Header Ads



'மாடு வெட்டுதல்' ஜனாதிபதி மஹிந்தவுக்கு முஸ்லிம் சகோதரரின் பகிரங்க கடிதம்..!

(நவாஸ்)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு!

முதலில் அன்மையில் பசுமாடு வெட்டப்படுவதை தடைசெய்யுமாரும், மதமாற்றம் செய்யப்படுவதைனை தடைசெய்யுமாறும் வேண்டி தன்னைத் தானே தீக்குழைத்துக் கொண்ட அந்த தேரருக்கு ஆண்டவனின் ஆசிர்வாதம் கிடைக்கட்டுமாக! எங்களது தலைவர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பிறந்த நாடு அரபு நாடு என்பதனை தாங்கள் அறிந்ததே. அந்தப் பிரதேசத்தில் வாழுகின்ற மக்கள் மரக்கறி வகைகளை பெற்றுக் கொள்வது சிரமமான ஒரு விடயம். ஆதலால் அந்தப் பிரதேசத்திலுள்ள மக்கள் தனது பசியினை போக்க அதிகமாக மாமிசத்தினைத்தான் சாப்பிடக் கூடியவர்களாக இருந்தார்கள். அப்படியிருந்தும் எங்களது தலைவர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மாமிசம் சாப்பிட்டது மிகவும் குறைவாகத்தான் உள்ளது என்பதனை வரலாறு சன்று பகர்கின்றது. அதிலும் மாட்டிறைச்சி அவர்கள் சாப்பிட்டது கிடையாது. 

எனவே முஸ்லிம்களாகிய நாம் மாட்டிறைச்சினையோ, அல்லது வேறு மிருகங்களின் மாமிசம்களையோ கட்டாயம் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும் என எங்களது இஸ்லாமிய மார்க்கம் முஸ்லிம்களை கட்டாயப்படுத்தவில்லை. மாடு அறுக்கப்படுவதனை தடைசெய்வதில்தான் இந்நாட்டில் முஸ்லிம், பௌத்த இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வென்றிருந்தால் அதனை தாராளமாக நாட்டு சட்டம் என்ற அடிப்படையில் இந்நாட்டில் மிருகங்கள் அறுக்கப்படுவது மேலும் மாமிசங்கள் ஏற்றுமதி இறக்குமதி செய்யப்டுவது அனைத்தையுமே தடைசெய்யுங்கள். அதில் எவ்வித முரன்பாடான கருத்துகள் எதுவும் முஸ்லிம்களாகிய எம்மத்தியில் கிடையாது. 

ஆனால் மாமிச வியாபாரம் செய்யக் கூடியவர்களுக்கு பாரிய அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட வாய்ப்பிருப்பதனால் அவர்களுக்கு மாற்றுவழிகளை காண்பிக்கும்வகையில் அவர்களுடன் ஒரு கலந்துரையாடலை செய்து கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றேன்.

ஜனாதிபதி அவர்களே..!

நாட்டில் இனரீதியிலான பிரச்சிணைகளை உண்டுபன்ன முயற்ச்சி செய்து கொண்டிருக்கும் சிலர்களின் நடவடிக்கைகளை கண்டும் மௌனமாக இருக்கின்றீர்களே ஆண்டவன் உங்களது இந்த மௌனத்திற்கு தன்டனை அளிப்பதற்க்கு போதுமானவன். எனவே தங்களது மௌனத்தை கலைந்து கூடிய சீர்கிரம் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வினையை பெற்றுத்தருமாறு தயவாய் வேண்டிக்கொள்கின்றேன்.

தாங்கள் இன்று ஆட்சி செய்துகொண்டிருக்கின்றீர்கள். நாளை உங்களது கையிலிருந்து விலகி இன்னொருவரிடம் இந்த ஆட்ச்சி சென்றுவிடும். எனவே தாங்கள் இன்று சந்தோசமாக இருக்கலாம். நாளை தங்களது பரம்பரையும் தங்களது கட்சிக்காரர்களின் பரம்பரையும் இந்நாட்டில் சந்தோசமாக வாழ வேண்டி இருக்கின்றது. ஆதலால் தாங்கள் சென்றதன் பின் தங்களது பரம்பரையின் ஆசிர்வாதம் தங்களுக்கு கிடைக்கவேண்டுமென்றிருந்தால் இந்நாட்டை சர்வதிகாரத்தின் மூலம் அழிவின்பக்கமும் கடன்தொல்லையின் பக்கமும் கொண்டு செல்வதனை நிருத்திவிட்டு இந்நாட்டை அபிவிருத்தியின் பக்கம் கொண்டு சென்று ஆண்டவனின் சாபத்திலிருந்து தாங்களை பாதுகாத்துக் கொண்டு தங்களது பரம்பரையின் ஆசிர்வாதத்தையும் நாட்டு மக்களின் ஆசிர்வாதததினையையும் பெற்றுக்கொள்வீர்களாக என அன்பாய் வேண்டிக்கொள்கின்றேன்.  


14 comments:

  1. நல்ல கடிதம்
    good luck

    ReplyDelete
  2. You are complaining and asking for refuge from the person, who is behind all these nasty work. Don’t you know this?

    ReplyDelete
  3. U a absolutely correct. Muslum makkalin porulaathaaraththau addaam kaana vaippathil thaan inap pirachchanaik kaana ore vali enru neenka janathipathi unarthaal athai inre seiyunkal enru challenge panniyavar kalai pol muslim thalamaikalum niyaayamaana vaarthaikalai velip paduththi muslim makkalin meethu eriyap padum veechchai naadri amaikka vendum enru vendik kolkinrom.

    ReplyDelete
  4. உங்களால் எப்படி குப்பார்களுக்காக அல்லாஹ்விடம் துஆ கேட்க முடிந்தது.அவர்கள் வழி கெட்டவர்கள்

    ReplyDelete
  5. சகோதரர் நவாஸ் அவர்களின் தைரியத்தை பாராட்டவேண்டும் அதே நேரம் உங்கள் சொந்த கருத்தை முழு முஸ்லீம்களுடைய கருத்தாக எப்படி சொல்வீர்கள் இங்கு அறுப்பதற்குத்தான் தடை ஆனா அவர்கள் எங்காவது ஒரு நாட்டிலிருந்து யாராவது ஒரு பினாமி மூலம் இறக்குமதி செய்து கொடுப்பார்கள் அப்போ ஐஸ் மாமிசம் சாப்பிடுவீர்களோ முஸ்லீம்களுடைய அளவை விடவும் அவர்கள்தான் அதிகம் மாமிசம் சாப்பிடுகிறார்கள் எல்லா பொலிஸ் நிலையங்களிலும் இரானுவ முகாமிலும் அதுதான் சாப்பிடப்படுகிறது நாம் அவசரப்பட்டு ஏன் முந்திக்கொள்ளனும்? wait and see.

    ReplyDelete
  6. Hi My dear Brothers,

    I agree with the openion of Br.Abdul Cader, we do not have any authority or rights to give statements behalf of the muslim community or to represents muslims.

    Pls lets try to avoide such situations.

    jazakumullah.

    ReplyDelete
  7. Bullshit, who gave the rights to write on behalf of muslim to Mr.Nawas, what about ulhiya,aqeeka,kurbaan, shut your hole which makes words....now a days everyone try to become HERO due to this non responsive media..

    ReplyDelete
  8. இந்த நவாஸ் யார். இவர் படித்த இஸ்லாத்தை இவரோடும், இவர் குடும்பத்தோடும் வைத்துக்கொள்ளலாமே. இவர் எப்படி தனது தனிப்பட்ட கருத்தைத் திணிப்பதற்காக ஒட்டு மொத்த முஸ்லிம்களின் கருத்தெனப் பீற்றியிருக்கிறார்? இஸ்லாத்தைத் தெரியமல் கண்டவன் கடியவனெல்லாம் இஸ்லாம் பேசும் காலமா இது? முதலாவதாக அல்குர்ஆனையும், ரஸூலுள்ளாஹ்வின் வாழ்க்கை வரலாற்றைப் படித்துப் பார்க்கட்டும்.
    ஸைனப் பின்துல் ஹாரிஸ் எனும் யூதப் பெண் ரஸுலுள்ளாஹ் விருப்பமாக சாப்பிடும் இறைச்சியில் நஞ்சைக் கலந்து கொடுத்து அதை வாயில் வைத்து மென்றார்களே.
    ரஸுலுள்ளாஹ்வும், அபூபக்ர், உமர் (ரழி) ஆகியோரும் கடும் பசியோடு நபித்தோழர் அபுல் ஹைஸம் வீட்டுக்குச் சென்றபோது அவர் ஒரு ஆட்டைத்தானே அறுத்து விருந்தளித்தார்.
    ஆயிஷா (ரழி) சொல்கிறார்கள். ஹஜ்ஜுக்காகச் சென்ற சமயம் 10 ஆம் நாள் மாட்டிறைச்சி கொண்டுவரப்பட்டது. நான் இது என்ன? என வினவியதற்கு ''ரஸுலுள்ளாஹ் தங்கள் மனைவியருக்காக அறுத்தது'' என்று கூறப்பட்டது. (புகாரி, முஸ்லிம்)
    ஜாபிர் (ரழி) அவர்கள் கூறுகின்றனர் ''ரஸுலுள்ளாஹ் மதீனாவுக்குச் சென்றபோது ஓர் மாட்டைக் கொண்டு வருமாறு கூறி, அதனை அறுத்து நபித்தோழர்களோடு சேர்ந்து சாப்பிட்டார்கள்'' (புகாரி)
    அல்லாஹ் அல்குர்ஆனில்:
    (நபியே!) நீர் கூறும்: 'அல்லாஹ் உங்களுக்கு இறக்கி வைத்த ஆகாரங்களை நீங்கள் கவனித்தீர்களா? அவற்றில் சிலவற்றை ஹராமாகவும், சிலவற்றை ஹலாலாகவும் நீங்களே ஆக்கிக் கொள்கிறீர்கள்; (இப்படித் தீர்மானித்துக் கொள்ள) அல்லாஹ் உங்களுக்கு அனுமதி அளித்துள்ளானா? அல்லது அல்லாஹ்வின் மீது நீங்கள் பொய்க் கற்பனை செய்கின்றீர்களா?'(10:59)
    உங்கள் நாவுகள் (சில பிராணிகள் பற்றி) பொய்யாக வர்ணிப்பது போல் “இது ஹலாலானது, இது ஹராமானது” என்று அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டாதீர்கள் – நிச்சயமாக, எவர் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுகிறார்களோ அவர்கள் வெற்றியடைய மாட்டார்கள்.(16:116)
    ரஸுலுள்ளாஹ் அனுமதிக்கப்பட்ட பிராணிகளை அறுத்துள்ளார்கள், புசித்துள்ளார்கள், அன்பளிப்புச் செய்துள்ளார்கள்.
    எனவே எதிர் விபரீதங்களைத் தெரியாமல் ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதி சமூகத்துக்கு துரோகம் இழைக்காதீர்.
    (இன்னும் ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன. விரிவஞ்சி சுருக்கிக்கொண்டேன்.)
    அன்றும், இன்றும் ஸவுதி அரேபியாவில் பாலைவனப்பகுதிகளில் மாட்டை விட ஆட்டையும், ஒட்டகத்தையும் வளர்ப்பதே அதிகம்.

    மூளை கெட்டவர்களுக்கு புரியாதா?
    இன்று மாட்டுக்குத் தடை. நாளை ஆட்டுக்குத் தடையென்று.

    ReplyDelete
  9. மிஸ்டர் நவாஸ். ரஸுலுள்ளாஹ் மாட்டிறைச்சி சாப்பிடவே இல்லையா? ஒரு மௌலவியிடம் பின்வரும் ஹதீஸ்களுக்கு கருத்துக் கேளுங்கள்.
    وَعَنْ مُحَارِبٍ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ اشْتَرَى مِنِّي النَّبِيُّ صلى الله عليه وسلم بَعِيراً بِوَقِيَّتَيْنِ وَدِرْهَمٍ أَوْ دِرْهَمَيْنِ ، فَلَمَّا قَدِمَ صِرَاراً _ المدينة _ أَمَرَ بِبَقَرَةٍ فَذُبِحَتْ فَأَكَلُوا مِنْهَا ، فَلَمَّا قَدِمَ الْمَدِينَةَ أَمَرَنِي أَنْ آتِيَ الْمَسْجِدَ فَأُصَلِّيَ رَكْعَتَيْنِ ، وَوَزَنَ لِي ثَمَنَ الْبَعِيرِ ' ஜ رواه البخاري ஸ
    وَعَنْ عَائِشَةَ رضي الله عنها قالت : أُتِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِلَحْمِ بَقَرٍ ، فَقِيلَ : هَذَا مَا تُصُدِّقَ بِهِ عَلَى بَرِيرَةَ ، فَقَالَ : ' هُوَ لَهَا صَدَقَةٌ وَلَنَا هَدِيَّةٌ ' ஜ رواه مسلم ஸ .
    لأن النبي صلى الله عليه وسلم وآل بيته لا يأكلون الصدقة ، لأنها أوساخ الناس ، ولكنه يقبل الهدية .
    முஸ்லிம் மார்க்கம் உயிர் பிராணிகளை அறுத்து மாமிசம் சாப்பிடுமாறு கட்டாயப்படுத்தவில்லை என்று எழுதியுள்ளீர்களே. ஓகே. சோறு, பருப்பு, கிழங்கு, மீன், முட்டை,பாண், இடியப்பம், கேக், பிஸ்கட், வாழைப்பழம்,,,,, என ஒவ்வொரு நாளும் விழுங்கி விழுங்கி ஏப்பம் விட்றீங்களே! அதெல்லாம் திண்ணச்சொல்லி இஸ்லாம் கட்டாயப் படுத்தியதற்காகவா திண்ணுகிறீங்க. மாங்காய் மடையனைப் போன்றல்லவா இஸ்லாம் பற்றி எழுதியுள்ளீர்கள். உங்களைப் போன்ற அறிவுகெட்ட முட்டாள்தனமான கருத்துகளை இஸ்லாம் என்ற பெயரில் கட்டவிழ்ப்பதால் முஸ்லிம்களுக்கே கேவலம் மிஸ்டர் நவாஸ்.

    ReplyDelete
  10. ஸூரா பகராவின் 161 வது வசனத்தில் ''யார் இறைவன் அல்லாஹ்வை மறுத்து, காபிரான நிலையிலேயே மரணித்தார்களோ அவர்கள் மீது அல்லாஹ்வினதும், வானவர்களினதும், அனைத்து மனிதர்களினதும் சாபம் உண்டாவதாக. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பர்'' என இறைவன் தெளிவாகவே குpப்பிட்டிருக்க இந்த நவாஸோ இவருக்கு ஆண்டவனின் ஆசிர்வாதம் கிடைக்கப் பிரார்த்திக்கிறார். இறைவா! தெரிந்தது கை மண்ணளவாக இருந்தும் மலையளவு தெரிந்தவனைப் போன்று உலறும் முஸ்லிம் பெயர்தாங்கிகளுக்கு நேர்வழிகாட்டுவாயாக.

    ReplyDelete
  11. ஏன் சித்தீக்.. அதை நீங்கள் செய்யலாம்தானே...அடுத்தவர்களை குறைகான்பதை மட்டுமே இலக்காக கொள்ளாமல் அவரால் இயன்றதை அவர் செய்துள்ளார் ..ஏன் நீங்கள் மற்றும் நான் உட்பட அநேகம் பேர் எதுவுமே செய்யாது இருந்துவிட்டு ஏதோ ஒன்றையாவது கறைகூறி தடுப்பதை விட அதை விட பல மடங்கு விடயங்களை சுட்டிக்காட்டி பல நபர்களை இனைத்து பல கடிதங்களை அனுப்புங்கள் மாறாக பேஸ் புக் வீரமோ அல்லது பின்னுாட்டல் வீரமோ மட்டும் போதுமானதல்ல...

    ReplyDelete
  12. அந்நியவர்கள் நினைக்கின்றார்கள் முஸ்லிம்களுக்கு இறைச்சி சாப்பிடுவது கட்டாயமான ஒரு விடயம் என்பதாக ஏனென்றால் நான் ஒரு அந்நிய வைத்தியரிடம் சென்ற சமயம் தங்களது மார்க்கத்தில் இறைச்சி சாப்பிட வேண்டுமென்று இருக்கலாம் என்றாலும் இந்த நோய்க்காக வேண்டி சாப்பிட வேண்டாம் தவிhந்து கொள்ளுங்கள் என்பதாக. எனவே எனத நோக்கம் மாட்டிறைச்சி சாப்பிடுவது முஸ்லிம்களுக்கு கட்டாயமான ஒரு விடயம் இல்லை என்பதைனை சொல்வதுதான்.
    எனது தவருகளை சுட்டிக்காட்டி மாட்டிறைச்சி சம்பந்தமான தகவல்களை தந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் எனது பிழைகளுக்கு வருந்துகிறேன். அல்லாஹ்விடம் பாவமன்னிப்பும் வேண்டுகிறேன்.

    ReplyDelete
  13. இரண்டு நாளா மாமிசம் இல்லாத இலங்கையில் மரக்கறியின் விலை டபிள் . ஒரு மாசம் ஆக்கியிருந்தால் தெரிந்திருக்கும் .மனிதன் எல்லாவற்றையும் சாப்பிட்டால் தான் எல்லோருமாக உயர் வாழலாமென்று .

    ReplyDelete
  14. பலரும் பலவிதமாக எழுதுவார்கள். பிழைகளைச் சுட்டிக் காட்டினால் ஏற்க மறுப்பார்கள். ஆனாலும் சகோதரர் நவாஸ் அவசரப்பட்டு கடிதம் எழுதினாலும், பிழைகளைச் சுட்டிக்காட்டியபோது மனமுவந்து தம் குற்றத்தை ஏற்றிருப்பது அவரின் நற்பண்புக்கு அடையாளமாகும். அல்லாஹ் அவரின் தவறை மன்னிப்பானாக. தனது கருத்துத் தவறானது என்று அவர் ஜனாதிபதிக்கும் ஒரு கடிதம் எழுதினால் சிறந்தது.

    ReplyDelete

Powered by Blogger.