Header Ads



'சமகாலத்தில் மக்களுடன் ஹிஸ்புல்லாஹ்' பொதுக்கூட்டம் (படங்கள்)


(பழுளுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டதில் இடம்பெற்று வரும் அபிவிருத்தித் திட்டங்கள் அன்மையில் ஏற்பட்ட தடைகள் அரசியல் சூழ்நிலைகள் சமகாலத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின்'சமகாலத்தில் - மக்களுடன் - பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்'எனும் தொனிப்பொருளிலான பொது மக்களுக்கு விளக்கமளிக்கும் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை இரவு 08.40 மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தலைமையுரையை காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் நிகழ்த்தியதுடன் அதற்கடுத்ததாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் உரையாற்றினார்.

இறுதியாக  மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பதில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மணித்தியாளமும் 50 நிமிடமும் சிறப்புரையாற்றினார்.




3 comments:

  1. அன்பின் இஸ்லாமிய சகோதரர்களுக்கு
    அஸ்ஸலாமு அலைக்கும்
    மக்கள் நடமாடும் பாதைகளை சீரமைப்பது ,மக்களுக்கு குடிநீர் வழங்குவது,அவர்களுக்கு கல்வி வசதிகளை வழங்குவது ,மேலும் அவர்களின் அன்றாட காரியங்களை இலகு படுத்துவது போன்ற மக்கள் நலன் பேணும் விடயங்கள் அல்லாஹ்விடம் மிகவும் உன்னதமான விடயங்களாக காணப்படுகின்றன .இவற்றை மனிதர்களுக்கு செய்யும்
    சந்தர்ப்பம் கிடைத்தவர்கள் மிகவும் பாக்கியசாலிகள் .இந்தப்பாக்கியங்கள் மனிதர்களுக்கு கிடைத்து விடாமல் செய்வதற்கும் இதுபோன்ற பணிகளை இடைநிறுத்துவதட்கும் ஷைத்தான் தொடர்ந்தும் போராடிக்கொண்டே இருப்பான் .எமது முஸ்லிம் சகோதர அரசியல்வாதிகளின் பணிகள் தடைகளைத்தாண்டி வெற்றிபெற அல்லாஹ் அருள் பாளிப்பானாக .

    ReplyDelete
  2. ஒரு மணித்தியாலமும் 50 நிமிடங்களும் காத்தான்குடியில் பேசிய எமது மண்ணின் மைந்தன் ஹிஸ்புல்லாஹ், நாடாளுமன்றத்தில் எதுவுமே பேசாமல் குறட்டை விட்டுத் தூங்குவதுதான் எமக்கு கவலையளிக்கின்றது.

    இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கே காத்தான்குடி முஸ்லிம் சமூகம் தலைமை தாங்க வேண்டும். அதற்காகவே நான் அயராது பாடுபடுகின்றேன் என்று அவர் பேசியது அபாரம்!

    இதன் பின்னரும் கொழும்பில் உலமாககளும், புத்திஜீவிகளும், துறைசார் வல்லுநர்களும் சேர்ந்து கூட்டம் போட்டு தேசிய சூறா சபை அமைக்க முயற்சிப்பது வீண் வேலை. கைவிட்டு விட்டு காத்தான்குடி முஸ்லிம் சமூகத்தையே இலங்கை முஸ்லீம்கள் அனைவரும் தமது அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணக்கூடிய தலைமைத்துவமாக ஏற்றுக் கொள்ளலாம்.

    "நீதிபதியை மாற்றியும் நாங்கள் காரியங்களைச் சாதித்தவர்கள்" என்று அவர் இம்மேடையில் பகிரங்கமாகக் கூறியதானது, தற்போது மட்டக்களப்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பள்ளிவாசல் மையவாடிக் காணி ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கை விசாரித்து வரும் நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம். அப்துழ்ழாஹ் அவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

    அரசாங்கத்தின் பணம் ஒரு ரூபாவையும் நான் கொள்ளையடிக்கவில்லை என்று அவர் பேசியது எந்தளவு உண்மையோ எமக்குத் தெரியாது. ஆனால் செலிங்கோ ப்ரொபிட் செயாரிங் இஸ்லாமிய நிதிப் பிரிவு வங்கியில் இருந்து இவரது மனைவி றமீஸ் சஹாப்தீன் பல மில்லியன் ரூபாய்களை இவரது பிணையின் பேரில் கடன் எடுத்துக் கொண்டு இன்று வரை அதைத் திருப்பிச் செலுத்தாமல் இருப்பது மாத்திரம் ஊரும், உலகமும் அறிந்த உண்மை.

    மொத்தத்தில் காத்தான்குடியில் இவர் ஒருவர்தான் இறையச்சமுடைய தக்வாதாரி என்பது போலவும், நாளை மறுமை நாள் விசாரணைகளை நம்பியவர் போலவும் பேசி விளாசியது பலருக்கும் விசனத்தையே ஏற்படுத்தியது.

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  3. அன்பின் இஸ்லாமிய சகோதரர்களுக்கு
    அஸ்ஸலாமு அலைக்கும்
    அபிவிருத்தி என்ற பெயரில் மக்களின் சொத்துக்களை நஷ்டஈடு கொடுக்காமல் அபாகரித்தல், பள்ளிவாயல் சொத்துக்களை ,கானிகளை அவற்றின் அனுமதி இல்லாமல் அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி பலவந்தமாக ஆக்கிரமித்தல், காத்தான்குடி நகரசபைக்கு குப்பை கொட்டுவதற்காண காணி வாங்குவதற்கு கூட வக்கில்லாத அரசியல் அபிவிருத்தியாளர்கள் அதற்கான பணத்தை அன்றாடம் 500 ரூபாய் கூட வருமானம் இல்லாத ஏழைக்குடும்பங்கள் என்றும் பார்க்காமல் பணம் அறவிடுதல், மக்களின் அடிப்படை தேவையான குடும்ப வருமானம், ஆரோக்கியம், இடவசதிகளை அபிவிருத்தி செய்யாமல் ஊரை அழகு படுத்தல் மின்சாரசெலவுகளை அதிகரிக்கும் அபிவிருத்திகளை மேற்கொள்ளல் ஒற்று மொத்தமாக சொல்வதாயின் அதிகாரத்தை, பட்டம் பதவியை சமூகப் பொறுப்புக்களை துஷ்பிரயோகம் பண்ணுதல் போன்ற மக்களை ஏமாற்றும் விடயங்கள் அல்லாஹ்வின் கோபத்துக்கும் சாபத்துக்கும் உரிய விடயமாக காணப்படுகின்றன இவற்றை செய்பவர்கள் நஷ்டவாளிகள் இவ்வாறான ஷைத்தானுடைய செயல்களை விட்டு விலகி அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக்கோரி சமூகத்துக்கு தேவையான மக்களின் திருப்தியை பெறுகின்ற நிலையான அபிவிருத்திகளை செய்பவர்களாக மாறுபவர்களுக்கும் இந்த முஸ்லிம் சமூகத்துக்கும் அல்லாஹ் அருள் பாலிப்பானாக-

    ReplyDelete

Powered by Blogger.