முஸ்லிம் மீடியா போரத்தின் செயலமர்வு இடைநடுவில் நிறுத்தப்பட்டது
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் இலங்கையிலுள்ள அமெரிக்கா தூதுவராலயத்தின் அனுசரணையுடன் கிழக்கு மாகாணத்திலுள்ள சமூக ஊடங்களில் பணிபுரியும் ஊடகவியலாளர்களுக்கான 'சமூக ஊடகங்களின் பாதிப்பு' எனும் தலைப்பிலான இரண்டு நாள் செயலமர்வு கடந்த சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் மட்டக்களப்பு காத்தான்குடியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் நடைபெற்றது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இறுதிநாள் நிகழ்வில் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் மற்றும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் பங்குபற்றி செயலமர்வில் கலந்துகொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்குவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதாவது மாலை நேரம் வரை நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இருந்தபோதும் மதிய நேரத்துடன் செயலமர்வு இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து எமது இணையத்திற்கு கிடைத்த தகவல்கள் வருமாறு,
குறித்த செயலமர்வுக்கு அமெரிக்கா அனுசரணை வழங்கியமையால் சிலருக்கு சந்தேகம் பீடித்துள்ளது. இதனை பாதுகாப்பு உயர் தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இந்நிலையில் பிரதேச அரசியல்வாதிகளுக்கும் நிகழ்வில் பங்கேற்க வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாடு செய்த செயலமர்வு இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனை முஸ்லிம் முஸ்லிம் மீடியா போரத்தின் முக்கியஸ்தர் ஒருவர் எம்மிடம் உறுதிப்படுத்தினார்.

Post a Comment