் முஸ்லீம்களே ! நாம் விரும்பியோ விரும்பாமலோ பல விடயங்கள் நடந்தேறிக்கொண்டிருக்கின்ற இவ்வேளையில் தன்னுடலில் பெற்றோலை ஊற்றி இந்திரட்ன ஹாமதுரு அவர்கள் தன்னைத்தானே எரித்து,எரிகின்ற இஸ்லாமிய எதிர்ப்புத் தீயின்மேலே, மீண்டும் ஒரு பங்கு பெற்றோலை ஊற்றிவிட்டு மறைந்து விட்டார் !
தீவிர ஹெல உறுமய பக்தர் என அடையாளம் காணப்பட்டுள்ள அவர் தன்னைத்தானே எரித்துக்கொள்ள முன்னரும், எரிந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னரும் பயன்படுத்திய சொல் பிரயோகங்கழும் , கூப்பாடுகளும் நமக்கென்னவோ மாதிரி இருந்தாலும் எந்தவொரு பௌத்த சிங்களவரது அடிமனதிலும் உறங்கிக்கிடக்கின்ற தான் பௌத்தன் என்கின்ற உணர்வை, மிகவும் சாதுர்யமாக தட்டிவிட்டிருக்கின்றது என்று கூற ஐயம் கொள்ளத்தேவையில்லை.
இது இவ்வாறிருக்கும்போது இதனை அடியொற்றி நடைபெறப்போகின்ற முஸ்லீம் எதிர்ப்பு நடவடிக்கைகள் நமது இன்றைய நிலைப்பாட்டை மிகவும் மோசமான நிலைக்கு இட்டுச்செல்லும். அவ்வாறான நிலைக்கு இட்டுச் செல்லக்கூடியவற்றில் சில உடனடியாகவும் சில காலப்போக்கிலும் நடைபெற வாய்ப்புண்டு .
உடனடியாக ஏற்படவிருக்கின்ற விபரீதங்களிலிருந்து முஸ்லீம்களைக் காப்பாற்ற , இலங்கை முஸ்லீம்களை வழிநடாத்தக்கூடிய குழுவினர் என அடையாளம் காணப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த மரணம் வெறும் ஒரு சம்பவமல்ல ஒரு வரலாறாகி விட்டது. இவரது அந்திமக்கிரிகைகள் நடைபெறும்வரை முஸ்லீம்கள் சிறுபான்மையாக வாழ்கின்ற பிரதேச முஸ்லீம் இளைஞர் யுவதிகள் மிகவும் கவனமாகவும் , விழிப்பாகவும் இருக்க வேண்டும். எந்த ஒரு சிறு உரசலும் இலகுவில் தீப்பற்றிக்கொள்ள வகை செய்யும். அத்தியாவசியமான தேவைகளானாலும் சில நாளைக்கு வீட்டை விட்டு வெளியேறுவதை முடிந்தளவு குறைத்துக்கொள்ளுங்கள். பெரும்பான்மை இன சகோதரர்களது முன்னால சத்தமிட்டு சிரித்து சந்தோசமாக இருப்பதை காட்டிக்கொள்ளாதீர்கள் , சுற்றுப்பிரயாணங்கள் செல்வதை தற்காலிகமாக தள்ளி வையுங்கள், வியாபாரம் செய்பவர்கள் முடிந்தளவு விட்டுக்கொடுப்பதுடன் பொறுமையாகவும் இருங்கள்,குறிப்பாக வாலிபர்களே மிக மிக எச்சரிக்கையாக இருங்கள். சைத்தான் பொறுமையை உங்களிடம் இருந்து தூரமாக்கிவிட்டு கோபத்தை உங்களுக்கு அருகாமையாக்கி விடுவான்
முஸ்லீம் ஊடகங்கள் மறைந்த தேரரது மரணத்தை எதிர் மறையாக விமர்சனம் செய்வதை நிறுத்துவதுடன்,முடிந்தால் அனுதாபத்தை வெளிப்படுத்துதல் வேண்டும்.
பேஸ்புக், மற்றும் ஏனைய ஊடகங்களில் பிக்குவின் மரணத்தை இஸ்லாமிய சார்புடன் விமர்சனம் செய்வோர் தமது நடவடிக்கைகளை உடன் நிறுத்த வேண்டும். நாம் பூனை கண்ணை மூடிக்கொண்டு பால குடிப்பது போல இருந்து விடக்கூடாது. முஸ்லீம் உலமாக்கள் முஸ்லீம்ம்களது பாதுகாப்பானதும்,நிம்மதியானதுமான வாழ்க்கைக்கு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுமாறு முஸ்லீம் சமூகத்தை வலியுறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
யா அல்லாஹ் இலங்கை முஸ்லீம்களை ஈமான் கொள்ளாதவர்களிடம் இருந்து பாதுகாப்பாயாக...!ஆமீன்...!!

nalla sahunamillai. kavanamaha nadakkavendiya kaalam.
ReplyDeletenalla sahunamillai. kavanamaha nadakkavendiya kaalam.
ReplyDeleteYour advice is correct. But it’s not our mistake from beginning we are Muslims being patience. That s the reason still no any major problem but behind this story have some group so government must investigate for this situation govt Muslims minister altogether must send letter to the president. the true always will win. Truth
ReplyDeleteஇஸ்லாம் என்றால் அமைதி, சாந்தி, சமாதானம், ஆனால் இன்று இந்த அமைதியை எந்த இஸ்லாமிய நாடுகளிலாவது பார்க்க முடிகிறதா? பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சிரியா, எகிப்து, லிபியா, ஈரான், ஈராக் etc நபி(ஸல்) அவர்கள் காலத்தில் ஏராளமான போர்கள் நடந்தன. அவை அனைத்துமே தற்காபிற்க்காகவே நடைபெற்றது. அதுவும் இறைவனிடம் இருந்து அனுமதி பெற்ற பிறகே போர்க்களத்தில் இறங்கினார்கள். அதற்கு முன்பு எதிரிகளால் ஏற்பட்ட அனைத்து துன்பங்களையும் சகித்துக் கொண்டார்கள்.
ReplyDeleteமுஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளிலும்சரி, சிறுபான்மையாக வாழும் நாடுகளிலும் தாங்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை நெறிமுறையில் இருந்து கற்றுக்கொள்ளவேண்டும். பிறருடைய மரணத்தில் நமக்கு என்ன மகிழ்ச்சி வேண்டியிருக்கிறது. எல்லோரும் ஒரு நாள் மரணமடையக்கூடியவர்கள்தாம். நபி(ஸல்) அவர்கள் யூதனுடைய சடலம் கொண்டு செல்லப்படும் போது எழுந்து நின்று மரியாதை செய்தார்கள். மறுமையின் மீது நம்பிக்கைகொண்ட ஒரு முஹ்மின் எந்த ஒரு மதத்தை சார்ந்தவனையும் தன்னுடைய எதிரியாக கருதமாட்டான். பிறருடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் பழக்கத்தை நாம் ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். முஸ்லிம்களாக இருந்தாலும் பிற மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளவேண்டும். நாம் எப்படி நடக்கின்றோமோ அதைப்பொறுத்தே மற்றவர்கள் நம்முடன் நடந்து கொள்வார்கள்.
மொத்தத்தில் நீங்க சொல்ல வருவது என்ன நடந்தாலும் நாங்கள் அந்தந்த நேரத்தில் தலைமறைவாகி அப்பாவிகளாக காட்டி ஒதுங்கி நின்றால் இது போன்ற பிரச்சினைகள் தீரும் என்கிறீர்களா ?
ReplyDeleteநாங்கள் சும்மா தானே இருக்கிறோம் இதற்கு மேலும் என்ன செய்ய ? நீங்கள் சொல்வது புத்தி மதி இல்லை. பகிரங்க கோழைத்தனம் , சொந்த உரிமைகளை விட்டு , தன் மானத்தை இழந்து சுதந்திரம் இல்லா அடிமை வாழ்வு எதற்கு ? செத்தே போகலாமே ?
போ ! போய் மியன்மார்ல சாகு
DeleteINSHA allahu Mohamed Ismail umer
ReplyDeleteயா ! அல்லாஹ் !
ReplyDeleteஎங்கள் சகோதரர்களை , சகோதரிகளை பாதுகாப்பாக.....!
jafarla khan நல்ல கருத்துள்ள பின்னூட்டம். அனைத்துக்கும் மேலாக தற்போது நமது நாட்டில் மட்டுமல்ல அனைத்துலக நாடுகளிலுமே முஸ்லிம்களுக்கெதிராக வன்முறைகளும் எதிர்ப்புகளும் காரணமில்லாமலே கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன, இது நமக்கு புதிதாக இருப்பினும் இல்லாமல் விடினும் இறுதி நாள் நெருங்க நெருங்க இவைகள் எல்லாம் நடக்கும் முஸ்லிம்கள் அன்னிய மதத்தவர்களால் அடிவாங்கப்பட்டு பின்பு முஸ்லிம்களே உலகை அழ்வார்கள் என்பது இறைவன் நமக்கு சொல்லவில்லையா? ஆகவே எல்லாம் இறைவன் நாட்டப்படியே நடக்கின்றன ஆதலால் நாம் நிறையவே பொறுமைகாக்கவேண்டும் அத்துடன் நமது ஈமானை இன்னும் பலப்படுத்திக்கொள்ளவேண்டும் அத்துடன் தொழுகையைக்கொண்டும் நற்காரியங்களைக்கொண்டும் அல்லாஹ்விடம் நாம் அனைவரு நேரம் தவறாமல் நமது சமுதாயத்தினருக்காக துஆச்செய்வோமாக. அல்லாஹ் நம் அனைவரது ஈமானையும் பலப்படுத்துவானாக... நம அனவரையும் பாதுகாப்பானாக...
ReplyDeleteMy Dear Umar Ali-- Muslimkalai Valienadatha Thalamai Ellatha Samukamaka Poiveeddathu Odukkapdda Samuthukkum (Allah )Eraivan Thunai
ReplyDeleteJammiyathu Ulama Maheentha Rajapajaveedam Enna Saiveandum Enru Kaddapiedpaduthan Mudivu Areevieparkal (Kunooth Othuvathai Nieruthavathu Poanru)
=============Kalmunai Mohamed Fowse)=======================
Hi,
ReplyDeleteநபி (ஸல்) அவர்களின் முன்மாதிரிகளை தங்களுக்கு செலவில்லாத அல்லது வசதியான விடயங்களுக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ளும் நவீன முஸ்லீம்கள்தானே இப்போது இருப்பவர்களில் அதிகமானோர்..!
உண்மைதான் இதுவரை நாம் பொறுமையுடன்தானே இருந்தோம் இன்ஷாஅல்லாஹ் இதன் பின்பும் அப்படியிருக்க வேண்டும். அதற்காக நாம் கோளைகளாக இருக்க வேண்டியதில்லை இடத்துக்கு தகுந்தபடி நடக்கவேண்டும். அல்லாஹ் போதுமானவன் ஹஸ்பியல்லாஹ்
ReplyDeletenabi eesa alaisalam oru kannathil adithaal maru kanetheyum kodutharkal muhamed nabi appadi saiyavum illai sollavum illai ellam avan seyel
ReplyDeleteinsha allah. kodiyewarhalidam irunthu allah emmai kappan
ReplyDeleteWELL SAID JULIAT DESOSA
ReplyDeleteiththaku allah hakkathu kaathim wala thmuththoona illah anthum muslimoon
ReplyDelete