Header Ads



அக்கரைப்பற்று கல்வி வலயம் சாதனை


(எஸ்.எல். மன்சூர்)


கிழக்கு மாகாணத் தமிழ்த்தினப் போட்டிகளில் அக்கரைப்பற்று கல்வி வலயம் சாதனை

2013ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண மட்டத்தில் கடந்த 2013.05.19ஆந்திகதி மூதூர் சேனையூர் மத்திய கல்லூரியில் கிழக்கு மாகணக் கல்விப் பணிப்பாளர் என்.ரீ.எம். நிஸாம் தலைமையில் நடைபெற்றபோது அக்கரைப்பற்று கல்வி வலயத்தின்சார்பாக கலந்து கொண்ட மாணவர்கள் அங்கு நடைபெற்ற போட்டிகளில் வெற்றியீட்டி தேசிய மட்டத்திற்குத் தெரிவாகி சாதனை நிலை நாட்டியுள்ளதாக அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் தமிழ்ப் பாடத்திற்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.எம். ஹனீபா தெரிவித்துள்ளார்.

கல்முனைக் கல்வி மாவட்டத்தின் சார்பாக அக்கரைப்பற்று கல்வி வலயத்திலிருந்து கட்டுரையாக்கம், பிரிவு – 1, கட்டுரைவரைதல் இலக்கியம் நயத்தல் பிரிவு – 4, சிறுகதையாக்கம் பிரிவு – 4, பேச்சுப்போட்டி பிரிவு – 1, 2, ஆக்கத்திறன் வெளிப்பாடு கதைகூறல் பிரிவு – 1, முஸ்லீம் நிகழ்ச்சி – நாட்டார்பாடல், விவாதப் போட்டி (இரண்டாமிடம்) ஆகிய போட்டிகளில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைத்துப் போட்டிகளிலும் முதலாம் இடத்தைப் பெற்று அக்கரைப்பற்று வலயத்திற்கு பெருமை சேர்த்திருக்கின்றார்கள் எனவும், இந்த மாணவர்களை தயார்படுத்தி ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசர்கள் ஆகியோருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.எம். ஹனீபா கூறினார்.

1 comment:

  1. அக்கரைப் பற்றைப் போல் மற்றய முஸ்லிம் கல்வி வலயங்களும் சாதனை படைக்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.