யாழ் கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளன கூட்டம், புதிய நிர்வாகிகளும் தெரிவு (படங்கள்)
(பாறூக் சிகான்)
யாழ் கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனத்தின் மாதந்த கூட்டம் இன்று சனிக்கிழமை (25..5.2013) தலைவர் கே.எம் நிலாம் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் உப செயலாளர் அஸ்மீன் அய்யூப் ஆன்மிக உரையாற்றினார்..இதனை தொடர்ந்து வாதப்பிரதிவாதங்கள் அங்கத்தவர்களிடையே ஏற்பட்டது.இதன் பின் சம்மேளனத்தின் புதிய நிர்வாகத் தெரிவும் இடம்பெற்றது. அதில் புதிய சம்மேளனத்தலைவராக எம் ஜமால்,உபதலைவராக எம்.ஹஸான்,செயலாளராக எம்.சுவர்ஹான்,உபசெயலாளராக எம்.எல் லாபீர்,பொருளாளராக சுபூஹானும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு 45 அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய விடயங்கள் தொடர்பாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கலந்துரையாடினர். இறுதியாக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் கே.எம் நிலாம் அங்கத்தவர்களால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.




Post a Comment