Header Ads



தற்கொலை செய்த பௌத்த தேரரின் உடலைகேட்டு சிங்கள ராவய ஆர்ப்பாட்டம் - இறுதிகிரிகை நாளை

மிருக வதைக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்கொலை செய்துக் கொண்ட சிங்கள ராவய அமைப்பின் ஹம்பாந்தோட்டை மாவட்ட தலைவர் போவத்தே இன்தரதன்ன தேரரின் பூதவுடல் காவற்துறையினரால் கஹவத்தைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

கொழும்பு தேசிய வைத்திய சாலையில் வைக்கப்பட்டிருந்த அவரது சடலும், சிங்கள ராவய அமைப்பினருக்கு தெரியாமல் எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து சிங்கள ராவய அமைப்பின் உறுப்பினர்கள் பொரலை பகுதியில் உள்ள மலர்சாலை ஒன்றுக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிக்குவின் பூதவுடலை பொறுப்பேற்க சென்ற தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். அத்துடன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அலரிமாளிகை நோக்கி பாதயாத்திரை ஒன்றையும் மேற்கொண்டனர். 

இதேவேளை தற்கொலை செய்துக் கொண்ட பிக்குவின் இறுதிகிரிகைகள் நாளையதினம் நடைபெறவுள்ளன. sfm

1 comment:

  1. மிருக வதையை எதிர்த்து தற்கொலை செய்துகொண்ட போவத்தே இன்தரதன்ன பௌத்த தேரரின் மரணத்திற்காக எனது அனுதாபத்தைத் தெரிவிக்கின்றேன்.
    நாய் அசுத்தமான ஓர் பிராணியாக இருந்தும் அதை அநியாயமாக அடிப்பது, உணவளிக்காமல் கட்டி வைப்பது, கொல்வது போன்ற தீங்குகள் யாவும் இஸ்லாத்தில் ஹராம் என்பதிலிருந்து மிருக வதையை இஸ்லாம் வண்மையாகக் கண்டிக்கிறது என்பதைப் புரியலாம். இறைச்சிக்காக அறுக்கும் மாட்டை அறுப்பதற்கு பல்வேறு சட்டங்களைக் கட்டாயப்படுத்தி அதனை வதை செய்வதிலிருந்து தடுத்திருக்கிறது இஸ்லாம் . கூர்மையான கத்தியால் அறுக்க வேண்டும், அறுக்கப்படும் பிராணி பார்த்திருக்க கத்தியைக் கூராக்கக் கூடாது, உயிர் பிரியும் வரை தோலை உறிக்கக்கூடாது. கழிவுகளை கண்ட கண்ட இடங்களில் எறிந்து மற்றவருக்கு தொந்தரவு கொடுக்கக் கூடாது போன்றவை இஸ்லாம் போதிக்கும் சட்டங்கள் என்பது எத்தனை பேர்களுக்குத் தெரியும்?

    ReplyDelete

Powered by Blogger.