மூதூர் பிரதேச செயலகத்தில் புகைத்தல், போதை எதிர்ப்பு கொடி விற்பனை
(எஸ்.எச்.அமீர்)
சர்வதேச புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்புத்தினத்தை முன்னிட்டு மூதூர் பிரதேச செயலகத்தில் கொடி விற்பனை செயற்பாடு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
சர்வதேச புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்பு சம்பந்தமான முதலாவது கொடியை மூதூர் பிரதேச செயலாளர் என். பிரதீபனுக்கு தலைமையக சமூர்த்தி முகாமையாளர் எம்.எம்.றஸீன் அணிவித்தார்.
இந்நிகழ்வில் சமூர்த்தி மகா சங்கத் தலைவர் எம்.அபூபக்கர், சமூர்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ். மஜுத், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


இன்று சமூகத்தில் பரவியிருக்கும் சிகரட் பாவனையை முற்றாகத் தடை செய்யும் முயற்சியாக முதன் முதலாக முஸ்லிம் கடைகளில் விற்பனையைத் தவிர்க்க நடவடிக்கை எடுத்தால் சாலச் சிறந்தது.
ReplyDelete