Header Ads



மாணவன் நீரில் மூழ்கி வபாத் - அதிபர், ஆசிரியர்களை கண்டித்த நீதிபதி


(அனா)

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகனேரி – பொத்தானை ஆற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவன் தொடர்பிலான வழக்கு விசாரனைகள் எதிர்வரும் ஜூலை மாதம்  03ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை – பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தைச் சேர்ந்த 15 மாணவர்கள் அடங்கிய குழுவினருடன் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் இருவரும் வாகனேரி பொத்தானைப் பகுதிக்கு கடந்த வெள்ளிக் கிழமை (24.05.2013) சென்றிருந்தனர்.

பொத்தானைக்குச் சென்ற மாணவர்கள் ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் வேளையில் மேற்படி பாடசாலையில் தரம் 09ல் கல்வி கற்று வந்த பதுர்தீன் பாயிஸ் (வயது – 14) என்றழைக்கப்படும் மாணவன் நீரிழ் மூழ்கி உயிரிழந்தார்.

இச் சம்பவம் தொடர்பில் விசாரனைகளை மேற்கொண்ட வாழைச்சேனை பொலிஸார் பாடசாலை அதிபரையும் இரண்டு ஆசிரியர்களையும் விசாரனைக்கு உட்படுத்தியதோடு இவர்களை வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் அஜர் படுத்தியிருந்தனர்.

இதற்கினங்க இவர்கள் தொடர்பான விசாரனைகள் ஒத்திவைக்கப்பட்டு நேற்று (29.05.2013) மீண்டும் வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதி மன்ற நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட வேளையில் குறித்த அதிபர் மற்றும் ஆசிரியர்களின் நடவடிக்கைகளை கண்டித்த நீதிபதி கல்வித் திணைக்களத்தின் சட்ட திட்டங்களுக்கமைய கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என்று எச்சரித்து இவ் விசாரனைகளை எதிர் வரும் ஜூலை மாதம் 03ம் திகதிக்கு மீண்டும் ஒத்தி வைத்துள்ளார்.

மேற்படி சம்பவத்தில் நிரில் மூழ்கி உயிர் இழந்த மாணவன் வாழைச்சேனை கோழிக்கடை வீதியைச் சேர்ந்த எம்.பதுர்தீன் தம்பதிகளின் இரண்டாவது மகனாவார்.

  


No comments

Powered by Blogger.