Header Ads



சிங்களவர் தமது உரிமைக்காக சிந்தனை மூலம் போராட வேண்டும் - அமைச்சர் நவீன்

நுவரெலியா மாவட்டத்தில் சிங்கள பௌத்த மக்கள் தற்போது சிறுபான்மை இனமாக மாறியுள்ளனர். 60 வீதத்திற்கும் அதிகமாக இருப்பவர்கள் தமிழ் மக்கள். இது பாரிய பிரச்சினையாக உள்ளது என அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சிங்களவர்களிடம் இருந்து சென்று கொண்டிருக்கும் உரிமைக்காக பொல்லுகளினாலும் கற்களினாலும் போராட்டக் கூடாது. சிந்தனை மூலம் போராட வேண்டும். மேடைகளில் ஏறி கூடாத வார்த்தைகளால் திட்டி இதனை தீர்க்க முடியாது எனவும் அமைச்சர் கூறியுள்ளார். கொத்தமலையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அபிவிருத்தித் திட்டங்களின் போது அனைத்து மாவட்டங்களும் சரிசமான வகையில் அதனை செயற்படுத்த வேண்டும். நுவரெலியா மாவட்டம் என்பது அதிகளவான சிங்கள பௌத்த மக்கள் வாழ்ந்த மாவட்டமாகும். தற்போது 40 வீதமான சிங்கள மக்களே இருக்கின்றனர். தமிழ் சகோதர்கள் 57 வீதமானவர்கள் வாழ்கின்றனர்.

கொத்தமலை தொகுதியை எடுத்து கொண்டால்  தமிழர்கள் அதிகளவில் உள்ளனர். நுவரெலியா தொகுதியில் 75 வீதமானவர்கள் தமிழ் சகோதரர்கள். இந்த மாவட்டத்தில் நாளுக்கு நாள் சிங்கள பௌத்த மக்கள் குறைந்து வருகின்றனர் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார

1 comment:

  1. Minorities enter paradise naturally while the majority trusts
    third party may be one of few deadly causes Alcohol,
    smoking and birth control can be some of them.Trying to
    make politics out of the issue is not the way forward.
    Devising a strategy to live with the prevailing development
    is the way forward.This politics is so bankrupt that they
    have started to talk about the functioning people's
    private parts! .

    ReplyDelete

Powered by Blogger.