Header Ads



விமர்சனங்கள் குறித்து ஆஸாத் சாலி குடும்பம் பதில் வழங்கும்..!


ஆஸாத் சாலியின் விடுதலை துரிதப்படுத்தப்ட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள ஆஸாத் சாலியின் குடும்பம், ஆஸாத் சாலியின் மகள் பௌத்த விகாரைக்கு மலர் தட்டு கொண்டு போனரைம தொடர்பில் விரைவில் உரிய விளக்கம் வழங்கப்படுமென அறிவித்துள்ளது.

இந்த நெருக்கடிமிக்க நேரத்தில் தமது இயக்க இலாபங்களுக்காக அல்லது அரசியல் நிகழ்ச்சி நிலுக்காக ஆஜாத் சாலியையையோ அல்லது அவரது குடும்ப அங்கத்தவர்களையோ விமர்சிப்பது ஆரோக்கியமானதல்ல எனவும் ஆஸாத் சாலிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

பேஸ்புக் மற்றும் சில முஸ்லிம் சார்பு இணையங்களில் ஆஸாத் சாலி மற்றும் அவரது குடும்பம் தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது அவரது விடுதலையை விரும்பாத சக்திகளுக்கு ஊக்கத்தை கொடுக்குமெனவும் ஆஸாத் சாலியின் குடும்பத்தினர் சார்பில் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அறியப்படுத்தப்பட்டது.

அதேவேளை ஆஸாத் சாலியின் விடுதலையை துரிதப்படுத்தும் வகையில் திட்டமிட்டபடி நாளை வியாழக்கிழமை நாடு பூராகவும் துஆ பிரார்த்தனை நடைபெறுமெனவும் அந்த வட்டாரங்கள் கூறின.

மேலும் ஆஸாத் சாலியை தடுத்து வைத்திருப்பது சட்டவிரோதமானது எனக்கூறி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு நாளை வியாழக்கிழமை உயர் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

11 comments:

  1. Releasing of Mr. Sally is a national important to all communities who respect law & order of this country. Dragging the religion into this matter is treachery against the man who voiced not only for Muslim community but also against the corrupted Sri Lankan government.

    ReplyDelete
  2. எமது தலைவர்கள் திருந்துவார்கள் என என்ற பகல் கணவுகளை கலைத்து விட்டு நாமும் சில நடவடிக்ககளை முன்னெடுக்க வேண்டும்.

    ReplyDelete
  3. அசாத் சாலி கைதிற்கு ஹகீம் எதுவும் செய்யவில்லை என்று கூறும் இவர்கள் ரவுப் ஹகீம் கைதானால் கொண்டாடக்கூடியவர்கள். இந்தக்காலத்தில் எந்தவொரு தனிமனிதனிற்கும் பின்னால் சமூகம் அவசரப்பட்டு செல்லுவது புத்திசாலித்தனமல்ல அவர் நல்லவராகக்கூட இருக்கலாம் காரணம் தனிமனிதர்களை ஒரே இரவில் மாற்றக்கூடிய சாத்தியங்கள் நிறையவே உள்ளன .
    முஸ்லிம் காங்கிரஸ் இலங்கை முஸ்லிம்களின் 20% க்கு குறைவான வாக்குகளையே பெற்ற கட்சியாகும் ஆனால் ஏதாவது பிரச்சனை என்று வரும் போது முஸ்லிம் காங்கிரசை மட்டுமே ஏசுகின்றனர். இவ்வாறு ஏசுகின்றவர்கள் கூறுகின்றனர் அடுத்த தேர்தலில் மரத்தை வெட்டி எறிவோம் என. ஏதோ இவர்கள் எல்லாம் கடந்தகாலங்களில் மரத்திற்கே வாக்களித்தவர்கள் போல . முஸ்லிம் காங்கிரசிற்கு அம்பாறையில் 60% ம் திருகோணமலையில் 50% ஆன முஸ்லிம்கள் மாத்திரமே வாக்களித்துள்ளார்கள் . இவ்வாறு வாக்களிக்காமலே முஸ்லிம் காங்கிரசை எப்படி இவர்கள் தங்களுக்காக உரிமை கொண்டாட முடியும் .

    அசாத்சாலி போன்றோர் ஹகீமை மாத்திரமே ஏசுகின்றனர் மற்றைய அமைச்சர்கள் அனைவரும் அவரது சகாக்களாம் இது என்ன நியாயம் என்று விளங்கவில்லை.

    தற்போதைய சூழலில் முஸ்லிம் காங்கிரசை அழித்துவிட்டால் எதிர்காலத்தில் எமக்கென ஒரு அரசியல் கட்சியினை உருவாக்குவதற்கு கூட அனுமதி கிடைப்பது கஷ்டம்தான்.

    அதற்காக காங்கிரசில் எந்தப்பிழையும் இல்லையென்று கூறமுடியாது அதனை சீர் செய்வதற்காகவும் நாம் போராட வேண்டும்

    அதேவேளை அசாத்சாலி தனி நபராக இந்த அரசை எதிர்த்து போராடியது வரவேற்கப்பட வேண்டியது என்றாலும் அவருக்கு இவ்வாறு ஒரு நிலை ஏற்படும் என்பது பலரும் எதிர்பார்த்ததுதான் . அவரது அணுகுமுறை பிழையானது.

    ஆனால் எமது இன்றைய பிரச்சினைகளுக்கு இலங்கையில் இருந்துகொண்டு அசாத்சாலி போன்று பேசுவதன் மூலம் எந்த தீர்வும் கிடைக்கப்போவதில்லை.

    இலங்கை முஸ்லிம்களின் தலைமைத்துவம் சுத்தந்திரமான வெளிநாடொன்றில் உருவாக்கப்படவேண்டும்
    இலங்கையில் ஏதாவது ஆர்பாட்டங்கள் ஏற்பாடு செய்தால் ஏற்பாட்டாளர்களுக்கு மரண அச்சுறுத்தல் உள்ளதால் ஆர்பாட்டங்கள் வெளிநாட்டு இலங்கை முஸ்லிம்களின் தலைமைத்துவம் மூலம் அழைப்புக்கள் விடுக்காப்பட வேண்டும்
    இங்குள்ள எந்த முஸ்லிம் தலைமைத்துவத்தாலும் எதனையும் சாதிக்க முடியாது
    தலைமைத்துவம் வெளிநாட்டில் இயங்கும் பல முன்னுதாரணங்களை நாம் காணலாம் உதாரணம் தமிழர்கள், துனீசியா இஸ்லாமிய தலைவர் , இன்னும் பல

    தமிழர்களைவிட இலங்கை முஸ்லிம்கள் வேறுபடுவது உலகம் முழுவதும் முஸ்லிம்கள் பரந்து வாழ்கின்றார்கள் அவர்களின் அழுத்தங்களின் மூலம் நிச்சயமாக நிலைமையை சீராக்க முடியும்

    ReplyDelete
  4. சோதனைகள் வரும் போது இஸ்லாமிய கொள்கையை விட்டுக் கொடுக்காது எவ்வளவு தாக்குப் பிடிக்கிறோம் என்பதில் தான் நமது ஈமானும் வெற்றியும் தங்கியுள்ளது.

    ஆனால் அவரைக் கைது செய்து 6 நாட்கள் கூட ஆகாத நிலையில் இந்தக் குடும்பம் பூத்தட்டுகளுடன் விகாரைக்கே சென்று விட்டதே!!

    ReplyDelete
  5. -
    சோதனைகள் வரும் போது இஸ்லாமிய கொள்கையை விட்டுக் கொடுக்காது எவ்வளவு தாக்குப் பிடிக்கிறோம் என்பதில் தான் நமது ஈமானும் வெற்றியும் தங்கியுள்ளது.

    ஆனால் அவரைக் கைது செய்து 6 நாட்கள் கூட ஆகாத நிலையில் அவரது குடும்பம் பூத்தட்டுகளுடன் விகாரைக்கே சென்றமையை எப்படி நியாயப்படுத்தப் போகிறார்களோ தெரியவில்லை.

    எப்படியிருப்பினும் அவரது விடுதலைக்காக ஒற்றுமையுடன் செயற்படுவோம்! அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் துஆ செய்வோம்!!

    ReplyDelete
  6. இதுல விளக்கம் கொடுக்க ஒன்றுமில்லை,,, அல்லாஹ்விடம் தௌபா செய்துவிட்டு தூய இஸ்லாத்தை பின்பற்றுங்கள்,,,, இந்த உலகம், அரசியல் மற்றும் அனைத்து விடயங்களும் அதற்கு அப்புறம்,,,,,
    தயவு செய்து அந்த இணையத்தளம் அதை சொல்லுது இதை சொல்லுது என்று அல்லாஹ் கொஞ்சமும் விரும்பாத செயலுக்கு வக்காலத்து வாங்க வேண்டாம்,,, இஸ்லாத்துக்குள் இருந்துகொண்டு தான் முஸ்லிம்களுக்காக போராட வேண்டும்,,,

    ஈமானை அடகு வைத்து பன்சலைக்கு பூத்தட்டு கொண்டு போவதும் உண்ணாவிரதம் என்று தன்னைதானே கஷ்டப்படுத்தி அளித்துக்கொல்வாதும் யார் சொன்ன இஸ்லாம்??????

    அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிந்தவன்,,,,,,,,,

    ReplyDelete
  7. அல்லாஹ்விடம் மாத்திரம் இரைஞ்ச வேண்டிய நேரத்தில் இப்படியாகவா நடப்பது இது சிர்க் இணைவைத்தல் இதை செய்த நிலையில் எவர் தவ்பா செய்யாது மரணித்தார்களோ அவர்களை அல்லாஹ் மண்ணிக்க மாட்டான் எனவே என்ன செல்லியும் இவர்கள் இதை பிழை என்று உணர்ந்து அல்லாஹ்விடம் மண்ணிப்புக் கோராத வரை இதை ஒரு உண்மையான முஃமின் சரி காண மாட்டான்
    எமக்கு அசாத் சாலி அல்ல உலகில் உள்ள அனைத்தையும் மற்றும் எமது உயிரையம் விட மேலானது நாம் ஏற்றிருக்கும் ஈமான் இதை பரிபோக நாம் இடம் அளிக்கக்கூடாது

    ReplyDelete
  8. இதுல விளக்கம் கொடுக்க ஒன்றுமில்லை,,, அல்லாஹ்விடம் தௌபா செய்துவிட்டு தூய இஸ்லாத்தை பின்பற்றுங்கள்,,,, இந்த உலகம், அரசியல் மற்றும் அனைத்து விடயங்களும் அதற்கு அப்புறம்,,,,,
    தயவு செய்து அந்த இணையத்தளம் அதை சொல்லுது இதை சொல்லுது என்று அல்லாஹ் கொஞ்சமும் விரும்பாத செயலுக்கு வக்காலத்து வாங்க வேண்டாம்,,, இஸ்லாத்துக்குள் இருந்துகொண்டு தான் முஸ்லிம்களுக்காக போராட வேண்டும்,,,

    ஈமானை அடகு வைத்து பன்சலைக்கு பூத்தட்டு கொண்டு போவதும் உண்ணாவிரதம் என்று தன்னைதானே கஷ்டப்படுத்தி அளித்துக்கொல்வாதும் யார் சொன்ன இஸ்லாம்??????

    அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிந்தவன்,,,,,,,,,

    ReplyDelete
  9. everything is okay please you all must accept the wrong which you all have committed don't try to justify the activities you all have done if you do this your situation will be changed.
    the only way is you all must apologize with Almighty Allah and recite Kalimah Shaadath and be firm not repeat the same.

    please don't try to play the fool in Islamic concept by justifying your activity.

    ReplyDelete
  10. சிர்க் செய்து விட்டு அதற்கு விளக்கமா? நாம் தான் அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு கேற்க வேண்டிய நிலையில் உள்ளோம், எதற்காக தெரியுமா? உங்கள் குடும்பத்துக்காக பிரார்த்தனை புரிந்தமைக்காக. உங்கள் குடும்பம் அல்லாஹ்வின் தவ்ஹீதை எதிர்த்தது மட்டுமல்ல,அழிக்கவும் அல்லவா சூழச்சி செய்துள்ளீர்கள் ஆனால் சூழ்ச்சிகாரனுக்கெல்லாம் சூழ்ச்சிகாரணாகிய அல்லாஹ்வின் சூழ்ச்சியை எமக்கு தெளிவு படுத்திய அல்லாஹ்விற்கே புகழ் அணைத்தும்.

    ReplyDelete
  11. சகோ, அஷாத்சாலி விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை அதற்காக இணையத்தின் மூலம் முதல் குரல் கொடுத்தவர்களில் எமது பங்கும் முக்கியமானது. நாளை நடைபெறவுள்ள தூஆ மற்றும் ஹர்த்தால் ஆகியவற்றுக்கு நமது பங்களிப்பு என்றும் உண்டு.. ஆனால் ஆமீனா சாலி அவர்கள் எந்தக்காரணம் சொன்னாலும் அல்லாஹ்வுக்கு இணை வைத்த செயலை முஸ்லிம்கள் அங்கிகரிக்க மாட்டார்கள்.. அவர்களின் குடும்பத்திற்கு இறைவன் நல் வழி காட்ட வேண்டும் இறைவனால் மன்னிக்கப்படாத பாவம் இணை வைத்தலாகும்.. அதை நியாயப்படுத்தி இன்னுமொரு அறிக்கை விட்டு முஸ்லிம் சமூகத்தின் விமர்சனத்திற்கு சகோதரி ஆளாவதை நான் விரும்ப வில்லை எனவே அது பிழையென உணர்ந்து இறைவனிடம் மன்னிப்புக் கோரி விட்டு இது சம்மந்தமாக அவர் மெளனமாக இருப்பதே சமகாலத்திற்கு பொருந்துமென நான் நினைக்கிறேன்..

    ReplyDelete

Powered by Blogger.