Header Ads



மியன்மாரில் கையில் கம்புகளுடன் முஸ்லிம்களை தேடியலையும் பௌத்த தீவிரவாதிகள்


மியான்மரின் கிழக்குப் பகுதியில், நேற்று இரண்டாவது நாளாக இனக்கலவரங்களினால் பாதிக்கப்பட்ட மக்கள், பாதுகாப்பை அதிகரிக்கக்கோரி, அரசிடம் முறையிட்டுள்ளனர். அங்குள்ள அனாதை இல்லம், மசூதி மற்றும் சில கடைகள், பௌத்த தீவிரவாதிகளால்  நேற்று தீயிடப்பட்டன. இக்கலவரங்களுக்குப்பின், மக்களை அமைதி காக்குமாறு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

 வன்முறையாளர் கும்பல் கையில் கம்புகளுடன், ஷேன் மாகாணத்தில் உள்ள லஷியோ நகரில் சுற்றிக்கொண்டிருப்பதாக மக்கள் பத்திரிகையாளர்களிடம் குறிப்பிட்டுள்ளனர். இரண்டு வீடுகள் எரிந்து கொண்டிருப்பதை அவர்களும் நேரில் பார்த்துள்ளனர். மருத்துவமனையில் நான்கு பேர் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டதாகவும், ஆனால் உயிருக்கு ஆபத்து ஒன்றுமில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 ஆயினும், 30 பேருக்கும் மேற்பட்ட கும்பல் ஒன்று, முஸ்லிம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிக்கொண்டு மோட்டார் சைக்கிள்களில் சுற்றிக்கொண்டிருந்ததால், புதன் மாலை வரை அந்தப் பகுதியில் இறுக்கமான சூழ்நிலை காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

2 comments:

  1. What about their food and other needs. They do not go to work. Killing is their duties

    ReplyDelete
  2. allah give power of the world in to muslim hand. but they are sleeping for what, they begging from westerners, why, if this arab world consider this matter as a serius issue, and if they send forces to help to that people, all western country will active very quickly, because they don't want muslim world to wake up, our umma so weak,make dua for this people, may allah give strenth those who suffer from this monks and animals.

    ReplyDelete

Powered by Blogger.