ரவூப் ஹக்கிம் சட்டத்தை முன்மொழிந்தாலும் முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்கும் - ஹசன் அலி
இலங்கையில் மாகாண சபைகளுக்கு உள்ள அதிகாரங்களை குறைக்கும் என்று கருதப்படுகின்ற 19 ஆவது சட்டத் திருத்தத்துக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
மாகாண சபைகளுக்கு குறைந்த அளவிலேனும் அதிகாரம் வழங்கும் 13 ஆவது சட்ட திருத்தத்துக்கு மாறாக, இந்தப் புதிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்படுகிறது என்று கூறப்படும் நிலையில், அதற்கு எதிர்ப்புகள் எழ ஆரம்பித்துள்ளன.
விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த 19 ஆவது சட்டத் திருத்தத்தின் மூலம் ஜனாதிபதியின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகளாக குறைக்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.
இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு, அதிகாரப் பகிர்வு உட்பட பல விஷயங்கள் 19 ஆவது சட்டத் திருத்தத்தின் மூலம் தீர்க்கப்படும் என்று அரச தரப்பு கூறுகின்றது.
எனினும் 13 ஆவது சட்டத் திருத்தத்தின் மூலம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் புதிய சட்டத்திருத்தத்தின் மூலம் இல்லாது செய்யப்படும் என்று அறியப்படுகிறது.
மாகாண சபைகளின் அதிகாரங்களை கட்டுப்படுத்தும் அல்லது இல்லாது ஆக்கும் என்கிற காரணத்தாலேயே 19 ஆவது திருத்தத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரிக்காது என்று அதன் பொதுச் செயலர் ஹஸன் அலி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
தமது கட்சி "13 ஆவது அரசியல் திருத்தத்தில் கை வைப்பதற்கு" எந்த வகையிலும் துணை போகாது எனவும் அவர் மேலும் கூறுகிறார்.
இலங்கையில் மாகாண சபைகளுக்கு உள்ள அதிகாரங்களை குறைக்கும் என்று கருதப்படுகின்ற 19 ஆவது சட்டத் திருத்தத்துக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு இல்லை.
தற்போது இருக்கின்ற 13 ஆவது சட்டத் திருத்தமே முழுமையான அதிகாரப் பரவலாக்கம் அல்ல என்பதே தமது கட்சியின் நிலைப்பாடாகும் எனவும் ஹஸன் அலி மேலும் தெவித்தார்.
நாட்டின் நீதித்துறை அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூஃப் ஹக்கிம் அவர்கள் 19 ஆவது திருத்தச் சட்டத்தை முன்மொழிந்தாலும் அதை தமது கட்சி எதிர்க்கும் எனவும் ஹஸன் அலி சுட்டிக்காட்டுகிறார்.

Hassanali
ReplyDeleteYour party decisions are taken by Rajapakse. Finally your party will support the amendment stating that the amendment is beneficial for the Muslims.
Dont try to cheat us Mr Hasanali.
ReplyDeleteWe have seen enough.
You, your leader and the others who are still clinging onto the racists will never change.
We trust only allah and pray him to save us and the future grneration from these ajahils.
மாஷா அல்லாஹ்... சந்தோசம்.. வாக்கு மாறாம இதே நிலைல இருந்தா சரி செயலாளர் அவர்களே..
ReplyDelete13 ஆவது அரசியல் திருத்தச்சட்டத்தில் கைவைப்பதால் இன்னும் நமது உரிமைகள் பறிக்கப்படுவதாயின் கண்டிப்பாக எதிர்க்கவேண்டிய அவசியம் நமக்கு உண்டு. எல்லாவகையான சட்டங்களையும் அதிகாரங்களையும் ஒருவர்தான் கையாளவேண்டுமாயின் எதிர்கட்சியும் தேவையில்லை மந்திரிககளும் தேவையில்லை மாகாண சபையும் தேவையில்லை.
ReplyDeleteஅதிகாரங்களும் உரிமைகளும் இதுவரைக்கும் ஓரிடத்திலே குவிகின்ற காரணத்தால்தான் ஊழல்களும் அனியாயங்களும் அடாவடித்தனங்களும் தலைதூக்கி ஆடுகின்றது. கேட்க யாருக்கும் அதிகாரமில்லாதபடியால்தான் இன்று தாம் நினைத்ததையெல்லாம் சாதித்து நாட்டு மக்கள் பாரிய வாழ்க்கைச்செலவு நெருக்கடியையும் அதன்மூலம் பல்வேறு சிக்கலான சூழ் நிலைகளையும் சந்தித்தவண்ணமுள்ளனர். இன்நிலை மாறவேண்டும் நாம் மாற்றவேண்டும் அதற்கு தேவையான கேள்விகளை எழுப்புவதோடு உரிய வழியில் உரிமைகளை பெற்றெடுக்க அனைவரும் ஒத்துழைக்கவேண்டியது தற்போது மிக மிக அவசியம்.
This comment has been removed by the author.
ReplyDelete