'தேசிய நல்லிணக்கத்தை கட்டி எழுப்புவது இலகுவான விடயம் அல்ல'
(நுஜி)
யுத்ததிற்கு பின்னர் இலங்கை பெற்ற அனுபவம் ஜேர்மனுக்கு ஒப்பானது- ஜெர்மனின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தூதுவர் கலாநிதி ஜார்கான் மோர்ஹாட் தெரிவிப்பு
சமுக நல்லிணக்கம் மற்றும் தேசிய கொள்கைகள் தொடர்பான கலந்துரையாடல் தொடரின் அன்குரார்பன நிகழ்வின் கடந்த வாரம் கொழும்பில்இடம் பெற்றது, இந்நிகழ்வை தேசிய மொழிகள் மற்றும் நல்லிணக்க அமைச்சு,லக்ஸ்மண் கதிகாமர்-சர்வதேச தொடர்புகள் மற்றும் கற்கை நிலையம்,ஜேர்மன் ஒத்துழைப்பு தொடர்பான கூட்டமைப்பு ஆகியன இனைந்து ஏறபாடு செய்திருந்தது. இதன் போது சிறப்புரை ஆற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
மொழிக்கல்வி உள்ளிட்ட நல்லிணக்கவேலை திட்டங்கள் ஊடாக இலங்கைக்கு உரிய இலக்கினை இலகுவில் எட்ட முடியும் என எதிர்வு கூறிய அவர், யுதத்திற்கு பின்னர் தேசிய நல்லிணக்கத்தை கட்டி எழுப்புவது இலகுவான விடயம் அல்ல எனவும் தெரிவித்தார்
இலங்கையின் மீள் நல்லிணக்கத்தை ஜேர்மனிய அனுபவத்துடன் ஒப்பிட்டு பேசிய தூதுவர் இரண்டாம் உலகப்போரின் பின்பு ஜேர்மனானது மேர்லின் சுவரினால் கிழக்கு மற்றும் மேற்கு ஜேர்மன் என பிளவு பட்டது. எது எவ்வாறு இருப்பினும் கால ஓட்டத்தில்1990ஆம் ஆண்டுஅக்டோபர் 3ம் திகதி மக்களின் தலையீட்ட்டால் இச்சுவர் இடிக்கபட்டது
அதனை தொடர்ந்துபல ஆண்டுகளாக துண்டிக்கப்பட்டிருந்தஇரு பிரதேசங்களினதும் அபிவிருத்தியை ஒரு நிலைக்கு முன்னெடுப்பது ஜேர்மனுக்கு பாரிய சவாலாக இருந்தது,மக்களின்தேவைகளுக்கும் கருத்துக்களுக்கும்நெருக்கமாக வேண்டிய தேவை அன்று காணப்பட்டது.
இவை அனைத்துக்கும் மத்தியில் சர்வதேச போர்க்குற்றம்,மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு, சனநாயகம் இன்மை போன்ற இதர குற்றச்சாட்டுகளும் ஜேர்மண் மீது சுமத்தபட்டது, இன்று இலங்கை இவ்வாறான ஒரு நிலையினையே எதிர் கொண்டுள்ளது. இதனை இலங்கை வெற்றிகரமாக எதிர்கொள்ள மொழிக்கொள்கை நேரடியாக பங்களிப்பு செய்யும் என தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.
இன்நிகழ்வில் தேசிய மொழிகள் மற்றும் சமுக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, வெளி விவகார அமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸ் மற்றும் கதிர்காமர் நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் திரு.அசங்க அபயகுணசேகர ஆகியோரும் கலந்துகொண்டனர்



Post a Comment